“தீபாவளி வந்தாலே நாங்க பிஸி ஆகிடுவோம். பெரிய பெரிய பேனர்கள் ரெடி பண்ணி, பெயின்ட் அடிச்சு, காயவெச்சு ரோல் பண்ணி வெளியூர்களுக்கு அனுப்புவோம். மழை வேற பயமுறுத்தும். எல்லா தியேட்டர்களிலும் தீபாவளி டைம்லதான் புதுப் படம் மாறும்ங்கிறதால, பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தியேட்டர்ஸ் கன்ஃபர்ம் ஆகறதுக்காக காத்திருப்போம்.

பத்து படமாவது பெரிய எதிர்பார்ப்போட வரும். பத்து நாள் முன்னாலதான் எந்தப் படம், எந்த தியேட்டர்லனு தெரியவரும். அது தெரிஞ்ச உடனே பரபரப்பாகிடும்” என்கிறார் ஜீவானந்தம். கோவையின் மிகப் பிரபலமான திரைப்பட பேனர் ஓவியர். `சினி ஆர்ட்ஸ் வேலாயுதம்’ என்றால் கோவை முழுவதும் மிகவும் பிரபலம். அவருடைய மகன் ஜீவானந்தம். தந்தையின் காலத்துக்குப் பிறகு, ஜீவா இந்தத் தொழிலில் கால்பதித்துப் பிரபலமானார்.

தீபாவளி என்றாலே, எல்லா ஊர்களிலும் ஓவியங்களில் ஜொலித்துக்கொண்டிருந்த சினிமா பேனர்கள் இன்றைக்கு ஃப்ளெக்ஸுக்கு மாறிவிட்டன. இந்த போஸ்டர் ஓவியங்களில் நடிகர்களின் உருவங்களை அவ்வளவு பிரமாண்ட அளவில் பார்ப்பதும், விளம்பரங்களில் இருக்கும் வித்தியாசமான ஐடியாக்களை ரசிப்பதும் அலாதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லாமே பிரின்ட்மயமாகிவிட்டது.

“60-களில் கலை இலக்கியப் பெருமன்றத்தோட முதல் மாநாடு கோவையில் நடந்தப்ப, அப்பா வேலாயுதம்தான் எல்லா வேலைகளையும் செஞ்சார். `ராஜ ராஜ சோழன்’ படத்துக்கு தஞ்சை பெரிய கோயில், `திருவிளையாடல்’ படத்துக்கு கைலாயம் செட், `சிவந்த மண்’ படத்துக்கு ஹெலிகாப்டர் செட் இதெல்லாம் தியேட்டர்ல செஞ்சு அசத்தினவர்.

40 அடி, 60 அடினு கட்அவுட்ல உருவப்படம் செஞ்சு, வெட்டி வைக்கிறதை வேடிக்கை பார்க்கவே நிறைய கூட்டம் வரும். அப்பா காலத்துக்குப் பிறகு, 81-ல இருந்து நான் வரைஞ்சுக்கிட்டிருந்தேன். 2003-2004 கால கட்டத்துல ஃப்ளெக்ஸ் வர ஆரம்பிச்சது. 2006-க்குப் பிறகு, கையில வரைஞ்சு பேனர் வைக்கறது அழிஞ்சே போச்சு. இப்போ 20 நிமிஷத்துல 30 சதுர அடி ஃப்ளெக்ஸ்கூட ரெடி ஆகிடுது. அதனால எல்லாரும் அதை நோக்கித்தான் போறாங்க.

அப்போவெல்லாம் எங்க க்ரியேட்டிவிட்டிக்கு தீனியா சிலது அமையும். `செந்தூரப்பூவே’ படத்துக்கு பேனரைவிட்டு ட்ரெய்ன் வெளியில வர்ற மாதிரி 3-டி டைப்ல பண்ணியிருந்தோம். `ராஜாதி ராஜா’ படத்துக்கு ரஜினி முகம் மட்டும் 10 அடி கட்அவுட்ல வெச்சோம். கண்ணாடியில மரங்கள் பிம்பமா தெரியும். அதை நின்னு பார்க்கறவங்க, டக்னு திரும்பி எதிர்த்திசையில் மரம் இருக்கானு பார்ப்பாங்க. அந்த அளவுக்கு தத்ரூபமா இருந்தது அது.

கையில வரையறப்ப ஓவியம் தெரிஞ்சவங்க மட்டுமே இதுல இருந்தாங்க. கலர் மிக்ஸ் பண்ணி வரையிறது, தூரத்துல இருந்து பார்த்தா வண்ணங்கள் எப்படித் தெரியும் என்பதை சரியா கணிக்கிறதுனு அபாரமான கலர்சென்ஸ் இருந்துச்சு. கட்அவுட்ல கை, தலை முன்னால வர்ற மாதிரி 3-டி டைப்ல பண்றதுனு இருந்தது. இப்ப அந்த க்ரியேட்டிவிட்டி கம்மியாகிடுச்சுன்னு தோணுது” - ஜீவானந்தம் குரலில் வெளிப்படுகிறது ஒரு படைப்பாளியின் வருத்தம்.

ஜீவா சொல்வதை வழிமொழிகிறார் `ஜனனி ஆர்ட்ஸ்’ வெங்கடாசலம். நண்பர்களுக்கு ‘சலம்’. ஓவியங்களைவிட தனது எழுத்து வடிவத்தாலும், வித்தியாசமான ஐடியாக்களாலும் கவர்பவர். நிறைய சினிமா டைட்டில்கள் எழுதியிருக்கிறார்.

‘`ஸ்கூல்ல செருப்பு மாறிடக் கூடாதுனு செருப்புப் பட்டையில பேர் எழுதிக் குடுப்பேன். அதைப் பார்த்த வாத்தியார் ஸ்கூல் போர்டுல ‘வருகை-பதிவு’ எழுதச் சொன்னார். அது சினிமாவுல டைட்டில் எழுதற வரைக்கும் கொண்டுபோச்சு. நான் டைட்டில்ல

எம்.ஜி.ஆர்-ங்கிற பேரைப் பார்த்து கைதட்டியிருக்கேன். அந்தப் பேரை நான் டைட்டில்ல எழுதி, மத்தவங்க கைதட்டறப்ப அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்!'' என்று சிலிர்ப்பாகப் பேசும் சலம், `அவசரபோலீஸ் 100’, `வாழ்க்கைச் சக்கரம்’ போன்ற படங்களில் டைட்டில் டிசைனராக இருந்தவர்.

“பொள்ளாச்சியில ஒரு ஜவுளிக்கடைக்கு வித்தியாசமா விளம்பரம் பண்ணணும்னு சொன்னாங்க. ஒரு ஐடியாவும் தோணலை. தட்டி கட்டி, சாரம் போட்டாச்சு. பெயின்ட், பிரஷ்ஷெல்லாம் எடுத்துட்டு, சாரத்துல உட்கார்ந்து என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன். லைட்டா மழை தூற ஆரம்பிச்சது.

`வித்தியாசமா எதாவது எழுதலாம்னா...மழை!’ - இப்படி மட்டும் எழுதிட்டு இறங்கிட்டேன். கடை திறப்புவிழாவுக்கு முதல் நாள் வரை இது என்ன கடைனு ஊரே பேச்சா இருந்துச்சு” என்று அந்தக் காலத்திலேயே பேனர்களின் வழி வைரல் பண்ணிய வரலாற்றை சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்து கொண்டார் சலம்.

“மொதல்ல எல்லாம் தீபாவளினா எங்களுக்கு ரெண்டு மாசம் முந்தியே கொண்டாட்டம் ஆரம்பிச்சிடும். ரசிகர்கள் சார்பா சினிமா பேனர்கள் வைக்கறதுக்கு ஆர்டர்கள் குவியும். ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுகிட்டு வைப்போம். போட்டின்னா, டிசைன்கள்ல, ஐடியாக்கள்ல போட்டி. ரஜினி ரசிகர்கள், கமல் பேனரை ரசிப்பாங்க. கமல் ரசிகர்கள் வந்து நின்னு, ரஜினி பேனரை ரசிப்பாங்க.

தீபாவளி சமயம். மதுரையில ஒரு கடை விளம்பரம். எந்த ஊர் ஆர்டர் எடுத்தாலும், ஒரு நாள் அந்த ஊரைச் சும்மா சுத்துவோம். அப்படி மதுரையை சுத்தினப்ப, கல்பாலம் வழியா போறப்ப ஒரு ஐடியா தோணிச்சு. அடுத்த நாள் பெரிய சைஸ் பேனரை அங்கே கொண்டு போய் வெச்சோம். கார்னர்ல ‘ஆடைகளின் அரண்மனை உங்களை அழைக்கிறது - மகாராஜா’னு எழுதிட்டேன். கூட இருக்கறவங்கள்லாம் படம் எதுவும் வரையலையானு பார்க்கறாங்க.

அப்புறமா, அந்தப் பெரிய பேனரோட நடுப்பகுதியை கிழிச்சுவிட்டுட்டேன். பஸ்ஸுல, பைக்குல போறவங் களுக்கெல்லாம் அது வழியா மீனாட்சியம்மன் கோயிலோட கோபுரம் தெரியும். இந்த மாதிரியான வேலைகள் செய்யறப்ப கிடைச்ச திருப்தி, கம்ப்யூட்டர் யுகத்துல இல்லைங்கிறது உண்மை” என்கிறார் ‘ஜனனி’ சலம்.

சினிமாத் துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் இதுபோன்ற பேனர் ஓவியர்கள் சிலருக்கு இருந்தது. ஜனனி `சலம்' அப்படித்தான் வாய்ப்புக் கேட்டு பல படிகள் ஏறி, இறங்கி ஒரு சில படங்களில் டைட்டில் எழுதியிருக்கிறார்.சலம், சான்ஸ் கேட்டு நடிகர் பார்த்திபனைப் பார்த்தபோது ஒரு தவறு செய்துவிட்டார்.

`` `புதியபாதை’ சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்ததா, `பொண்டாட்டி தேவை’-ங்கிற படத்தை பார்த்திபன் அறிவிக்கிறார். சில டைட்டில் டிசைன்ஸ் எழுதி, எடுத்துட்டுப் போனேன். ஒரு மாதிரி பார்த்தார். ‘எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க!’னார். ‘விவேக் சித்ராவின்... பொண்டாட்டி தேவை’னு எழுதியிருந்தேன். `விவேக் சித்ரா அளிக்கும்னு எழுதணும்’னு அறிவுறுத்தினார். அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டேன்...” என்கிறார் சலம்.

தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான பேனர் ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா. ஓவியர் சங்கத்தலைவரும் கூட. அவருடைய பல திரைப்பட பேனர்கள் சென்னையின் சாலைகளை பல ஆண்டுகளாக அலங்கரித்தவை. இவரின் திறமை அறிந்து, பெல்ஜியம் நாட்டில், 150 அடி நீள சுவரில், 50 ஆளுமைகளை வரையும் வாய்ப்பு தேடி வந்தது. 51-வதாக அந்த சுவரில் இவருடைய முகமும் இடம் பெற்றிருக்கிறது.

“ஒரு பேனர் வைக்கணும்னா, ஆசாரியில இருந்து சாரம் கட்டற ஆள் வரைக்கும் 15-20 பேரோட உழைப்பு தேவைப்படும். ஒரு வருஷம்லாம் காத்திருந்து போர்டை வாங்கிட்டுப் போயிருக்காங்க. `கவர்னர் பீடி’க்கு நாங்க விதவிதமா பேனர் வெச்சோம். கௌபாய் ஸ்டைல்ல குதிரைகள்ல பீடி பிடிச்சுட்டு வர்ற மாதிரி, வெள்ளைக்காரன் பீடி குடிக்கிற மாதிரில்லாம் வரைஞ்சு எல்லாரையும் திரும்பிப் பார்க்கவெச்சோம். அப்ப நான் எங்கே போனாலும், ‘இவர்தான் கவர்னர் பீடி பேனர் பண்ணது’னு எனக்கு ஒரு பேர் இருந்தது.

இயக்குநர் ஆர்.பார்த்திபன் `உள்ளே வெளியே’ படத்துக்கு வித்தியாசமா வைக்கணும்னு கூப்பிட்டிருந்தார். போனேன். `ஏன் கிருஷ்ணா... ஸ்கூல் ஜாமன்ட்ரி பாக்ஸ், ஸ்கேல்ல எல்லாம் இந்தப் பக்கம் இழுத்தா, திருப்பினா வரிக்குதிரை, அந்தப் பக்கம் இழுத்தா புலி தெரியுமே... அந்த மாதிரி பேனர்ல பண்ண முடியுமா?’னு கேட்டார். `பண்ணலாம் சார்’னு வந்துட்டேன். இரவு முழுக்க உட்கார்ந்து பேப்பரை கட் பண்ணி, டிசைன் செஞ்சு கொண்டு போனேன். பேனரோட இந்தப் பக்கம், அந்தப் பக்கம்னு இல்லாம நேர்ல பார்த்தா மூணாவது இமேஜ் தெரியற மாதிரி பண்ணிட்டு போனேன்.

பார்த்திபன் சார் பார்த்துட்டு அசந்து போயிட்டார். இடது புறமா பார்த்தா ஜெயில்ல ஒரு பார்த்திபன், வலதுபுறம் பார்த்தா ஒரு பார்த்திபன், நேரா பார்த்தா ஒரு பார்த்திபன்னு மூணுவிதமாத் தெரியும். மக்கள் வியந்து போய் பார்த்தாங்க...'' - பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்கே நம்மையும் அழைத்து சென்றார் ஜே.பி.கிருஷ்ணா.

“கமல் அடிக்கடி சொல்றது மாதிரி, புது டெக்னிக்குக்கு நாம மாறித்தானே ஆகணும். இப்பவும் அசிஸ்டன்ட்டுகள் லேப்டாப் தூக்கிட்டு வந்தா ‘பேடு, பேப்பர் எடுத்துட்டு வாங்க’ம்பேன். பேனர் வரையறதுங்கறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். என் சிந்தனைக்குப் பின்னால ஜே.பி.கிருஷ்ணா மாதிரியானவங்க உழைப்பு இருந்தது. இப்ப அதே க்ரியேட்டிவிட்டியை டிஜிட்டலா கொண்டு போறோம். மாற்றம்தானே எல்லாம்!” என்று இந்த மாற்றம் குறித்துச் சொன்னார் இயக்குநர் பார்த்திபன்.

இன்று பேனர் ஓவியங்கள் எங்குமே இல்லை. பெயர்ப் பலகைகளும்கூட டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. பல பேனர் ஓவியர்களும் பிரின்ட்டிங் மெஷின்களை வாங்கிப் போட்டுக் கொண்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் போட்டுத் தருகிறவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால், யாருக்கும் அதில் மகிழ்ச்சி இல்லை. காரணம், எந்திரங்கள் உமிழும் ஃப்ளெக்ஸ் பேனர்களில் அவர்கள் செய்யக்கூடியது எதுவுமே இல்லை என்பதுதான்.

```சொல்லாமலே’ படத்துக்கு, சாரத்துல லிவிங்ஸ்டன் ஒரு ஓவியரா உட்கார்ந்து வரையுற மாதிரி பெயின்ட் டப்பால்லாம் கட்டி, ஒரு கட்அவுட் வெச்சோம். ரெண்டு மூணு நாள் `என்னடா... யாரும் கவனிக்கலையே’னு கவலைப்பட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது... ஒரிஜினலா யாரோ உட்கார்ந்து வரையறதா நெனைச்சுகிட்டு எல்லாரும் போறாங்க. மூணாவது, நாலாவது நாள்ல ரிப்பீட்டா பார்க்கறவங்க ‘என்னடா வரையறவரு இறங்கவே இல்லை’னு பார்த்ததுக்கு அப்புறம்தான், அது வரையுற மாதிரிவெச்ச கட்அவுட்னு எல்லாருக்கும் புரிஞ்சுது.

இப்ப `கபாலி’க்கு 21 தியேட்டர்ல ஃப்ளெக்ஸ் வெச்சோம். மொத்தமா மூணு நாள்தான் டைம். சரசரனு ஃப்ளெக்ஸ் எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி, எடுத்துட்டுப் போய் வெச்சுட்டு வந்துட்டோம். திருப்தியே இல்லை!” - புன்னகையோடு சொன்னாலும் ஜே.பி.கிருஷ்ணாவின் முகத்தில் வருத்தம் ஒன்று மறைந்து இருப்பது தெரிகிறது. அது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பேனர் ஓவியர்களின் வருத்தம்!