Published:Updated:

பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’காலா’ ஆடியோ ரிலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’காலா’ ஆடியோ ரிலீஸ்!
பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’காலா’ ஆடியோ ரிலீஸ்!

பிரமாண்டமாக நடக்கவிருக்கும் ’காலா’ ஆடியோ ரிலீஸ்!

தனிக்கட்சி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள ரஜினி, அதற்கான ட்ரெயிலராக 'காலா' ரிலீஸை நினைக்கிறார். அதற்கும் முன்னதான டீசர்தான் 'காலா' படத்தின் இசைவெளியீடு. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

'காலா' படத்தை தனுஷின் வொண்டர் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தாலும் '2.0' படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் உலகெங்கும் இதை விநியோகம் செய்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்த 'காலா', தமிழ் சினிமாவின் வேலைநிறுத்தத்தால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் இருந்து 'செம வெயிட்டு' என்ற ஒரு பாடலை மட்டும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அது ரஜினி ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றது. ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் எனும்போது படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  'காலா' பட ஆடியோ இந்த மாதம் 9-ம் தேதி வெளியிடப்படுகிறது.

வழக்கமாக ரஜினி தன் படங்களின் இசை வெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்த விருப்பப்படமாட்டார். அப்படியே நடத்தினாலும் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் நடத்துவார்கள். ஆனால் 'காலா' இசைவெளியீட்டு விழாவைப் பிரமாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் 'காலா' பட இசையை வெளியிடுகிறார்கள். படத்தில் நடித்திருக்கும் ரஜினி, நானா படேகர் உட்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இவர்களைத்தவிர அகில இந்திய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரவாயலில் எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் ரஜினி பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். அதேபோல இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கட்சி அறிவிப்பு பற்றியும் தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு