Published:Updated:

"நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ்
"நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்திருக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் குறித்தும், தனது சினிமா கிராப்ஃட் குறித்தும் பேசியிருக்கிறார், கீர்த்தி.

''இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், 'சண்டக்கோழி 2', 'சாமி 2' ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அதேசமயம், 'நடிகையர் திலகம்' மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கிடைக்கிறது கஷ்டம். ரெண்டும் இருக்கட்டும்னுதான் நினைப்பேன்!"  - 'சாவித்திரி' கேரக்டர் கொடுத்திருக்கும் உற்சாகம், கீர்த்தி சுரேஷ் முகம் முழுக்கத் தெரிகிறது. யெஸ்... கமர்ஷியல் கதைகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கீர்த்தி சுரேஷை 'நடிகையர் திலகம்' மூலம் நாம் சாவித்திரியாகப் பார்க்கப்போகிறோம்.

"இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவித்திரியைப் பத்தி தெரிஞ்சாலும், அவங்க படங்களைப் பார்த்திருப்பாங்களானு சொல்லமுடியாது. படத்துல ஆடியன்ஸை கனெக்ட் பண்ண என்னென்ன விஷயங்கள் இருக்கும்?"  

"இந்தக் கதை பழசா இருந்தாலும், சாவித்திரி மேடம் ஒரு சராசரி மனுஷி. அவங்களுக்கு நடந்தது மாதிரி, இன்னைக்கு யாருக்கும் நடக்காதுனு சொல்லமுடியாது. இந்த ஒரு விஷயமே ஆடியன்ஸை ஈஸியா கனெக்ட் ஆக்கிடும். ஒரு நடிகையா சாவித்திரி தொட்ட உயரம், சம்பாதிச்ச சொத்து, பெயர், புகழ், கஷ்டப்பட்ட கடைசி காலம்... எல்லாம் படத்துல இருக்கும். பொதுவா, பயோபிக் படங்களோட திரைக்கதை மெதுவா இருக்கும்னு சொல்வாங்க. இந்தப் படம் அப்படியும் இருக்காது." 

"சாவித்திரி கேரக்டருக்கு இருக்கிற முக்கியத்துவம் மத்தவங்களுக்கும் இருக்கா?" 

"நிச்சயமா! ரிப்போர்ட்டர் கேரக்டர்ல சமந்தா, ஜெமினி கணேசன் கேரக்டர்ல துல்கர் சல்மான், சாவித்திரியோட சித்தப்பாவா நடிச்சிருக்கிற ராஜேந்திர பிரசாத். தவிர, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், திவ்யா வாணி, பானுப்பிரியா... இப்படிப் பல சீனியர் நடிகர், நடிகைகள் இருக்காங்க. டைட்டில் கேரக்டரை நான் பண்ணாலும், இவங்கெல்லாம் இல்லாம என் கேரக்டர் முழுமை பெறாது. துல்கர் சல்மானைவிட, மத்தவங்களோட எனக்கு காம்போ சீன்ஸ் கம்மிதான். தவிர, படத்துல வர்ற சின்னச் சின்ன கேரக்டர்களுக்குப் பல இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க."

"சாவித்திரி நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நீங்க பிறந்திருக்ககூட மாட்டீங்க. அவங்க கேரக்டருக்கு உங்களை அப்ரோச் பண்றப்போ, எப்படி இருந்தது?"

"அவங்களைப் பத்தி எல்லா விஷயத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கேன். அவங்க கேரக்டர்ல நடிக்கப்போறது சந்தோஷமாதான் இருந்தது. ஆனா, தயாரிப்பாளருக்கு போன் பண்ணி, 'நான் நடிக்கலை சார்'னு சொன்னேன். ஏன்னா, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், சிலர் 'சாவித்திரி மேடம் கேரக்டர்ல நடிக்கப்போறீங்களா?'னு ஆச்சர்யப்பட்டாங்க. சிலர், 'உன்னால பண்ணமுடியுமா?'னு பயமுறுத்துனாங்க. 'தப்பான விளையாட்டுல இருக்கோமோ?'னு எனக்குப் பயம். முக்கியமா, சாவித்திரி பட்ட கஷ்ட நஷ்டங்களை என் மூலமா ஆடியன்ஸுக்குக் கொண்டுபோய், அவங்களோட மன வருத்தத்துக்கு நான் காரணமா இருந்துடக்கூடாதுனு நினைச்சேன். ஆனா, சிலர் 'இந்தப் படத்துல நடிக்கிறது உனக்குக் கிடைச்ச பிளஸ்ஸிங்!'னு சொன்னாங்க, சம்மதிச்சுட்டேன். ஆனா, இந்த நிமிடம் வரைக்கும் எப்படி வொர்க் அவுட் ஆகப்போகுதோனு படபடப்பாதான் இருக்கு!" 

''நடிகையா மட்டுமில்லாம, போர் சமயத்துல செஞ்ச உதவிகள், அகதிகளுக்கு உதவியது, படங்களைத் தயாரிச்சதுனு சாவித்திரிக்குப் பன்முகம் இருக்கு. எல்லாம் படத்திலும் இருக்குமா?"

"நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. ஆக்சுவலா, டைரக்டர் அஸ்வின் பல விஷயங்களை வைக்க முடியாம கஷ்டப்பட்டார். அதனால, இதெல்லாம் சின்னச் சின்ன காட்சிகள்ல வரும். ஆனா, ஆடியன்ஸுக்கு சொல்லவேண்டிய, சாவித்ரி வாழ்க்கையில இதையெல்லாம் நிச்சயமா காட்டணும்னு நினைச்ச எல்லாத்தையும் படத்துக்குள்ளே கொண்டுவந்துட்டோம். அவங்க வாழ்க்கை எப்படி இருந்ததோ, அப்படியே இருக்கும். ஜெமினி கணேசனோட காதலும், அந்தக் காதல் கைமீறிப் போன தருணம்கூட இருக்கு." 

''ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருக்கும் தங்க நாணயம் கொடுத்தீங்களாமே?"

"எனக்கு ஒரு படம் பிடிச்சிருந்ததுனா, வொர்க் பண்ண எல்லோருக்கும் சில்வர் காயின் கொடுப்பேன். சில தமிழ்ப் படங்களுக்கும் இதை ஃபாலோ பண்ணியிருக்கேன். ஆனா, 'நடிகையர் திலகம்' என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச படம். அதான், கோல்ட் காயின் கொடுத்தேன். நடிகை சாவித்திரியும் இப்படித்தான் கொடுப்பாங்கனு தெரிஞ்சுக்கிட்டு இதைப் பண்ணலை. என்னனு தெரியலை, இந்தப் படம் எமோஷனலா என்னை ரொம்ப பாதிச்சது" 

"ஒரு நடிகையோட பயோபிக் படத்துல நடிச்சிருக்கீங்க. ஒரு நடிகையா நீங்க கத்துக்கிட்ட விஷயம் என்னென்ன?"

" 'அவ்ளோ நல்லா வாழ்ந்த ஒரு நடிகை, கடைசியில இப்படித்தான் இறந்துட்டாங்களே!'னு ஃபீல் பண்ணியிருக்கேன். 'சாவித்திரியோட வாழ்க்கையில இதெல்லாம் நடந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்ல!'னு நினைச்சிருக்கேன். 'அவங்களைச் சுத்தி இருந்தவங்களெல்லாம் எப்படி இருந்தாங்க?'னு யோசிச்சிருக்கேன். சுருக்கமா சொன்னா, இந்தப் படம் மூலமா ஒரு லைஃப் ஜர்னியைத் தெரிஞ்சுக்கிட்டேன்."

"படத்துல ரொம்பக் கஷ்டப்பட்ட விஷயம்?" 

"நிறைய இருக்கு... குண்டான முகத்தைக் கொண்டுவர்றதுக்காக பிராஸ்தெடிக் பண்ணோம். இயக்குநரே ஒரு காட்சியை ஓகே சொன்னாலும், 'இல்லை சார்... இன்னொரு ஷாட் போலாம்'னு சொல்வேன். ஏன்னா, இந்தப் படம் நல்லா வரணும்ங்கிற பதற்றம் எனக்கு. 'மாயாபஜார்'ல வர்ற 'கடோத்கஜன்' பாட்டை எடுக்குறதுக்கு மூணு நாள் ஆச்சு. நிறைய டேக் எடுத்து, ஒரு கட்டத்துல அழுதுட்டேன். ஆனா, டப்பிங் முடிஞ்சு மொத்தப் படத்தையும் பார்க்கும்போது, நெகிழ்ச்சியா இருக்கு. தவிர, டான்ஸுக்கு மட்டும் நிறைய ரிகர்சல் இருந்தது. ஏன்னா, சாவித்திரி மேடம் நடிச்ச மூணு பாடல்களைப் படத்துல அப்படியே வெச்சிருக்கோம். சிரமம் அதிகம்தான். ஆனா, படம் நல்லா வந்திருக்கு!"

"தமிழ்சினிமாவுல உங்களுக்கான இடம் எதுனு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டீங்களா?"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நடிப்புங்கிறது, ஒரு டிரெயின்ல டிராவல் பண்ற மாதிரி. ஒவ்வொரு ஸ்டாப் வரும்போது, ஒவ்வொருவித மகிழ்ச்சி கிடைக்கும். நம்ம ஸ்டாப் எப்படா வரும்ங்கிற ஆர்வம் இருக்கும். அப்பப்போ இறங்கி ஏறிக்கிட்டு இருக்கேன், அவ்ளோதான். நயன்தாரா, த்ரிஷா இவங்கெல்லாம் டாப் ஹீரோயின்ஸ். அவங்க நிறைய கமர்ஷியல் படங்கள் பண்ணிட்டு, இப்போ ஹீரோயினை மையப்படுத்திய கதைகள்ல நடிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட இந்த முடிவு சரியானது. நான் அப்படி இல்லை. இப்போதான் வளர்ந்துக்கிட்டு இருக்கேன். என் இடத்தைத் தீர்மானிக்கிற நேரம் இன்னும் வரலை!"

''சாவித்திரி நம்பர் ஒன் நடிகை. உங்களுக்கு அந்த ஆசை இருக்கா?" 

"ஆசை இருக்குனும் சொல்லமாட்டேன்; இல்லைனும் சொல்லமாட்டேன். அமையணும்னு நினைச்சா, அந்த இடம் நமக்குக் கிடைக்கும். பார்ப்போமே!"

"அரசியல்...?"

"அய்யய்யோ... தப்பான ஆள்கிட்ட கேட்குறீங்க. அரசியல்ல எனக்கு பேஸிக் வியூகூட கிடையாது. அரசியல் செய்திகளைப் படிப்பேன், கிராஸ் பண்ணிப்போயிடுவேன். 'அவர் இப்படிப் பண்ணியிருக்கலாம்', 'இவர் அப்படிப் பண்ணியிருக்கலாம்'னு யோசிக்கிற அளவுக்கு அரசியல் அறிவு எனக்கு இல்ல!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு