கலாய்
Published:Updated:

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அக்கட தேசத்து அழகிகள்!

தெக்கத்தி சினிமா ரசிகர்களின் திரிலோக நாயகிகள் இவர்கள்!

டோலிவுட் மன்னாரா சோப்ரா

அக்கட தேசத்து அழகிகள்!

ந்தப் பாலாடை பியூட்டி பிறந்தது பேரழகி பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தில். அதனாலேயே சில்வர் ஸ்க்ரீன் ஆசையும் இயல்பிலேயே இருந்துவிட்டது. பிரியங்காவோடு சில விளம்பரங்களில் நடித்தவர், `பிரேம கீமா ஜந்தா நை' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அதன் பின் `ஜிட்' படம் வழியாக பாலிவுட் பிரவேசம். தமிழில் `சண்டமாருதம்', `காவல்' படங்களில் வந்து போனார். `ஜக்கன்னா', `திக்கா' ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்தவர் இப்போது அடுத்த ரவுண்டுக்காக ரெடியாகி வருகிறார். சீக்கிரமே `நல்ல’ தமிழ்ப்படத்துல வாங்க அம்மணி!

சாண்டல்வுட் மயூரி க்யாத்தாரி

அக்கட தேசத்து அழகிகள்!

ஹூப்ளியில் பிறந்த குளுகுளு எக்ஸ்பிரஸ். படித்து முடித்ததும் சாஸ்திர சம்பிரதாயப்படி இவரும் சின்னத்திரை தொகுப்பாளரானார். அந்த `வெளீர் பளீர்' சிரிப்புக்கு அடிமையான கன்னட டியூட்கள் சாண்டல்வுட்டுக்கு ரெட் கார்பெட் விரித்து அழைத்து வந்துவிட்டார்கள். `கிருஷ்ண லீலா' என்ற முதல் படத்திலேயே `செமையா நடிக்குதே இந்தப் பொண்ணு!' எனப் பேச வைத்தார். அதன்பின் வரிசையாக `இஷ்டகம்யா', `நடராஜா சர்வீஸ்', `காரியா 2' ஆகிய படங்களில் கமிட்டானார். இந்தப் படங்கள் அனைத்தும் வெளியானதும் பேபிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்கிறது கன்னடத்துப் பட்சி. ஆல் த பெஸ்ட் கோல்கேட் சிரிப்பழகி!

அக்கட தேசத்து அழகிகள்!

மல்லுவுட் ஷ்ரிதா சிவதாஸ்

கேரளாவின் ஊழியனூரில் செதுக்கப்பட்ட சிற்பம். மைக்ரோ பயாலஜியில் டிகிரி முடித்த கையோடு, `கைரளி' சேனலில் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதில் அம்மணி காட்டும் குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்கள் பிடித்துப்போய் `ஆர்டினரி' படத்தில் நடிக்க வைத்தார்கள் சேட்டன்கள். `10.30 ஏ.எம் லோக்கல் கால்', `மணி பேக் பாலிசி', `ஒண்ணும் மிண்டாதே', `ஹேங் ஓவர்' என எக்கச்சக்க படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான `தம்' படத்திலும் மேடம் வெரைட்டி காட்ட, அடுத்தடுத்த வாய்ப்புகள் வெயிட்டிங்! வரணும்ல, டிசைன் அப்படி!

- தேனி நித்தீஷ்