Published:Updated:

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''
பிரீமியம் ஸ்டோரி
``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

Published:Updated:
``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''
பிரீமியம் ஸ்டோரி
``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``எல்லாருக்கும்தான் கன்னத்தில் குழிவிழுகிறது கன்னத்தில் குழிவிழுகிற எல்லாரும் நீயாகிவிட முடியுமா?''

- கவிதையாகச் சொன்னால் மீண்டும் கன்னக்குழி தெரிய சிரிக்கிறார் அபர்ணா.  ஃபகத்ஃபாசிலின் `மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தில் `ஜிம்சி'யாக அக்கடதேசத்தைத் தாண்டி  தமிழ்ப் பசங்களை கன்னக்குழிக்குள் புதைத்துக்கொண்ட  சுந்தரிப்பெண்!

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

`` `ஜிம்சி'க்கும், அபர்ணாவுக்கும் என்ன வித்தியாசம்? திரிச்சூர் பொண்ணு நீங்க. இடுக்கி பொண்ணா நடிச்சது எப்படி இருந்துச்சு?''

`` `ஜிம்சி' மாதிரிதான் அபர்ணாவும் வெளிப்படையான பொண்ணு. ரெண்டு பேருக்கும் பெரியஅளவு வித்தியாசமெல்லாம் இல்லை. ஜிம்சி இடுக்கில இருக்கிற பொண்ணு. நான் திரிச்சூர் பெண் அவ்வளவுதான்.

திரிச்சூர் பொண்ணுக்கும் இடுக்கி பொண்ணுக்கும் வெளித்தோற்றம் மட்டும்தான் வேறவேறயா இருக்கும். நடிக்கிற ஃபீலே எனக்கு அப்போ இல்லை!''

``எப்ப இருந்து சினிமா கரியர் ஆரம்பிச்சீங்க?''

``சினிமாவுல நடிப்பேன்னு எல்லாம் நெனச்சது இல்ல. எட்டாவது படிக்கும்போது ஒரு டான்ஸ் கிளாஸ்ல என்னைப் பார்த்து ஷார்ட் ஃபிலிம்ல நடிக்க வெச்சாங்க. அப்படித்தான் ஆரம்பமாச்சு. அதுக்கப்புறம் `ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' படம் பண்ண ஆரம்பிச்சேன்.''

``சரி சினிமால நடிப்போம்னு எதிர்பார்க்கல... ஃபகத் ஃபாசில்கூட நடிப்போம்னு நெனச்சீங்களா?''

``நிஜமா நான் எதிர்பார்க்கவே இல்ல. என்னோட டீச்சர் உன்னிமயா மேடம் மூலமாத்தான் `மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தோட ஆடிஷனுக்குப் போயிருந்தேன். ஆடிஷன் முடிச்சதுமே செலக்ட் பண்ணிட்டாங்க. என்னோட கேரக்டர் என்ன? கதை என்ன? எதுவுமே எனக்கு தெரியாது. மெயின் ஷூட்டிங் ஆரம்பிக்க ரெண்டு நாளைக்கு முன்னாலதான் நான் ஃபஹத்ஃபாசிலுக்கு ஜோடின்னு சொன்னாங்க. என்னால நம்பவே முடியல. படம் பார்த்துட்டு மலையாள இண்டஸ்ட்ரில மோகன்லால் சார், ஜெயசூர்யா, டைரக்டர் சத்யன் அந்திக்காடு சார் எல்லாரும் பாராட்டுனாங்க.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை!''

``பின்னணி பாடகியானது எப்படி?''

``அம்மா ஷோபனா, அப்பா பாலமுரளி. ரெண்டுபேருமே நல்லா பாடுவாங்க. அதனால எனக்கும் மியூசிக் இன்ட்ரஸ்ட். இப்போ ஆர்க்கிடக்சர்ல மூணாவது வருஷம் படிச்சுட்டு இருக்கேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் புக்ஸ் படிப்பேன், பாட்டு கேட்பேன்.

இது போனஸ் மாதிரிதான். ஆடிஷன்  நேரத்துல சும்மா பாடிக்கிட்டு இருப்பேன். டைரக்டர் கேட்டிருப்பார்னு நெனக்கிறேன். `பாடுறீங்களா?'ன்னு கேட்டார். `ம்'னு சொல்லிட்டேன். அப்படித்தான் `மெளனங்கள்' பாட்டு பாடினேன். அதுக்குப்பிறகு ரெண்டு படத்துல பாடியிருக்கேன்.''

 ``தமிழ் படமெல்லாம் பார்ப்பீங்களா? யாரை ரொம்ப பிடிக்கும்?''

``சமீபத்துல `நானும் ரௌடிதான்' படம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நான் விக்ரமோட கொலவெறி ரசிகை. அவரை எப்படியாவது பார்த்து போட்டோ எடுக்கணும்னு இருந்தேன். போனமாசம் ஒரு ஃபங்ஷன்ல என் ஃப்ரெண்ட் மூலமா பார்த்து போட்டோ எடுத்துக்கிட்டேன். விக்ரம் ச்சோ ஸ்வீட்.
அப்புறம் நயன்தாரானா ரொம்ப புடிக்கும். ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.இன்னும் நேர்ல பார்த்தது இல்ல. எப்படியாவது பார்க்கணும். இதான் இப்போதைக்கு என்னோட ஆசை, கனவு எல்லாம்.''

``மலையாள படம் மட்டும்தானா? தமிழுக்கு எப்போ வர்றீங்க?''

``தமிழ்ல ரெண்டு படம் நடிச்சுட்டு இருக்கேன். `எட்டு தோட்டாக்கள்'னு ஒரு படம். இன்னொரு படத்துக்கு இன்னும் பெயர் வைக்கல. ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. சீக்கிரமே தமிழ்ல்லயும் பார்க்கலாம்!''

 - புதூர் புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism