எப்போதும் காதலும் தாடியுமாய் வளையவரும் இயக்குநர் வஸந்த் இயக்கிய படங்கள்தான் இந்த வார விடுகதைக்கான விடைகள் பாஸ்...

1. தலைப்பே விருப்பத்தைச் சொல்லிடும். தல, காதல் மன்னனாய் இருந்தபோது அமைந்த இன்னொரு ஹிட். தேவா இசையில் பாட்டெல்லாம் தெறி. அறிமுக ஹீரோயின் சுபமாய் வந்தாரே.. என்ன படம் இந்தப் படம்?

2. மணிரத்னம் பேனர்ல அவர் படத்தையே ரீமேக் பண்ணின துணிச்சல் யாருக்கு வரும்? தளபதிக்கு சமமா அறிமுக நாயகன் நேருக்கு நின்னாரே... என்ன படம்?

3. யுவனுடன் முதன் முதலாய்க் கைகோத்துக் கலக்கிய பாடல்கள். யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்... ஒளி நிரம்பிய ஜோடி இந்தப் படத்தில்தான் காதலை வெளிப்படுத்தினார்களாம்... என்ன படம் பாஸ்?

4. சமூகத்துக்கு நல்ல செய்தி சொன்ன படம். டைட்டில் அழகா இருந்தாலும் நீளமா இருந்தது பயமாவும் இருந்துச்சே... ஐந்து இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் இசையமைச்ச புதுமைப்படம் இந்தப் படம். எந்தப் படம்?

5. பாடகர் ஹீரோவான படத்தில் பாட்டெல்லாம் ஹிட்டாச்சு. நம்பர் அஞ்சுக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கு ஆனா இல்லை. படத்தோட பேரும் இன்னொரு பாட்டோட முதல் வரின்னா சரியா சொல்லிடுவீங்க. சொல்லுங்க என்ன படம்?

6. இந்தி ரீமேக்கில் தேனிசைப் பாட்டெல்லாம் இருந்தும், ஆசை வில்லன் மஹாராணியாய் வித்தியாச நடிப்பை வழங்கியும் டாக்ஸி டிரைவர் ஹீரோவுக்கு மார்க்கெட் பிக்கப் ஆகலையே... என்ன படம் இந்தப் படம்?

7. இசைப்புயலுடன் பஞ்ச பூதங்களுக்கான பாடல்களுக்குப் பஞ்சமில்லை. ஆகஷன் கிங்கையும் அடக்கி வாசிக்க வைத்த படம். படத்தில் தலைப்பு தலையாட்ட வைக்குமே... என்ன படம்?

8. மிரட்டல் தலைப்பு. ஆனால் மென்மையான பாடல்கள். யுவனின் இன்னொரு மியூஸிக்கல் ஹிட். மலையாள ஹீரோ மனசில் நின்றார். லோக்கல் ஹீரோ வில்லனாய் வென்றார். மெதுவாக சொல்லுங்க பாஸ் என்ன படம்னு?

- நாகை கே.கணேஷ்குமார்

விடைகள்:
1.ஆசை, 2.நேருக்கு நேர், 3.பூவெல்லாம் கேட்டுப்பார், 4.ஏய்... நீ ரொம்ப அழகா இருக்கே, 5.கேளடி கண்மணி, 6.அப்பு, 7.ரிதம், 8.சத்தம் போடாதே