சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. கொடி தோரணம் கட்டுவது, கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவது, காவடி எடுப்பது எனப் பலவிதமான ரசிகர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ரியாஸ் அல்ட்டிமேட் ரசிகர்.

ரஜினி படம் ரிலீசாகும்போது, முதல் நாள் முதல் ஷோ தொடங்கி, அடுத்த ஒரு வாரம் தியேட்டர்தான் இவரது வீடு. ஸ்பெஷல் ஷோ தொடங்கி, காலை, பகல், மேட்னி, மாலை, இரவு என அத்தனை ஷோவையும் பார்ப்பார்... அசராமல். இதேபோல் மினிமம் ஒரு வாரம் வரை. இந்த நேரத்தில் எப்பேர்பட்ட வேலையாக இருந்தாலும், அவருடைய செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே!

“முன்னெல்லாம் தலைவர் படம் ரிலீஸ்னா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்திட்டிருந்த நான், இப்பல்லாம் ஃபர்ஸ்ட் டே ஆல் ஷோஸ் பார்க்கறேன். `நினைத்தாலே இனிக்கும்’ 40 முறை பார்த்திருக்கேன். `சந்திரமுகி’ 25 முறை பார்த்திருக்கேன். `கபாலி’ படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஆரம்பிச்சு இப்பவும் பார்த்துக்கிட்டே இருக்கேன். தலைவர் படத்தை ரசிகர்கள்ல ஒருத்தனா பார்க்கிறதுல உள்ள சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது. கவுன்ட்டர் எப்படா திறக்கும்னு காத்திட்டிருக்கிறது... ஒரே நேரத்துல அஞ்சு கை உள்ளே நுழையறது... அப்படி டிக்கெட் கிடைச்ச சந்தோஷத்துல கியூவுல நிக்கறவங்க மேல எல்லாம் ஏறி வெளியில வர்றது, படம் பார்க்கிறதுனு அதுல கிடைக்கிற மகிழ்ச்சியே தனி. முதல் நாளெல்லாம் டயலாக் எதுவும் காதுல விழாது. ஆனாலும் எனக்கு ஸ்கிரீன்ல தலைவரை பார்த்துக்கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்” என்கிற ரியாஸ், தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் பி.ஆர்.ஓ-க்களில் ஒருவர்.

`கோச்சடையான்’, `லிங்கா’, `கபாலி’ என ரஜினியின் லேட்டஸ்ட் படங்களுக்கு எல்லாம் ரியாஸ்தான் பி.ஆர்.ஓ.

ரஜினி படத்தை அடுத்தடுத்த காட்சிகள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறவர் இல்லை ரியாஸ். இவருடைய ரஜினி அபிமானம் வேற லெவல்!

ஒவ்வொரு படத்திலும் ரஜினிக்கு என்ன கெட்டப்போ, அந்த கெட்டப்புக்கே மாறிவிடுவதுதான் இவரது ஸ்டைல். `கபாலி’ படம் தொடங்கியதில் இருந்து ரஜினியின் கெட்டப்பிலேயே இருந்த ரியாஸ், சமீபத்தில்தான் தன்னுடைய நிஜத் தோற்றுத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

“தலைவர்கூட எத்தனையோ பேர் வொர்க் பண்ணியிருப்பாங்க. அவங்க யாருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் எனக்குக் கிடைச்சது. முதல் முறையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி தலைவரே தயாரிச்ச `வள்ளி’ படத்துக்கு நான்தான் பி.ஆர்.ஓ” என்று பெருமிதம் வெளிப்படுத்துகிற ரியாஸ், பேசுகிற பத்து வார்த்தைகளில் ஐந்து வார்த்தைகள் `ரஜினி’யாகத்தான் இருக்கிறது.

1980-ல தலைவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சேன். தமிழ்நாட்டுலயே அது 15-வது மன்றம். ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ரசிகர்கள் சந்திப்பு நடக்கும். அப்பதான் டைரக்டர் ராஜசேகர், தயாரிப்பாளர் தாணு சார்னு நிறைய சினிமா ஆட்களோட அறிமுகம் எனக்குக் கிடைச்சுது. பிறகு, பி.ஆர்.ஓ., ஆர்ட்டிஸ்ட் மேனேஜர்னு வளர்ந்து வந்தேன்.

தலைவர்கிட்டருந்து பல விஷயங்களைக் கத்துக்கணும்னு நினைக்கிறேன். முக்கியமா, அவரோட பொறுமை. வாழ்க்கையில எத்தனையோ முறை தோல்விகளை சந்திச்சிருக்கேன். அதுல இருந்து நான் மீண்டு எழுந்து நிக்கறேன்னா, அதுக்கும் தலைவர்தான் காரணம். `சந்திரமுகி’ படத்துல அவர் ஒரு டயலாக் சொல்வார்... `நான் யானை இல்லை. குதிரை. கீழே விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன்'ங்கிற அந்த டயலாக்தான் ஒவ்வொரு முறையும் என்னை எழுந்திருக்கவைக்குது.”

ரஜினியிடம் ஏதாவது உதவி கேட்டிருக்கிறாரா இவர்?

“இதுவரைக்கும் தலைவர்கிட்ட எந்த உதவியும் நான் கேட்டதில்லை. கேட்கவும் மாட்டேன். என்னைக்கும் அவர் தலைவராகவும் நான் ரசிகனாகவும் இருக்கணும். அதுபோதும் எனக்கு” என்கிறார் ரியாஸ்.

ரசிகன்டா...