ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கோஹ்லியின் ரன்களைப்போல அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், அத்தனை படங்களுக்கும் மத்தியில் சில படங்கள் தனித்துத் தெரியும். அப்படி பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட்டில் உருவாகும் முக்கியமான படங்களின் டீசர்கள் இதோ...

டோலிவுட்

கெளதமபுத்திர சதகர்னி

தமிழில் சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், பரத் நடிப்பில் உருவான `வானம்’ படத்தை இயக்கிய க்ரிஷ் இயக்கும் வரலாற்றுப் படம். படத்தின் முக்கிய ஹைலைட், ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு இது 100-வது படம். மகராஷ்டிராவின் சில பகுதிகளை ஆண்டு வந்த சாதவாகனர் ராஜ்ஜியத்தில் 23-வது அரசர்தான் கௌதமபுத்திர சதகர்னி. கொடியுடன் ஓடும் அரச குதிரையை வைத்து செய்யப்படும் அசுவமேத யாகங்கள் மூலமும், படையெடுப்பு மூலமும் பேரரசை விரிவுபடுத்தியவர். இவரைப் பற்றிய படத்தில்தான் பாலகிருஷ்ணா நடித்துக்கொண்டிருக்கிறார். ஹீரோயினாக ஸ்ரேயா நடிக்கிறார். 2017, ஜனவரியில் வெளியாகவிருக்கிறது படம்.

மல்லுவுட்

கர்ணன்

காஞ்சன மாலா மொய்தீன் காதல் கதையை வைத்து எடுக்கப்பட்ட `என்னு நின்டே மொய்தீன்'க்குப் பிறகு ஆர்.எஸ்.விமல் இயக்கவிருக்கும் படம் `கர்ணன்'. ப்ரித்விராஜ் ஹீரோ, `பாகுபலி’க்கு டஃப் கொடுக்கும் பட்ஜெட், கிராஃபிக்ஸ் எனப் பக்காவாக ப்ளானிங் போய்க்கொண்டிருக்கிறது. சரித்திரக் கதை என்பதால் இதற்காக ஸ்பெஷல் தேடுதலில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் விமல். `2017-ம் ஆண்டில் வெளியாகும்’ என்று சொல்லப்பட்டாலும், 2018-ம் ஆண்டு வரை நீளும் வாய்ப்பு இருப்பதால், அதற்கு முன்பாகவே சில படங்களில் நடித்து முடித்துவர கிளம்பிவிட்டார் ப்ரித்விராஜ்.

லூசிஃபர்

நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக களம் இறங்கும் படம் `லூசிஃபர்.’ நடிகர் மற்றும் கதாசிரியர் முரளி கோபி (`பிரேமம்’ படத்தில் இடம்பெற்ற `களிப்பு...’ பாடலை சபரீஷ் வர்மாவுடன் இணைந்து பாடியவர்) எழுதிய இந்தக் கதை, `ட்ராஃபிக்' படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்குவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக ராஜேஷ் பிள்ளை இறந்துவிட, அது அப்படியே ஒதுக்கி வைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தை இயக்குவதற்காக கையில் எடுத்திருக்கிறார் ப்ரித்வி. ஹீரோவாக மோகன்லால் நடிக்கவிருக்கிறார்.

சாண்டல்வுட்

நாகரஹாவு

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இறந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அவர் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்கிவருகிறது சாண்டல்வுட். 576 வி.எஃப்.எக்ஸ் கலைஞர்களின் இரண்டு வருட உழைப்பு... படத்தை இயக்கியிருப்பது நம்ம `அருந்ததி' இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாதான். இறந்த விஷ்ணுவர்தனுக்கு மரியாதை செய்யும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், விஷ்ணுவர்தனின் 201-வது படம். பழிவாங்கும் நாகம்தான் ஒன்லைன். படம் 2016-ம் ஆண்டு அக்டோபரில் வெளியாகிறது.

ராஜரதா

சென்ற வருடத்தில் கன்னடத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க த்ரில்லர் `ரங்கிதரங்கா'. அந்தப் படத்தின் இயக்குநர் அனுப் பண்டாரியின் அடுத்த படம்தான் `ராஜரதா’. முதல் படத்தை த்ரில்லராகக் கொடுத்தவர், இந்த முறை இயக்கவிருப்பது ரொமான்ட்டிக் படம். `ரங்கிதரங்கா’வில் ஹீரோவாக நடித்த அனுப் பண்டாரியின் தம்பி நிரூப்தான் இதிலும் ஹீரோ. அவந்திகா ஷெட்டி ஹீரோயின். ரிலீஸ் 2017-ம் ஆண்டில்.

பாலிவுட்

ரயீஸ்

`தில்வாலே’, `ஃபேன்’ படங்களுடன் ஷாரூக் கான் நடிக்கத் தொடங்கிய படம் `ரயீஸ்’. 1980-களில் குஜராத்தைக் கலக்கிய அப்துல் லதீஃப் என்கிற சாராய வியாபாரியின் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இது. ஷாரூக்கின் மனைவியாக பாகிஸ்தானைச் சேர்ந்த மஹிரா கானும் ஷாரூக்கைத் துரத்தும் போலீஸ் வேடத்தில் நவாசுதீனும் நடித்திருக்கிறார்கள். சல்மானின் `சுல்தான்' படத்துடனேயே வெளியாகவேண்டிய `ரயீஸ்' சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் 2017, ஜனவரியில் வெளியாகும் என்று அடித்துச் சொல்கிறார் இயக்குநர் ராஹுல்.

ரங்கூன்

ரிவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் நல்ல வரவேற்பு பெற்ற `ஹைதர்' பட இயக்குநரும் இசையமைப்பாளருமான விஷால் பரத்வாஜ் இயக்கிக்கொண்டிருக்கும் படம் `ரங்கூன்'. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நிகழும் கதையாக உருவாகிக்கொண்டிருக்கும் `ரங்கூன்', ஒரு ரொமான்ஸ் சினிமா. ஆர்மி ஆபீஸர் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார். உடன் கங்கனா ரனாவத், சைஃப் அலிகான் நடிக்கிறார்கள். வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் விஷாலே இசையமைக்கிறார். படம் 2017, பிப்ரவரி ரிலீஸ்.

ஹாஃப்கேர்ள் ஃப்ரெண்ட்

2014-ல் சேத்தன் பகத் எழுதிய `ஹாஃப்கேர்ள் ஃப்ரெண்ட்' நாவலின் செல்லுலாய்ட் வடிவம்தான் இந்தப் படம். `ஆஷிக் 2’, இயக்கிய மோஹித் சூரி இயக்குகிறார். காலேஜில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரும் கிராமத்து மாணவன் மாதவ் ஜா. அதே கல்லூரியில் சேர்கிறார் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரியா. இருவருக்கும் இடையிலான நட்பும், குழப்பம் மிகுந்த உறவும், காதலும்தான் கதை. அர்ஜுன் கபூரும் ஷ்ரதா கபூரும் நடித்திருக்கிறார்கள். இணை தயாரிப்பு, இணை திரைக்கதை சேத்தன் பகத். படம் அடுத்த வருடம் சம்மர் ரிலீஸ்.