Published:Updated:

கணவனே என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

கணவனே  என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
கணவனே என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

PINKபொன்.விமலா, எம்.உசேன்

கணவனே என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

PINKபொன்.விமலா, எம்.உசேன்

Published:Updated:
கணவனே  என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
கணவனே என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

ண்களுக்குக் கிடைக்கும் எல்லா உரிமைகளும் பெண்களுக்குக் கிடைப்ப தில்லை. அப்படியே கிடைத்து அதை பயன்படுத்த ஆரம்பித்தால்... பெண்ணை தவறாக நினைக்கவே இந்தச் சமூகம் போட்டி போடுகிறது. இந்த நிதர்சனத்தை ஒவ்வொருவரின் முகத்துக்கு நேராக நின்று பேசுகிறது... அமிதாப்பச்சன், டாப்ஸி, கிர்தி குல்ஹரி, ஆண்ட்ரியா டரியங் ஆகியோரின் நடிப்பில், அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில் வந்திருக்கும் ஹிந்தி திரைப்படம் `பிங்க்!’

கணவனே  என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

மினல் அரோரா (டாப்ஸி), ஃபலக் அலி (கிர்தி குல்ஹரி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா டரியங்) மூவரும் பதற்றத்துடன் காரில் பயணிக்க, இன்னொரு காரில் ரத்தக் காயங்களுடன் ராஜ்வீர் சிங் (அங்கத் பேடி), தன்  நண்பர்களுடன் பயணிக்க... இருட்டு நேரத்து விபரீதங்களை உணர்த்தியபடி தொடங்குகிறது படம். ராஜ்வீர் யார்? அவனுக்கும் இந்த மூன்று பெண்களுக்கும் என்ன சம்பந்தம்? படத்தின் ஊடே கொஞ்சம் கொஞ்சமாக இதைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும், அந்தக் காயங்களுக்கான காரண காட்சிகளை கடைசிவரை காட்டாமல், தியேட்டரைவிட்டு வெளியேறும் சமயத்தில் ஓடவிட்டு, அனைவரையும் எழுந்து அப்படியே நிற்க வைப்பதில் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குநர்.

பெண்களின் விருப்புவெறுப்புகளை உணராமல் இச்சமூகம் அவர்களை எப்படி எல்லாம் சித்திரித்து, சீரழித்து குற்றவாளி என்றாக்குகிறது என்பதுதான் கதையின் கரு. கொஞ்சம் பிசகினாலும், ‘பொண்ணுனா... அடக்கம் வேணாமா. இப்படியெல்லாம் இருந்தா, இதுதான் நடக்கும்’ என்று கருத்துச் சொல்லி குளோஸ் செய்யக்கூடிய கரு. நாடு இன்றைக்கு இருக்கும் சூழலில் மிகமிகத் தேவையான இக்கருவை மிகவும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். கிட்டத்தட்ட கத்திமுனையில் நடந்து கடந்திருக்கிறார்.

டெல்லியில் வன்புணர்வால் கொல்லப் பட்ட நிர்பயா தொடங்கி, இன்றுவரை அந்தப் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களின் பிம்பங்களும் படத்தில் வந்துபோவது போன்றதொரு உணர்வை, முழுக்கவே கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

அரசியல் பின்புலம் மிக்க ராஜ்வீர், போதை இரவொன்றில் மினலிடம் தவறாக நடக்க முயல, அவனைத் தாக்கிவிட்டு தன் மற்ற இரண்டு தோழிகளுடன் சேர்ந்து தப்பிக்கிறாள் மினல். அவளைப் பழிவாங்கத் துடிக்கும் ராஜ்வீர், அவளின் இரண்டு தோழிகளையும் சேர்த்தே துரத்துகிறான். அரசியல் மற்றும் பணபலத்தை வைத்துக் கொண்டு, மினல் மீதே கொலை முயற்சி வழக்கைப் போட்டு, ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்ய வைக்கிறான். முன்னதாக மினல் கொடுத்த புகார், கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது.

படுக்கையில் கிடக்கும் தன் மனைவியைக் கவனித்துக்கொள்வது ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டிருக்கிறார் வயது முதிர்ந்த வழக்கறிஞர் தீபக் சேகல் (அமிதாப் பச்சன்). மேலும், தன்னுடைய எதிர்வீட்டில் குடியிருக்கும் இந்த மூன்று பெண்கள் இப்படி சிக்கிக்கொண்டு தவிப்பதை உணர்ந்து தானே முன்வந்து அவர்களுக்குப் பக்கபலமாக நிற்கிறார். வழக்கம்போல சிக்கிய இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

செய்யாத தவறுக்கு மினல் அடையும் துன்பங்கள், பார்ப்பவரை கலங்கச் செய்கிறது. மினல் ஒரு பெண் என்பதால், அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஐ.பி.சி. செக்‌ஷன்கள்... ஜாமீனில் வரக்கூடியவையே  என்பதை நிரூபித்து எளிதில் அவரை வெளியே கொண்டுவந்துவிடுகிறார் தீபக். இங்கிருந்து க்ளைமாக்ஸ் வரை முழுக்கவே நீதிமன்றம்தான். ஆனால், துளிகூட நம் கண்களும், காதுகளும் திரையைவிட்டு விலக மறுக்கின்றன.

ராஜ்வீரின் வழக்கறிஞர் மற்றும் தீபக் இருவரும் நடத்தும் காரசார விவாதங்களே படத்தின் பக்கபலமாய் அமைந்து, பெண்ணியம் சார்ந்த கேள்விகளை நம்முன் குவிக்கின்றன.

ஒரு பெண் மது குடித்தால், அரைகுறை ஆடை அணிந்தால், பின் இரவில் வீட்டுக்கு வந்தால்... அவள் மோசமானவள் என்று இங்கே கற்பிக்கப்பட்டிருப்பதையும், இது போன்ற பெண்களை இஷ்டம்போல வன்புணர்வு செய்யலாம் என்கிற எண்ணம் ஆண்களின் மனதில் எளிதாக எழச் செய்யப்பட்டிருப்பதையும் சாட்டையால் விளாசுகிறது தீபக் எடுத்து வைக்கும் வாதங்கள். மது குடிக்கும் பெண்கள் தவறானவர்கள் என்றால், அதே மதுவைக் குடிக்கும ஆணும் அப்படியேதானே! முன் முடிவுகளையும், காலகாலமாக கலாசாரம் என்கிற பெயரில் சொல்லப்பட்டிருக்கும் கற்பிதங்களை யும் வைத்துக்கொண்டு, பெண்களைத் தவறாக நினைப்பதை நிறுத்தினாலே போதும்... பெண்களுக்கான பாதுகாப்பு தானே வந்துவிடும் என்று அழுத்தமாகச் சொல்கிறது படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவனே  என்றாலும்... ‘நோ’ என்றால் ‘நோ’ தான்! - அவள் சினிமா

‘நீ கன்னித்தன்மையோடு இருக்கிறாயா?’

‘இல்லை...’

‘உன்னோட கன்னித்தன்மையை எப்போது இழந்தாய்?’

’19 வயதில்...  என் பாய் ஃப்ரெண்ட்டிடம்!’

‘அவரிடம் இதற்காக பணம் வாங்கிக் கொண்டாயா?’

‘இல்லை, எனக்கும் பிடித்திருந்தது. பணம் எதுவும் வாங்கவில்லை. அதன் பிறகு சில நண்பர்களுடனும்.’

‘சரி, ராஜ்வீர் அழைத்தபோது என்ன பதில் சொன்னாய்?’

‘நோ சொன்னேன்.’

நீதிபதியின் கண்டிப்பான இடைமறித்தல்களை எல்லாம் மீறி, மினலிடம் இப்படி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு பதிலை வாங்கும் தீபக், இறுதியில் நீதிபதியை நோக்கி...

‘நோ என்றால் நோதான் யுவர் ஹானர்!’ என்று சொல்லும் இடம்... க்ளாஸ்!

ஒரு பெண்... மனைவி, தோழி, வேலைக்குச் செல்லும் பெண், விலைமாதர் என எந்த நிலையில் இருந்தாலும் சரி... தனக்குப் பிடிக்கவில்லை என்று ஆணிடம் ‘நோ’ சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்றுதான் அர்த்தம்.

பெண்கள், இச்சமூகத்தால் ஒடுக்கப்படும்போது, அவளுக்கு நியாயம் மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, கலாசாரம், ஒழுக்கம் உள்ளிட்ட சவுக்கடிகளும் பெண்ணை நோக்கியே வேகவேகமாக விழுகின்றன என்பதை பொட்டில் அறைந்து சொல்கிறது படம்.

பிங்க் - பெண்ணின் அடை யாளத்தைக் காயப்படுத்தாதீர்கள்!

கதைதான் ஹீரோ!

அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்கிற இமேஜ் இன்றைக்கும் அமிதாப்பிடம்தான். ஆனாலும், இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் நான்காவது, ஐந்தாவது பெயராக அவருடைய பெயர் வருகிறது. கதை மட்டுமே நாயகன் என்கிற இந்த சமரசம்தான், இன்றைக்கும் அந்த உயர்ந்த மனிதரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism