Published:Updated:

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!
பிரீமியம் ஸ்டோரி
ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

Published:Updated:
ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!
பிரீமியம் ஸ்டோரி
ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

``மூணு வேளை சாப்பாடு, ஒரு வேளை தூக்கம், நிம்மதியான வாழ்க்கை... இதுக்குத்தான் மனுஷன் ஓடிக்கிட்டு இருக்கான். எதையோ தொலைச்சுட்டு எதையோ தேடிக்கிட்டு இருக்கோம். என்கிட்ட ஒரு லட்சரூபாய் இருந்தா அதுல அம்பதாயிரம் செலவு பண்றதுல தப்பே கிடையாது. பணம்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் வெறும் காகிதம்தான். பணத்தை சம்பாதிக்கிறதுக்கு மக்களை சம்பாதிக்கணும். அவுங்களோட ஆசிர்வாதம் தான் நம்மளை வாழவைக்கும். கடவுளோ மதமோ பெரிய விஷயம் கிடையாது. மனுஷன் மனுஷனா இருக்கணும்... அவ்வளவுதான்!'' - வார்த்தைகளிலேயே அன்பை விதைக்கிறார் மைம் கோபி. `கபாலி' நடிகர். இப்போது `பைரவா' பரபரப்பில் இருக்கிறார். சமீபத்தில் ஆதரவற்ற 23  குழந்தைகளுக்கு சென்னை-கோயம்புத்தூர் விமானப் பயணத்தை தனது `G மைம்' ஸ்டூடியோ மூலமாக செய்து அசத்தி இருக்கிறார். 

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

``இது மைம்கோபியோட இன்னொரு பக்கம். எப்போ இருந்து இந்த வேலைகள் பண்ண ஆரம்பிச்சீங்க?''

``ஒரு மனுஷன் படிச்சிட்டான்னா அவனால ஒரு நூறு நல்ல மனுஷங்களை உருவாக்க முடியும். நம்மகிட்ட என்ன இல்லை... எல்லாமே இருக்கு. ஆனா வறுமை இருக்குறதால எதையும் செய்ய முடியல. அந்த வறுமையை ஜெயிக்கணும்னா படிப்பு முக்கியம்.

நான் சினிமாவுக்கு வர்றதுக்கு இருபத்திரண்டு வருஷங்கள் ஆகிருச்சு.ஆரம்பத்துல இருந்து மைம்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். வருஷா வருஷம் மைம் ஷோ நடத்தி அதன் மூலம் வர்ற பணத்தை வெச்சு, படிக்க வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வெச்சுட்டு இருக்கோம்!''

``இந்த விமானத்துல கூட்டிப்போறதுக்கான ஐடியா எப்படி?''


``போன வருஷம் ஷோ பண்ணும்போது ஒரு எழுபது ஹோம்ல இருந்து குழந்தைகள் வந்தாங்க. அதுல இருந்து இருபத்து அஞ்சு குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, `இவங்ககூட ஏன் நாம ஃபிளைட்ல போகக் கூடாது'னு தோணுச்சு. உடனே அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சோம்.

இந்தக் குழந்தைகள் எல்லாம் தேவதைகள் மாதிரி.அதனாலயே எல்லாருக்கும் ஏஞ்சல் ட்ரெஸ்லயும் பசங்க கோட்சூட்டும் போட்டுக்கணும்னு முடிவு பண்ணினோம் ஏர்போர்ட்ல இருந்து கூட்டிப்போக ஏசி கார்.தங்குறது ஃபைவ் ஸ்டார் ஓட்டல்னு முடிவு பண்ணுனோம். ஐடி கார்டு ஆதார் கார்டுனு ரெடி பண்ணுனோம். இதுக்காக கிட்டத்தட்ட ஒரு ஆறு மாசம் வேலை பார்த்தோம்.''

``மைம் கோபிக்கு எப்படி இருந்துச்சு இந்த அனுபவம்?''

``ஃபளைட்ல பறக்குறப்ப அந்தக் குழந்தைகள் அனுபவிச்ச சந்தோஷத்தை இதுநாள் வரை என்வாழ்நாள்ல நான் அனுபவிச்சதே கிடையாது. அவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.  நாற்பது வகையான சாப்பாடு... எதை சாப்பிடணும்னே தெரியாம விதவிதமான சாப்பாடு. அவங்க ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் பார்த்த சந்தோஷம் திரும்ப எனக்குக் கிடைக்காது. அங்கங்கே நானூறு கோடி, ஐந்நூறு கோடிலாம் காணாமப்போகுதுனு சொல்றாங்க. யாருக்கும் வருத்தம் கிடையாது. ஆனா குழந்தைகளுக்கு செலவு பண்றதுல என்ன வந்துறப் போகுது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

``எப்படி இருந்தது குழந்தைகளின் பயண அனுபவம்?''

``ஏர்போர்ட்ல ஒரு மிஸ்வேர்ல்டுக்கு எப்படிப் போவாங்களோ அப்படித்தான் போனாங்க. ஏர்போர்ட்டே எங்க குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாங்க. குழந்தைகள் அவங்களுக்கு ஏஞ்சல்ஸா தெரிஞ்சாங்க. ப்ளைட் டிராவல், ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல தங்குனது, புடிச்ச விஷயங்களைச் செய்யுறதுனு குழந்தைங்க ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. இந்த சந்தோஷத்தை அவங்க குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது மனசுக்குள்ள அடைகாத்து வெச்சிருப்பாங்க. அந்த சந்தோஷம் அவங்களை இன்னும் அழகாக்கும்!''

``எப்படிப் போகுது புதுப்பட வேலைகள்?''

``விஜய் சார்கூட பைரவால `கருவாட்டுக்குமார்'னு ஒரு ரோல்ல நடிக்கிறேன். படம் நல்லா வந்திருக்கு. மூணு நிமிஷ சீன் சிங்கிள் ஷாட்ல முடிச்சேன். விஜய் சார் பார்த்துட்டு பாராட்டுனாரு. கரண்ணு ஒரு தம்பி இருக்கான். அவன் ஒரு தெய்வக்குழந்தை. அவனுக்கு உலகத்துல ரொம்பப் புடிச்ச ரெண்டு விஷயம் ஒண்ணு பிரியாணி, இன்னொன்னு விஜய் சார். ஒருநாள் விஜய் சார்கிட்ட ஓகே வாங்கி கூட்டிட்டுப்போனேன். விஜய் சாரைப் பார்த்துட்டு அவ்வளோ சந்தோஷப்பட்டான்.''

``டைரக்டர் ரஞ்சித்தோட விருப்பமான நடிகர்கள்ல நீங்களும் ஒருத்தர். `ரஜினி-தனுஷ்- ரஞ்சித்' கூட்டணியில் நீங்களும் இருக்கீங்களா?''

``இவ்வளவு பெரிய இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்ததே ரஞ்சித் தம்பி தான். ரஜினி சார் படத்துல நானும் இருப்பேன்னு நம்புறேன்.''

``ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் மைம், இதுபோக சமுதாய வேலைகள். எப்படிப் போகுது வாழ்க்கை?''

``நான் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்சவன்தான். கிழிஞ்ச டவுசர் போட்டு பள்ளிக்கூடம் போயிட்டு வந்தவன். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். இன்னும் அப்படித்தான் இருக்கோம். நான் கஷ்டப்படல, என் வேலையை என் உழைப்பை சந்தோஷமாத்தான் பண்ணினேன். இன்னமும் அப்படித்தான் பண்றேன். யாரைக்கேட்டாலும் நேரம் இல்லைனு சொல்றாங்க. நாளைக்கு நீங்க எட்டு மணிக்கு வேலைக்குப் போகணும், வேலைக்குப் போகலைனா சீட்டைக் கிழிச்சுருவாங்க... அப்ப என்ன பண்ணுவீங்க? எல்லாத்தையும் விட்டுட்டு வேலைக்கு ஓடுவோம்ல? எல்லாத்துக்குமே மனசுதான் காரணம். முடியும்னு நெனச்சாதான் வாழ்க்கை!''

ரீல் வில்லன்... ரியல் ஹீரோ!

``ஆனா இங்கே வாழ்க்கைல எல்லாருக்குமே நிக்கிற இடத்துல நிக்குறதுக்கே ஓடுற மாதிரி ஆகிருச்சே?''

``எல்லாருமே எதிர்பார்த்து வாழப் பழகிட்டோம். ஒரு புதுச் சட்டை போட்டா யாராச்சும் நல்லா இருக்கும்னு சொல்வாங்களானு எதிர்பார்க்குறோம். நம்ம வாழ்க்கையில என்ன தேவையோ அதை நாமதான் முடிவு பண்ணணும்.  ஒருத்தன் உசிரோட இருக்கும்போது சாப்பாடு போட முடியாத சமூகம் அவன் செத்த பிறகு பால் ஊத்தி என்ன பிரயோஜனம்? அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கைல காசு பணத்தைச் சேர்த்து வெச்சு என்ன கொண்டு போகப் போறோம்?''

- ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism