Published:Updated:

அப்பாவும் நானும்!

அப்பாவும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவும் நானும்!

அப்பாவும் நானும்!

அப்பாவும் நானும்!

அப்பாவும் நானும்!

Published:Updated:
அப்பாவும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவும் நானும்!

ரித்விக் வருண்... இயக்குநர் வசந்த்தின் பையன். அபி ஹாசன்... நடிகர் நாசரின் பையன்! இருவருமே விரைவில் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்கக் காத்திருக்கும் ஹீரோக்கள். அப்பாவுக் கும் அவர்களுக்குமான நட்பை, புரிதலை `டைம்பாஸ்'க்காகப் பகிர்ந்துகொண்டதில்...

ரித்விக் வருண்: ‘`எந்த சினிமா ஃபங்ஷன்னாலும் நானும் அப்பாவும்தான் சேர்ந்து வெளில போவோம். எல்லாருமே அப்பாகிட்ட சொல் வாங்க `வீட்டுலயே ஹீரோவ வெச்சுக்கிட்டு எதுக்கு வெளில தேடுறீங்க'னு! அப்பாவும் நானும் சிரிச்சுக்கிட்டே வந்துருவோம்.

நான் லயோலால விஸ்காம் படிச்சேன். போட்டோகிராபின்னா ரொம்ப இஷ்டம்.சினிமால ஸ்கீரினுக்குப் பின்னால வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசை. `கடல்' படம் ப்ரிபுரொடக்‌ஷன்ல வேலை பார்த்தேன்.

`மூன்று பேர் மூன்று காதல்' படத்தோட ஷூட்டிங் ஊட்டில நடந்திட்டிருந்துச்சு. விமல் சார் கூப்பிட்டு `எப்பப்பா நடிக்க போறே'னு கேட்டார். அர்ஜூன் சாரும் அப்பாவும் ரொம்பக் க்ளோஸ். அர்ஜூன் சாரும் அப்பாகிட்ட இதைச் சொல்லிக்கிட்டே இருந்திருப்பார் போல. திடீர்னு ஒரு நாள் அப்பா போன் பண்ணுனாங்க.

அப்பாவும் நானும்!

ஒரு டைரக்டர் `உன்னை நடிக்க வைக்கலாம்னு கேட்குறார். அதனால தினேஷ் டான்ஸ் மாஸ்டரைப் போயிப் பாரு. மாஸ்டருக்கு நீ சரிப்பட்டு வருவேன்னு தோணுச்சுன்னா அந்த டைரக்டர் உன்னை நடிக்க வைப்பாராம். ஒருவேள செலக்ட் ஆகலைன்னா வருத்தப்படக்கூடாது'னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. எனக்கு அப்போ வரைக்கும் தெரியாது அப்பாவோட படத்துல தான் நடிக்கப் போறோம்னு. மாஸ்டருக்கு என் மேல திருப்தி வந்ததும் தான் அப்பா என்கிட்ட சொன்னாரு. அப்படி நடிச்சதுதான் `மூன்று பேர் மூன்று காதல்' படத்துல `ஸ்டாப் தி பாட்டு'.

காலையில் ஒன்பது மணிக்கு ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் ஆறுமணிக்கு வர்ற அப்பாக்களோட குழந்தைகளே அப்பாவை மிஸ் பண்ணுவாங்க. அப்பாவுக்கு எந்த நேரம் வேலை இருக்கும்னே தெரியாது.எங்களோட சின்னவயசுல அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுனோம். ஆனா லீவு கிடைக்கும்போதெல்லாம் அப்பா எங்களை விட்டு எங்கேயும் போனது இல்ல. லீவுன்னாலே வண்டியை எடுத்துட்டு மகாபலிபுரம் கிளம்பிருவோம்.

 அப்பாகிட்ட பிடிச்சது என்னன்னா, எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்த மாட்டாங்க. `உனக்குப் பிடிச்சதைச் செய்'னு சொல்லுவாங்க. என்னோட பத்தாவது பரீட்சை. அப்போ அப்பாதான் என்னை ஸ்கூல்ல விடவந்தாங்க.பரீட்சைக்குப் போறதுக்கு முன்னால `எதுக்கும் பயப்படாத வருண். எக்ஸாம்ல கிடைக்கிற பாஸா ஃபெயிலா ரிசல்ட் வாழ்க்கையை தீர்மானிக்காது. எக்ஸாம்ல ஃபெயிலாகி வாழ்க்கையில ஜெயிச்ச நிறைய பேரு இருக்காங்க'னு நம்பிக்கை கொடுப்பாங்க.

அப்பா எடுத்ததுல எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்னா அது `ஆசை', `ரிதம்', `அப்பு'னு சொல்லலாம். இன்னும் சொல்லப்போனா `அப்பு' படம் எனக்காகத்தான் பண்ணுனாரானு தோணும். நல்லா பார்த்தீங்கன்னா `அப்பு'க்கு முன்னால வரைக்கும் அப்பா நிறைய லவ் படம்தான் எடுத்திட்டு இருந்திருப்பாங்க. எனக்கு ஆக்‌ஷன் படம் ரொம்பப் பிடிக்கும். அப்பாகிட்ட `ஏன் லவ் சப்ஜெக்ட்டா எடுக்குறீங்க? ஆக்‌ஷன் படம் எடுக்க மாட்டீங்களா'னு கேட்ருக்கேன். ஒரு வேளை அதுக்காகக்கூட `அப்பு' எடுத்திருக்கலாமோனு இப்போ தோணுது.

டைம் பாஸ் மூலமா அப்பாகிட்ட சொல்லிக்க விரும்புறது என்னன்னா அப்பா மலையாளத்திலயோ அல்லது இந்திலயோ ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பாவும் நானும்!

அபி ஹாசன்: ``ஃபைசல், பாஷா, நான்னு மொத்தம் மூணு பசங்க. பெரிய அண்ணன் கேம் டிசைனர், பாஷா சைவம்ல நடிச்சிட்டான். நான்தான் கடைசி''- BOFTA-வில் ஆக்டிங் கோர்ஸ் முடித்துவிட்டு உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்வதற்காகக் காத்திருக்கிறார் அபி ஹாசன். நடிகர் நாசரின் மூன்றாவது பையன்.

``நானும் அப்பாவும் சேர்ந்து இருந்த நாட்கள் ரொம்பக் கம்மி. சின்னவயசுல வீட்டுல எதாவது ஃபங்ஷன் இருக்கும். சொந்தக்காரங்க எல்லாரும் இருப்பாங்க. அப்பா மட்டும் மிஸ்ஸிங். எங்கயாச்சும் டூர்போக ப்ளான் போட்டிருப்போம். `கண்டிப்பா வர்றேன்'னு சொல்லிருப்பாங்க. ஆனா கடைசி நேரத்துல ஷூட்டிங்னு வர முடியாமப் போயிரும்.

அப்பாவை ஸ்கிரீன்ல பார்க்குறப்போலாம் எனக்கு அப்பாவாவே தெரிய மாட்டார். அந்த கேரக்டராவே தெரிவார். அது எனக்கு ரொம்பப் புடிக்கும். இப்போ நடிப்பு கிளாஸ் போனதுக்குப் பிறகுதான் அந்த கேரக்டருக்காக அப்பா எப்படியெல்லாம் உழைப்பைக் கொடுத்துருப்பாருனு தோணும். அப்பாகிட்ட நான் அடி வாங்குனது இல்லை. என் அண்ணன் பாஷாதான் சாப்பிடமாட்றான்னு அப்பாகிட்ட செமையா அடி வாங்குவான். அதனாலேயே அப்பா நடிச்ச எல்லாப் படமும் பிடிச்சாலும் `எம்டன் மகன்' எங்க ஃபேமிலிக்கே ரொம்ப ஸ்பெஷல். அதுல அப்பாவை அப்படியே நேர்ல பார்க்குற மாதிரி இருக்கும்.

அப்பாவும் நானும்!

அப்பா ஸ்ட்ரிக்ட்லாம் இல்லை. கோபம்வந்துச்சுன்னா யார்கிட்டயும் பேசமாட்டாங்க. நானும் அப்பாவும் ஒரு விஷயத்தைப் பத்தி விவாதம் பண்ண ஆரம்பிச்சா அது முடியவே முடியாது. காம்ப்ரமைஸ் ஆகிக்க மாட்டோம்.இடையில எதாவது போன் வந்தாத்தான் நான் தப்பிக்க முடியும்.
எங்க ஆக்டிங் கோர்ஸுக்கு அப்பாதான் டீச்சர். ஒருநாள் ஜிப்ரீஷ் மொழில பேசிக்காட்டணும். எனக்கு அது சுத்தமா வராது. ஒவ்வொருத்தரா பேசிக்காட்டுறாங்க. நான் அவருக்குத் தெரியாம மறைஞ்சு நின்னுட்டு  இருந்தேன். கரெக்ட்டா என்னைப் பேச சொல்லிட்டாங்க. ஒருவழியா பேசிக்காட்டிட்டேன். கிளாஸ் முடிஞ்சு கார்ல போறப்ப, `உண்மையச் சொல்லு. நிஜமாவே தெரிஞ்சுதான் பண்ணியா'னு கேட்டார். `இல்லைப்பா நிஜமாவே தெரியாமதான் பண்ணுனேன்'னு சொன்னேன். `உன்னோட பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருந்துச்சு'னு பாராட்டுனாங்க. என்னால மறக்க முடியாததும்கூட.

அப்பா! நீங்க ஸ்ட்ரெஸ் எடுத்துப் பண்ண வேண்டாம். டேக் இட் ஈசியா பண்ணுங்க. இப்போ நடிகர் சங்கத்தலைவரா ஆனபிறகு வீட்டுக்கு வந்தாக்கூட போன் அடிச்சுக்கிட்டே இருக்கு. பிஸி வேலைகளுக்கு நடுவுல உடம்பையும் கவனிச்சுக்கங்க. அதுவே எனக்குப் போதும். ஐ லவ் யூ அப்பா. ஐ மிஸ்யூ!''

- புதூர் ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism