Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

•  `சிங்கம் 2' படத்தின் அறிமுகப் பாடலில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டார் நடிகை அஞ்சலி. `சிங்கம் 3' படத்திலும் அதேமாதிரி ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாட ஒரு சில நடிகைகளிடம் பேசி வந்தார்கள். இறுதியாக `கன்னித்தீவு பொண்ணா' பாட்டுக்கு ஆடிய நீது சந்திராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் செம்ம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் சூர்யா. பாட்டும் செம ஸ்பீடா சார்!

• ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் `2.0' படத்தில் ஒரு முக்கியமான வில்லன் ரோலுக்கு மலையாளத்தின் பிரபல வில்லன் நடிகரான கலாபவன் சாஜனை அழைத்து நடிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். படத்தில் இவருடைய கேரக்டருக்கும் ரொம்ப முக்கியத்துவம் இருக்கிறதாம். `படம் வெளியாகும்போது வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிடுவேன்!' எனச் சொல்லி பெருமிதப்படுகிறார் சாஜன். சூப்பர் சேட்டா!

சினிமால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பெண்கள் முன்னேற்றத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ராதிகா, குஷ்பூ, சுஹாசினி, ஊர்வசி ஆகிய நான்கு பேரும் இதில் நடித்து வருகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மகளிர் மட்டும்-2!

• காமெடி வேடத்தில் மட்டுமே நடிக்க கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு. `கத்திச் சண்டை'க்குப் பிறகு, `தில்லுக்கு துட்டு' ராம்பாலா, ஜி.வி.பிரகாஷ் இணையும் காமெடிப் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இரண்டுமே காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பதால், இனி வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸை ரசிக்கலாம்! வருக வைகைப்புயலே!

• `சைத்தான்' பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு சமீபத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி. `சைத்தான்' டீஸரைப் பார்த்த சிபிராஜ், இயக்குநரை அழைத்துக் கதை கேட்டு, `நாம கண்டிப்பா படம் பண்றோம்' எனச் சொன்னதோடு, அட்வான்ஸும் கொடுத்திருக்கிறார். தகடு தகடு!

• `டேவிட்', `சைத்தான் (இந்தி)', `வசீர்' என தொடர்ந்து இந்தியிலேயே படம் இயக்கி வந்த மணிரத்னத்தின் சீடர் பிஜாய் நம்பியார், எந்த வாய்ப்பும் சரியாக அமையாததால், தற்போது கேரளாவில் ஐக்கியமாகிவிட்டார். துல்கர் சல்மான் நடிக்க, சிறிய பட்ஜெட்டில் உருவாகிறது ஒரு படம்! பீட்சா சாப்பிட்டவரை ஆப்பம் சாப்பிட வெச்சிட்டீங்களேய்யா!

• சுந்தர்.சி பல கோடி பட்ஜெட்டில் இயக்க உள்ள பிரமாண்ட படமான `சங்கமித்ரா'வில் பெரிய பெரிய டெக்னீஷியன்களை ஒப்பந்தம் செய்துவிட்டார். படத்தின் ஹீரோவாக ஜெயம் ரவியை டிக் அடித்தவர், `நல்ல பாடி பில்டர் ஹீரோவும் வேணும்' என தற்போது ஆர்யாவையும் இணைத்திருக்கிறார். தெலுங்குக்கு `பாகுபலி'ன்னா, தமிழுக்கு `சங்கமித்ரா'டா!

• கங்கனா ரணாவத் சமீபத்தில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட விழாவில், ``நான் தமன்னாவின் தீவிரமான ரசிகை, அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அவரின் நடனம் என்னை ரொம்பவே கவர்ந்துள்ளது. என்னால் அவரைப் போல நடனமாட முடியாது!'' என ஏகத்தும் புகழ்ந்துள்ளார். நாங்களும் தான்மா! 

• ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சரி, சௌந்தர்யாவும் சரி... சினிமாவில் அடுத்தடுத்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இருவருமே அடுத்த படத்தை இயக்க ரெடி. ஐஸ்வர்யா பெண்ணியத்தை முன்னிறுத்தி சீரியஸான படத்தையும், சௌந்தர்யா காமெடி கலந்த காதல் கதையையும் திரைக்கதை ஆக்கியிருக்கிறார்களாம்! ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள்.

• அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதும் சரத்குமார் சினிமாவிலும், சின்னத்திரையிலும் தீவிர கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம். சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருபவர், விஜய் டி.வி-க்காக `விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற சீரியலைத் தயாரிக்கிறார். ரசியலைத் தாண்டி வந்தீங்களாக்கும்!

• `பிரேமம்' படத்தைச் சிதைத்த தெலுங்கு திரையுலகம், இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த `2 ஸ்டேட்ஸ்' படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்கிறது. நாக சைதன்யாவையே இந்தப் படத்திலும் நடிக்கவைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதேபடத்தின் மூலம் பாலிவுட்டின் அழகுப்புயல் ஆலியா பட்டை தெலுங்கில் அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்! அழியாப் புகழ் ஆலியா!

• வெற்றிக்காக காத்திருக்கும் பாண்டியராஜன் மகன் பிருத்வி பல கதைகளைக் கேட்ட பிறகு, இளம் இயக்குநர் ஒருவரின் காதல் கதையில் இம்ப்ரெஸ் ஆகி, நடிக்க `ஓகே' சொல்லியிருக்கிறார். சாந்தினி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்துக்கு `காதல் முன்னேற்றக் கழகம்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கே.எம்.கே ஆட்சி மலரட்டும்!

சினிமால்

• `ரஜினி முருகன்' மேடையிலேயே, ``கீர்த்தி சுரேஷ் பெரிய நடிகையாக வருவார், என் அடுத்த படத்தின் நாயகியும் அவர்தான்'' என்றார் லிங்குசாமி. தற்போது அல்லுஅர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் இயக்கும் லிங்குசாமி, கொடுத்த வாக்கை மறக்காமல் கீர்த்தி சுரேஷையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறார். சொன்னசொல் தவறமாட்டார் இந்த லிங்குசாமி!

• தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஆர்வமாக இருக்கிறார் ரித்திகா சிங். `தனுஷ்தான் என் ஃபேவரைட் ஹீரோ. அவருடன் நடிக்க ஆசையா இருக்கு' எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். `வாய்ப்புகள் நிறைய இருக்கு. எப்படியாவது நடிச்சிருவேன்' எனவும் சொல்லியிருக்கிறார். பொண்ணுனா இப்படி போல்டா இருக்கணும்!

• லிங்குசாமி தயாரிப்பில் `நான்தான் சிவா' படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் `ரேனிகுண்டா' பன்னீர்செல்வம். படம் ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கி பாதியில் நின்றுவிட்டதால், வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க, அவரை அழைத்து தன் அடுத்த படத்தை இயக்கச் சொல்லி விட்டார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வாங்க ஜி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism