Published:Updated:

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”
பிரீமியம் ஸ்டோரி
“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

வரவனை செந்தில், படம்: எம்.உசேன்

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

வரவனை செந்தில், படம்: எம்.உசேன்

Published:Updated:
“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”
பிரீமியம் ஸ்டோரி
“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”
“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

மிழ் சினிமா சரித்திரத்தின் தனித்துவச் சித்திரம் சுருளிராஜன். கரகர குரலாலும், நளினமான உடல் மொழியாலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த சுருளிராஜனை எவராலும் நகலெடுக்க முடியவில்லை என்பதே அந்தக் கலைஞனின் வெற்றி.

  தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிள்ளைகள் நிறைந்த பெருங்குடும்பத்தில் பிறந்தவர் சுருளிராஜன். இள வயதிலேயே தந்தையை இழந்தவர். மதுரையில் சகோதரரின் பராமரிப்பில் வளர்ந்தார். படிப்பு ஏறவில்லை. ஒர்க்‌ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தார். நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சின்னச்சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 1959-ம் ஆண்டில் சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்த சுருளிராஜனை,  ஓ.ஏ.கே.தேவர், டி.என்.பாலு போன்ற நாடக ஜாம்பாவான்கள் சுவீகரித்துக் கொண்டனர்.

1962-ம் ஆண்டில் கருணாநிதியின் `காகிதப்பூ' நாடகத்தில் நடித்தார்.

சுருளியின் வித்தியாசமான நடிப்பைக் கவனித்த தயாரிப்பாளர் ஜோசப் தளியத், ஜெய்சங்கரை அறிமுகம் செய்த `இரவும் பகலும்' படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். 1965-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் சுருளியின் முதல் படம். அதன் பிறகு சுருளியின்  சகாப்தம்தான். 675 திரைப்படங்கள்...  ஒரே ஆண்டில் 50 படங்கள் வரை நடித்த மகா கலைஞன்.

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  42 வயதில், சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் மரணமடைந்தார் சுருளிராஜன். அவரின் மனைவி முத்துலட்சுமி, சென்னை, தேனாம்பேட்டையில் வசிக்கிறார். சுருளிராஜனைப் பற்றிப் பேசினாலே, அவருக்கு விழிகள் சுரக்கின்றன.

``அப்போ நாங்க மானாமதுரையில் இருந்தோம். எங்க அப்பாவுக்கு  ரயில்வேயில் வேலை. அவரு என்னோட சொந்த மாமா பையன். இருந்தாலும்  அவருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதுல அப்பாவுக்கு விருப்பம் இல்லை. `உத்தியோகம் பார்க்கிறவருக்குத்தான் பொண்ணைக்கொடுப்பேன். சினிமாவில இருக்கிறவருக்கு தர மாட்டேன்’னு உறுதியா இருந்தார்.

உறவுக்காரங்கள்லாம் வந்து அப்பாவை சமாதானப்படுத்தி எங்க கல்யாணத்தை முடிச்சுவெச்சாங்க.

கல்யாணம் ஆனபோது அவருக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. எல்டாம்ஸ் ரோட்டுல வாடகை வீட்லதான் இருந்தோம். ரொம்பக் கஷ்டம். ஆனா, அது தெரியாமப் பார்த்துகிட்டாரு. அவருக்கு கோபமே வராது. டிராமா ரிகர்சல்லயோ, ஸ்டேஜ்ல நடக்கும்போதோ தன்னோட நடிக்கிறவங்க வசனத்தை மறந்துட்டா மட்டும் கோபம் வரும்.

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு இவரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் எடுத்த `திருவருட் செல்வர்’, `திருமலை தென்குமரி’னு எல்லாப் படத்துலயும் வாய்ப்புக் கொடுத்தாரு. `கண்
காட்சி' படத்துல இவரோட நடிப்பைப் பார்த்துட்டு, `யார்யா அந்தப் பையன்'னு நாகராஜன்கிட்ட கேட்டிருக்காரு சிவாஜிகணேசன். எம்.ஜி.ஆரும் நிறையப் படங்களுக்குப் பரிந்துரை செஞ்சிருக்காரு...’’ என ஞாபகங்களை மீட்கிறார் முத்துலட்சுமி.

சுருளிராஜனுக்கு முன்று மகன்கள், சண்முகவேலன், குமரவேலன், செந்தில்வேலன்.  சண்முகவேலன் துபாயில் ஒரு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக இருக்கிறார். குமரவேலன், சென்னையில் மனிதவள மேலாளராகப் பணிபுரிகிறார். செந்தில்வேலன், சினிமா கிராஃபிக்ஸ் துறையில் பணியாற்றுகிறார். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அனைவரும் சென்னையில் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்.

தன்னோட முடிவு தெரிஞ்சோ என்னவோ, `எதுவா இருந்தாலும் ஜெய்சங்கர் அண்ணன், எங்க பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் சுந்தரராஜன், நாடக வாய்ப்புகள் கொடுத்த சோ.ராமசாமி, ஏவி.எம்.சரவணன்... இவங்ககிட்டயெல்லாம் ஒரு வார்த்தை யோசனை கேட்டுச் செய்’னு  சொல்லியிருந்தார்.  

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

அவர் இறந்த பிறகு, நடிகர் சங்கத்துடனான உறவு இல்லாமப் போயிடுச்சு. குடும்ப அளவுல பழகின ஓ.ஏ.கே.தேவர் வீடு, கள்ளபார்ட் நடராஜன் வீடு, ஏ.பி.நாகராஜன் வீடு, வி.கே.ராமசாமி வீடு ,தேங்காய் சீனிவாசன் வீடு... இந்த அஞ்சு வீட்டுக்காரங்கதான் சினிமா கொடுத்த உறவா எஞ்சி நிக்கிறவங்க...’’ - உருக்கமாகச் சொல்கிறார் முத்துலட்சுமி.

``கடைசி மூணு நாலு ஆண்டுகள் ரொம்பக் கடுமையான உழைப்பு. ஒரு நாள்ல 19 மணி நேரம்

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

உழைப்பார். எந்நேரமும் ஏதோ ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி வண்டி வாசல்ல நின்னுக்கிட்டே இருக்கும். பெரும்பாலும் இவரே சீன் எழுதுவார். சில நேரங்கள்ல காமெடி நடிகர் ஏ.வீரப்பனைச் சேர்த்துக்குவார். எந்நேரமும் லைட் முன்னாடியே நின்னு நடிக்கிறது அவ்வளவு எளிதில்லை. ஆனா, `காத்துள்ளபோதுதான் புள்ளை தூத்திக்க முடியும்'னு சொல்லி ஓடிக்கிட்டே இருந்தார். 

திடீர்னு  உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. `வெளிநாட்டுல இருந்து மருந்து வரவழைக்கணும்'னு டாக்டர் சொன்னார். முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர் அந்த மருந்தை வரவழைச்சுக் கொடுத்தார்.  இருந்தும், அவரைக் காப்பாத்த முடியலை.

இறக்கிறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி அவருக்கு `கலைமாமணி' விருது அறிவிச்சாங்க. `அடியே... மார்க்கெட்டு டல்லடிச்சவுங்களுக்குத் தாண்டி கலைமாமணி கொடுப்பாங்க... நான் அந்த விருதை வாங்க மாட்டேன்'னு கிண்டலா சொன்னார். அதே மாதிரி அந்த விருதை வாங்க அவரு இல்லை. என் மூத்த மகன்தான் வாங்கினான்.

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

அவரு இறந்த சில நாட்கள் கழிச்சு, எம்.ஜி.ஆர் எங்க வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்பி, `யார் யாரெல்லாம் உங்களுக்குப் பணம் தரவேண்டியிருக்கு... எந்த கம்பெனி செக்கெல்லாம் இன்னும் க்ளெய்ம் ஆகாம இருக்கு'னு லிஸ்ட் கேட்டாரு. `அவரே போயிட்டாரு... இதுக்கு மேல அதெல்லாம் எதுக்கு... கொடுக்க இஷ்டமிருக்கிறவங்க கொடுக்கட்டும்'னு சொல்லிட்டேன். நிறைய பேரு, படம் டிராப் ஆகிடுச்சுன்னு சொல்லி செக்கை ரிட்டர்ன் வாங்கிட்டுப் போனாங்க. அப்புறம் அந்தப் படங்கள் சில நாள் கழிச்சு ரிலீஸாச்சு. இருந்தாலும், ரஜினி மாதிரி பெரிய ஆட்கள் பேட்டிகளில் அவரைப் பத்தி பெருமையா சொல்லும்போது இது எல்லாத்தையும் மறந்திடுவேன்’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் முத்துலட்சுமி.

“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”

``எது எப்படினாலும் நான் வாழ்க்கை மேலயும் மனுஷங்க மேலயும்வெச்ச நம்பிக்கையை இழக்கவே இல்லை. ஆறு வருஷத்துக்கு முன்னாடி, அவரு இறந்து 30 வருஷம் கழிச்சு ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்தார். தன்னோட பேரு, வலம்புரி சோமநாதன்னு அறிமுகப்படுத்திக்கிட்டார். அப்பதான் எனக்கு நினைவுக்கு வந்துச்சு. இவரு `பார் மகளே பார்' மாதிரி நிறைய வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவராச்சேனு. அவரு, ``அம்மா நான் சிவக்குமார், சுஜாதா, உங்க வீட்டுக்காரர் எல்லோரையும்வெச்சு `துணையிருப்பாள்மீனாட்சி'னு ஒரு படம் எடுத்தேன். என் மேனேஜர் உங்க வீட்டுக்காரருக்கு சம்பளம் கொடுத்துட்டதா கணக்கு எழுதியிருந்தார். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அந்தப் பணம் உங்க வீட்டுக்காரருக்குப் போய்ச் சேரலைனு தெரியவந்துச்சு. அன்னையில இருந்து எனக்கு தூக்கமே போச்சும்மா’’ என்றபடி என் கணவருக்கு 1977-ம் வருஷம் தரவேண்டிய சம்பளத்தைக் கொடுத்துட்டுப் போனாரு. பொய் சொல்லி செக்கை திருப்பி வாங்கிட்டுப்போன அதே ஜனங்க இருக்கிற ஊருலதான் இப்படிப்பட்ட மனுஷங்களும் இருக்காங்க. நம்புங்க தம்பி... நல்லதே நடக்கும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism