Published:Updated:

நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி
நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

“நான் ரொம்ப சாஃப்டான பொண்ணு!” - ஆனந்தி

“என் முதல் படம் `பஸ் ஸ்டாப்'. இயக்குநர் மாருதி தசாரி என் ஃபேமிலி ஃப்ரெண்ட். நான் கலந்துக்கிட்ட ஒரு ரியாலிட்டி ஷோ பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார். எனக்கு ஆர்வமே இல்லை. ஆனா, என் குடும்பம், நண்பர்கள் எல்லாரும், `தயங்காம பண்ணு’னு என்கரேஜ் பண்ணினாங்க. அப்போ பத்தாவது பரீட்சை முடிஞ்சு லீவுல இருந்தேன். ப்ரைவஸி போயிடும், படிப்பு கெட்டுடும்னு முதல்ல தயங்கினேன். ஒரு கட்டத்துக்கு மேல மறுக்க முடியலை. லீவுல வெகேஷன் போற மாதிரி படத்துல நடிக்கப் போனேன்’’ ஆனந்தியின் வார்த்தைகளை முந்திக்கொண்டு விழிகள் பேசுகின்றன.

`` `விசாரணை’ படம் ஆஸ்கர்ல ஸ்கிரீன் பண்ண செலக்ட் ஆகியிருக்கே?’’

``செம ஹேப்பி. படம் வெனிஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் போனப்பவே வீட்ல எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்போ ஆஸ்கர் போனதும் பெருமை தாங்கலை. இந்த மாதிரி ஒரு படத்துல எனக்கும் வாய்ப்புக் கொடுத்ததுக்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி.’’

``உங்களோட ப்ளஸ், மைனஸ்?’’

``என்னோட ப்ளஸ் கண்ணும் உதட்டுக்குக் கீழே இருக்குற மச்சமும்தான். நிறைய பேர் இந்த மச்சம் உண்மையா... இல்லை வரைஞ்சதானு கேட்பாங்க. அவங்களுக்கு எல்லாம் சொல்லிக்கறேன்... நம்புங்க, இது உண்மையான மச்சம்தான்.

மைனஸ்னா நான் பயங்கர சோம்பேறி. ஆனா, ஷூட்டிங் போயிட்டேன்னா, எனர்ஜி பெர்சனாகிடுவேன். மத்தபடி என்னோட கேரக்டர் அப்பிடியே `கயல்’ படத்துல வர்ற கயல்விழி மாதிரிதான். நான் ரொம்ப சாஃப்ட்டான பொண்ணு.’’

``தீபாவளிக்கு வீட்ல என்ன ஸ்பெஷல்?’’

``எங்க வீட்ல எல்லா பண்டிகைகளையும் செமயா செலிப்ரேட் பண்ணுவோம். சொந்தகாரங்கள்லாம் வீட்டுக்கு வந்துடுவாங்க. தீபாவளினா பட்டாஸும் ஸ்வீட்ஸும்தானே? வீட்லயே ஸ்வீட்ஸ் செய்வோம். அம்மாகிட்ட நானும் ஸ்வீட் செய்யக் கத்துகிட்டேன். அந்த ஸ்வீட்டை `பொப்பட்லு’னு சொல்வாங்க. போளியோட ஆந்திரா வெர்ஷன்.’’

பா.ஜான்ஸன்

நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

“எனக்கு ஷாப்பிங்கைவிட சாப்பாடுதான் பிடிக்கும்!” - ரம்யா நம்பீசன்

ம்யா நம்பீசன்... ‘ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை’ என தான் பாடிய முதல் தமிழ்ப் பாட்டிலேயே ரசிகர்களைக் குத்தாட்டம் போடவைத்தவர். சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து க்யூட் அண்டு ஹாட் போட்டோ ஷூட்  நடத்தியிருக்கிற ரம்யா, ஃபேமிலி இன்ட்ரோவுடன் பேசத் தொடங்குகிறார்.

“கேரளா, சோட்டாணிக் கரைதான் எங்க சொந்த ஊர். அப்பா சுப்ரமணியன் உண்ணி, அம்மா ஜெயஸ்ரீ. ஒரே ஒரு தம்பி. படிச்சதெல்லாம் எர்ணாகுளம்.”

``நடிப்பு உங்க ரத்தத்திலேயே ஊறிப்போனதுனு கேள்விப்பட்டோம். அதென்ன கதை?’’

“எஸ். அப்பா ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அவரோட நடிப்புத் திறமை அப்படியே என்கிட்ட ஒட்டிக்கிச்சு.”

``அடுத்ததா என்ன படம்?’’


``லிப்ரா புரொடக்‌ஷன்ல நடிச்சுட்டு இருக்கேன். கவின் ஹீரோவா நடிக்கிறார்.”

``என்ன திடீர்னு போட்டோ ஷூட்.?’’

“ `சேதுபதி’யில் ஹவுஸ் வொயிஃப் கேரக்டர். அதனால நல்லாவே வெயிட் போட்டிருந்தேன். அடுத்த படத்துக்கு எடை குறைக்கணும்னு முடிவெடுத்தப்போ, ஏன் போட்டோ ஷூட் பண்ணக் கூடாதுனு தோணுச்சு. அவ்ளோதான்.”

நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி

‘`வெயிட் லாஸ் சீக்ரெட்?’’

``உணவுப் பழக்கத்தை சரியான டைம் டேபிளுக்குள் கொண்டுவந்தேன். சத்தான பழங்கள், நட்ஸ். கூடவே உடற்பயிற்சி. இதுதான் சீக்ரெட்.”

``அடுத்ததா பாட்டுல என்ன பிரேக் கொடுக்க போறீங்க?’’

``யுவன் சங்கர் ராஜா சார் மியூசிக்ல ‘செம போதை ஆகாத’ படத்துல ஒரு சாங் பாடியிருக்கேன். அதர்வாதான் ஹீரோ.’’

``நடிப்பு... பாடல்... எப்படி பேலன்ஸ் பண்றீங்க?’’

‘`சின்ன வயசுலயே கர்னாடிக் மியூஸிக் கத்துக்கிட்டதால, பாடறது எளிதான விஷயம்தான். நடிப்பில் அப்பாவோட சப்போர்ட்.’’

``நிறையவே நடிப்பில் முன்னேற்றம் தெரியுதே... என்ன காரணம்னு நினைக்கறீங்க?”

``அனுபவம்தான் எல்லாத்தையும் கத்துக் கொடுக்குது. நான் நிறைய பயணம் செஞ்சிருக்கேன்; நிறைய மனிதர்களிடம் பழகியிருக்கேன். அதெல்லாம்தான் எனக்கு வளர்ச்சியைக் கொடுத்திருக்கு. வளர வளர நமக்குள்ளேயே ஒரு மாற்றம் வரும். அதுவே நமக்கு நிறைய சொல்லித்தரும். ”

``உங்களோட தீபாவளி கொண்டாட்டம்?”

``பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் சென்னையில்தான் இருப்பேன். என் சித்தி வீடு இங்கதான் இருக்கு. நிறைய பட்டாசு வெடிப்போம். அன்னைக்கு முழுக்கவே ஹேப்பியா போகும்.”

‘`தீபாவளிக்கு உங்க பெர்சனல் ஷாப்பிங்?’’

``எனக்கு ஷாப்பிங்கைவிட சாப்பாடுதான் ரொம்பப் பிடிக்கும். ஒரு நடிகையா டிரெஸ், அக்சஸரீஸ் பெரிய விஷயமில்லை. ஆனா, தீபாவளி சமயத்தில்தான் சில ஸ்வீட்ஸ்லாம் ரொம்ப டேஸ்ட்டியா தோணும். நான் ஏற்கெனவே உணவுகள் வித்தியாசமா தேடித் தேடி சாப்பிடற கேரக்டர்ங்கறதால, தீபாவளினா எனக்கு சாப்பாடுதாங்க!”

- பா.விஜயலட்சுமி, படம்: வி.சந்தோஷ்ராஜ்

நடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி


 “நான் திருநெல்வேலி பொண்ணு!” - ரம்யா பாண்டியன்

``பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு, ஒரு வருஷம் வேலை செய்தேன். வீக் எண்ட்ஸ்ல விளம்பரப் படங்கள் பண்ணிட்டிருந்தேன். அப்பவே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனா, எனக்கு சினிமா நடிக்கும் ஆர்வம் இல்லாததால, எதையும் சம்மதிக்கலை. சில குறும்படங்கள் மட்டும் பண்ணிட்டிருந்தேன். `ஜோக்கர்’ படத்துக்கு ஹீரோயின் தேடினப்போ, ஆடிஷன்ல கலந்துக்கிட்டு செலெக்ட் ஆனேன்'' என ஹீரோயினான ஃப்ளாஷ்பேக்கை முடித்தார் ரம்யா பாண்டியன்.

``ஜோக்கர்ல ஒரு கிராமத்துப் பொண்ணு வேஷம், எப்படி ரெடியானீங்க?’’

``பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைனாலும், எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அந்த லாங்வேஜ் எனக்கு ஈஸி. ஆனா, தர்மபுரி ஸ்லாங் எனக்குத் தெரியாது. அது எப்படி இருக்கணும்னு ராஜு முருகன் சார்தான் சொல்லிக்கொடுத்தார்.’’

``மாடலிங் டு ஆக்டிங் என்ன வித்தியாசங்கள்?’’

``நான் மாடலிங் முழுசாப் பண்ணலை. பண்ணலாம்னு சின்னச் சின்னதா முயற்சிகள் பண்ணிட்டிருந்தேன். ஆனா, என்னைப் பொறுத்தவரை மாடலிங்குக்கு முகமும் உடலமைப்பும் மிக முக்கியமானதா இருக்கும். அதுவே, ஆக்டிங்ல உங்களுடைய ரோலை அப்படியே உள் வாங்கிக்கணும், அப்புறம் அதாவே மாறணும்னு நிறைய பண்ணணும்.’’

``சினிமானு முடிவு பண்ணதும் என்ன விஷயங்களைச் கத்துக்கவேண்டி இருந்தது?’’

``நான் கேமரா முன்னால நின்னு பெர்ஃபார்ம் பண்றேன்னா, ஆடியன்ஸ் என்னை எப்படி ஸ்கிரீன்ல பார்ப்பாங்கனுதான் யோசிச்சிகிட்டே பண்ணுவேன். அதனால, நம்மளைச் சுத்தி கூட்டம் இருக்கேனு பதற்றமானதெல்லாம் நடக்கலை. கத்துக்கிட்டதுனு சொல்லலாமானு தெரியலை. `ஜோக்கர்’ல ரோஜா தோட்டத்தில் வேலை செய்யிற ரோல்ங்கிறதால, அங்க நிஜமாவே நான் போய் வேலை செஞ்சு, படத்துக்காக அந்த வேலையைக் கத்துக்கிட்டேன்.’’

`சினிமாவுக்குப் போறேனு சொன்னப்போ, வீட்ல என்ன ரியாக்‌ஷன்?’’

``வேணவே வேணாம்னு சொன்னாங்க.  `ஜோக்கர்’ பார்த்ததுக்குப் பிறகு அவங்களுக்கு நிறையவே நம்பிக்கை வந்திடுச்சு.’’ 

- பா.ஜான்ஸன், படம்:  வி.எஸ்.அனந்தகிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு