Published:Updated:

முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான்
முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான்

அமெரிக்காவில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார், நடிகர் ரஜினிகாந்த். நடித்து முடித்திருக்கும் 'காலா' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, பிறகு கட்சி அறிவிப்பை வெளியிடுவது என்பது ரஜினியின் பிளான்.

‘கமல் வந்துவிட்டார். ரஜினி எப்போது வருவார்?’ சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்... என்று பலரும் எதிர்பார்ப்பது இந்தக் கேள்விக்கான பதிலைத்தான். பதில் சொல்லவேண்டிய ரஜினியோ உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால், அவர் மனம் முழுதும் ஆரம்பிக்க உள்ள கட்சியைச் சுற்றித்தான் இருக்கிறது என்கிறார்கள், ரஜினியை அறிந்தவர்கள்.  

ஏப்ரல் 23-ம் தேதி தன் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷ், உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் அமெரிக்கா புறப்பட்ட ரஜினி, அங்கு மாஸ்டர் செக்அப்பிற்காக செலவிட்டது என்னவோ வெறும் இரண்டு நாள்கள்தான். மீதமுள்ள நாள்கள் ஓய்வுக்காகப் பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்காவில் ரஜினிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதில், வேலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தொழில் அதிபரும் ஒருவர். ரஜினி எப்போது அமெரிக்கா சென்றாலும் இவரைச் சந்திக்காமல் இந்தியாவுக்குத் திரும்பமாட்டார். அந்தத் தொழிலதிபர் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும், இவரைச் சந்தித்துப் பேசுவது வழக்கமாம். 

முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான்

ரஜினி சிகிச்சைக்காக சென்றமுறை அமெரிக்கா போனபோது, மகள் ஐஸ்வர்யாவுடன் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அடுத்தமுறை சென்றபோதும் அதே ஆசிரமத்துக்குச் சென்றார். இந்தமுறை சென்றபோதும் அந்த ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகம், அரசியல் குறித்துத் தீவிரமாக யோசித்தார். தீவிர தியானத்திலும் ஈடுபட்டார். உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி அன்று வாஷிங்டன் நகரில் தங்கிய ரஜினி மே 4-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னைக்குப் புறப்படுகிறார். 

தன் கட்சியின் அறிவிப்பை ரஜினி எப்போது வெளியிடுவார் என்பது குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “ ‘ரஜினி மக்கள் மன்றத்துக்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. கிளைக்கழக நிர்வாகிகளைச் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் சிபாரிசு செய்ய, அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் சுதாகரும், ராஜு மகாலிங்கமும் நேரடியாகச் சென்று தேர்வு செய்து வருகின்றனர். 

முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான்

தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளும் கட்டமைப்பில் வலுவானவை. இந்தக் கட்சிகளில் கிளைக் கழக பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அனைவரையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். அந்த பரிட்சயம் தேர்தலின்போது சம்பந்தப்பட்டவர்கள்தான் வாக்களிக்கிறார்களா என்று சரிபார்க்கும் பூத் கமிட்டி பிரதிநிதியாக இருப்பதுவரை உதவும். தான் தொடங்கவிருக்கும் கட்சிக்கும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி, பூத் கமிட்டி பிரதிநிதி வரை அனைவரையும் நியமித்து முடித்தபிறகே கட்சி அறிவிப்பு என்பதில் ரஜினி மிக உறுதியாக இருக்கிறார். 

அந்தக் கடைநிலை பிரதிநிதிகள் நியமனம், ‘காலா’ ரிலீஸ், பிறகு கட்சி அறிவிப்பு... என்ற படிநிலையை மனதில் வைத்தே ரஜினி இயங்கி வருகிறார். ஏப்ரல் 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட 'காலா' ரிலீஸ், ஜூன் 7-ம் தேதி மாறியதற்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலே காரணம். ஏனெனில் இப்போதைய சூழலில் அங்கு ‘காலா’வை ரிலீஸ் செய்ய முடியாது. கர்நாடகாவைத் தவிர்த்துவிட்டு ரிலீஸ் செய்வதும் சாத்தியமில்லை. அதனால், அந்த மாநில தேர்தலுக்குப் பிறகே ‘காலா’ ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு கட்சி அறிவிப்பு இருக்கும்” என்கிறார்கள் அவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு