Published:Updated:

“ஒரு பிரெஞ்ச் நாவல், ஹீரோ பிரசன்னா, ஹீரோயின் ஆன்ட்ரியா!” ‘விடியும் முன்’ இயக்குநரின் அடுத்த படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஒரு பிரெஞ்ச் நாவல், ஹீரோ பிரசன்னா, ஹீரோயின் ஆன்ட்ரியா!” ‘விடியும் முன்’ இயக்குநரின் அடுத்த படம்
“ஒரு பிரெஞ்ச் நாவல், ஹீரோ பிரசன்னா, ஹீரோயின் ஆன்ட்ரியா!” ‘விடியும் முன்’ இயக்குநரின் அடுத்த படம்

`விடியும் முன்' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி குமார், இப்போது தன் அடுத்த படைப்பைப் பற்றி அறிவித்திருக்கிறார்.

நடிகை பூஜா நடித்து 2013 ம் ஆண்டு வெளிவந்த படம் `விடியும் முன்'. அது விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற வரவேற்பைப் பெற்றாலும் வணிக ரீதியாகப் பெரிய அளவில் சென்றுசேரவில்லை. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி குமார் இப்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தேன். அவர் தன் அடுத்த படத்தை இயக்கும் வேலைகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிந்தது. `விடியும் முன்’ படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இவ்வளவு இடைவெளி ஏன் என்பது குறித்தும் தன் அடுத்த படம் குறித்தும் பேசினார் பாலாஜி குமார். அவரின் பேட்டியிலிருந்து...

``நான்  நினைக்கிறதை படமா எடுக்க முடியுமா? மக்கள் மனசைப் புரிஞ்சு நல்ல படம் கொடுக்க முடியுமா என்பதற்கான ஒரு பரீட்சையாதான் `விடியும் முன்' படத்தை பார்த்தேன். படம் வெளி வந்து கொஞ்ச நாள்கள்லேயே நிறைய தயாரிப்பாளர்கள் அடுத்து என்ன பண்ணப்போறீங்க?னு கேட்டாங்க. ஆனா, அவசரஅவசரமா ஒரு கதை எழுதி படம் பண்ண எனக்குப் பிடிக்காது. அப்படி பண்ணினாலும் நல்லா வராது. டைம் எடுத்தாலும் பரவாயில்லை, நல்ல படமா கொடுக்கணும் என்பது மட்டும்தான் என் இலக்கா இருந்தது. நான் ஒரு கதை எழுதினால் முப்பது டிராஃப்ட் வரை போகும். மூணு ஸ்கிரிப்டை எழுதி முடிச்சிருக்கேன். அதில் முதல்ல பண்ணும் கதைக்கு டயலாக், கேரக்டர்னு ரெண்டு வெவ்வேற வெர்ஷன் வெச்சிருக்கேன்".

``இன்றைய சூழல்ல `விடியும் முன்' வந்திருந்தா நல்லா ரீச் ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்களா?” 

``அந்தச் சூழல்லேயே சரியா மார்க்கெட்டிங் பண்ணிருந்தா அந்தப் படம் நல்லா ஓடியிருக்கும். `நான் எடுத்திருந்தேனா நல்லா பிசினஸ் பண்ணியிருப்பேன்’னு அப்பவே பல தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. வந்த புதுசுல மார்கெட்டிங் பற்றி அவ்வளவா தெரிஞ்சுக்காம பண்ணினதால அந்தப் படம் வந்ததே பலருக்கும் தெரியலை. அந்தளவுக்கு ஓடினதே, `நல்ல படம்’னு வந்த மவுத் டாக்கால்தான். படத்தை எப்போ ரிலீஸ் பண்ணினா சரியா இருக்கும், யாருக்கு எப்படி கொடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. என் அடுத்தடுத்த படங்களை அவங்கள்ட்ட கொடுத்து ரிலீஸ் பண்ணுவேன்.”

``அடுத்த பட வேலைகளைத் தொடங்கிட்டீங்களா? அதில் யார்யார் நடிக்கிறாங்க?”

``இப்ப பண்ற படம் ஒரு பிரெஞ்ச் நாவலின் தழுவல். பிரம்மாண்டமா பண்ணாம சின்ன பட்ஜெட்ல சூப்பரா கொடுக்கலாம்னு திட்டம். பிரசன்னா, ஆன்ட்ரியா, மடோனா மூணுபேரும் என் சாய்ஸ். பிரசன்னாவும் ஆன்ட்ரியாவும் கதையைப் படிச்சுட்டு ஓகே சொல்லிட்டாங்க. இதுல பிரசன்னாவின் கேரக்டர் ஹீரோவா வில்லனான்னே தெரியாது. அதேபோல, ஆன்ட்ரியாவோட நடிப்பை முழுமையா வெளிக்காட்ட சரியான வாய்ப்பா இந்த ஸ்கிரிப்ட் இருக்கும்னு நம்புறேன். இந்தக் கதைக்கு, `சொல்லாதே யாரும் கேட்டால்'னு தற்போதைக்கான தலைப்பா வெச்சிருக்கேன். இந்தத் தலைப்பு மாறவும் வாய்ப்பிருக்கு.”

``மூன்று ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கிறதா சொன்னீங்க. மத்த ஸ்கிரிப்ட்ஸ் பற்றி சொல்லுங்க?”

``இன்னொரு கதைக்கு `கொலை'னு தற்காலிகமா தலைப்பு வெச்சிருக்கேன். 100 வருஷத்துக்கு முன் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு எழுதியிருக்கேன். அதை நாவலா ஒருத்தர் தன்னோட கற்பனையையும் சேர்த்து எழுதியிருக்காங்க. அந்த நாவலையும் என் கற்பனையையும் சேர்த்து `கொலை’ எழுதிருக்கேன். ஒரு பெரிய ஹீரோட்ட பேசிருக்கேன். அவரும் என் கூட வொர்க் பண்ணணும்னு சொல்லிருக்கார். அடுத்து சுஜாதா எழுதின `கொலையுதிர் காலம்' நாவலை படமா எடுக்குறதுக்கான உரிமையை வாங்கி வெச்சிருக்கேன். அதை படத்துக்கு தகுந்தமாதிரி மாற்றி உலக சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்குற மாதிரி இந்தில சீரியஸா பண்ணலாம்னு திட்டம் வெச்சிருக்கேன்.

இவைதவிர நானும் கேமராமேன் செளந்தரும் சேர்ந்து மித்தோலாஜிக்கல் ஃபேன்டஸி படம் ஒண்ணை எழுதிட்டு இருக்கோம். அதை நாங்களே தயாரிக்கிறோம். இதில் `பாகுபலி' படத்துல வேலை செய்த ஸ்கெட்ச் ஒர்க்கர் விஷ்வாவும் ஒர்க் பண்றார். இந்தப் படத்தை 2020ல ரிலீஸ் பண்ண டார்கெட் வெச்சிருக்கோம். இதுதவிர மகாபாரதத்தை மையமா வெச்சு ஒரு ஒன் லைன் வெச்சிருக்கேன். அதுக்கு சிங்கப்பூர்ல இருக்கும் தமிழ் அறிஞர் முனைவர் இளவழகன் ஸ்கிரிப்ட் எழுதுறார். மகாபாரதத்தை அப்படியே எடுக்கலை. ஒரு கதை நடக்கும். அதில் தொடர்புடைய கேரக்டர்களை மகாபாரதத்தோடு தொடர்பு படுத்துறமாதிரி படம் இருக்கும். இது மல்டிலிங்குவல் படமா இருக்கும். 

``நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் சொல்றீங்க. சிஜி  வொர்க் நிறைய இருக்குமே? உங்க முதல் படத்துலயே கிராஃபிக்ஸை நிறைய பயன்படுத்தியிருந்தீங்க?”

``சிஜி, வி.எஃப்.எக்ஸ் வேலைக்களுக்காக நானே பூனே, கோவானு இரண்டு இடங்கள்ல ஒரு கம்பெனியை நடத்திட்டு இருக்கேன். அதில் ஹாலிவுட் சினிமாக்களுக்கு சிஜி, வி.எஃப்.எக்ஸ், பார்டிகல் ஃபிசிக்ஸ், டைனமிக்ஸ் பண்ணிக்கொடுக்குறோம். அப்பப்போ 3டி எஃபெக்ட்ஸும் பண்ணிக்கொடுத்துட்டு இருக்கோம். ராஜமெளலி ஸ்டைல்ல படத்துக்குத் தேவையானது எல்லாத்தையுமே நாங்களே கம்பெனியா வெச்சிருக்கோம். அதனால இந்தப் படங்களை எடுக்குறதுல எந்தப் பிரச்னையும் இல்லை."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு