முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று புதுப்புதுப் பின்னணிப் பாடகர், பாடகிகளால் நிரம்பி வழிகிறது தமிழ்த் திரை இசை. இவர்களில் சிலர் கொஞ்சம் ஸ்பெஷல். யார்? பின்னணிப் பாடகர்களின் வாரிசுகள்தான். தான் இன்னாரின் வாரிசு என்ற அடையாளத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சுயமுயற்சியால் பிரபலமா வதையே இந்த வாரிசுத் தலைமுறையின் விருப்பமாக இருக்கிறது.

சரண்யா ஸ்ரீனிவாஸ்

``அப்பாவோட பாட்டுதான் எனக்குச் சின்ன வயசுல தாலாட்டு. வீட்ல எப்போதும் மியூசிக் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். என்னை அறியாம எனக்குள்ளயும் மியூசிக் வந்துருச்சு. ஆனாலும், எனக்கு மியூசிக் சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு அவருக்குப் பொறுமையோ, நேரமோ இல்லை. அதனால லதா ராம்சந்த்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டேன். ஸ்டெல்லா மாரிஸ்ல பி.காம் பண்ணினேன். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எல்லா மியூசிக் புரோகிராம்லயும் நான் இருப்பேன். ஸ்டேஜ்ல பாடறபோது கிடைச்ச சந்தோஷம் ரொம்பப் பெரிசா இருந்தது. மியூசிக்கே கேரியரா இருந்தா நல்லாருக்குமேனு ஃபீல் பண்ணினேன். அப்பாகிட்ட சொன்னேன்...'' சரண்யாவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்பா இருக்கிறார்.

`` `மியூசிக் ஃபீல்டுங்கிறது நீ நினைக்கிற மாதிரி ஈஸியானது இல்லை. கடினமா உழைக்கணும். நிறைய ஏமாற்றங்கள் வரும். உனக்கு படத்துல பாட வாய்ப்பு கிடைக்கலாம். ஆனா, நீ பாடி முடிச்ச பிறகு அது படத்துல வராமப் போகலாம். அதையெல்லாம் தாங்கிக்கிற மனப் பக்குவத்தை வளர்த் துக்கோ’னு அப்பா சொல்வார்.

அப்பா நிறைய புதுப் பாடகர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கார். ஆனா என்னோட அறிமுகம், தன் மூலமா வரக் கூடாதுங்கிறதுல ரொம்பத் தெளிவா இருந்தார். `உன் திறமையை வெச்சு நீ முயற்சி செய்... அதுல ஏமாற்றங்கள் வரும். அதை யெல்லாம் கடந்துதான் உனக்கான இடத்தைத் தக்க வெச்சுக்கணும்'னு சொன்னார். ஆரம்பத்துல நான் அப்பாகிட்ட நிறைய சண்டை போட்டிருக்கேன். ஆனா, அப்பாவோட வார்த்தைகளோட அர்த்தம் என் சொந்த முயற்சியில நான் ஜெயிச்ச பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுது.

ஏ.ஆர்.ரஹ்மானோட கே.எம்.கன்சர் வேட்டரியோட முதல் பேட்ச் ஸ்டூடன்ட் நான். அங்கே எனக்கு கல்யாண்னு தெலுங்குப்பட மியூசிக் டைரக்டர் அறிமுகமானார். அவர் மியூசிக் பண்ணின `கொஞ்சம் காதல் கொஞ்சம் காபி' படத்துல எனக்கு ஒரு பாட்டுப் பாட வாய்ப்புக் கொடுத்தார். ரொம்ப சந்தோஷமா அதை அப்பாகிட்ட சொன்னேன். தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தாம, என் திறமையால வந்த வாய்ப்புங்கிறதுல அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார்.'' - எக்ஸைட் மென்ட் பொங்கிவழியப் பேசுகிறார் சரண்யா.

அடுத்து?

``பாட்டுதான் வாழ்க்கைனு முடிவு பண்ணினபோது அப்பா சொன்ன அதே வார்த்தைகள்தான் இப்பவும் எனக்கு மந்திரம். நான் பாடுற எல்லா பாடல்களும் படத்துல வரும்னு சொல்ல முடியாது. ஆனா, ஒவ்வொரு முறை பாடறபோதும் எனக்குக் கிடைக்கிற ரெக்கார்டிங் அனுபவம் நிறைய கத்துக் கொடுக்குது. என்னை நான் எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்னு தெரிஞ்சுக்கறேன். நிவாஸ் பொண்ணு சரண்யானு சொல்லிக்கிறதுல பெருமைன்னாலும், சரண்யாவோட அப்பா நிவாஸ்னு சொல்ல வைக்கணும்ங்கிறதுதான் அல்டிமேட் ஆம்பிஷன்.'' அழகாகச் சொல்கிறார் அப்பா பொண்ணு.

உத்ரா உன்னிகிருஷ்ணன்

முதல் பாடலுக்கே தேசிய விருது வாங்கி, தேசத்தையே தன் பக்கம் திருப்பியவர் உத்ரா உன்னிகிருஷ்ணன்.

`சைவம்' படத்தில் இவர் பாடிய `அழகே... அழகே... எதுவும் அழகே...' பாடல், அடுத்தடுத்த விருதுகளை மட்டுமின்றி, வாய்ப்புகளையும் அடுக்கிக்கொண்டிருக்கிறது.

ஏழாம் வகுப்பு படிக்கிற உத்ராவை விருதுகளோ, விருந்துகளோ கொஞ்சமும் சலனப்படுத்துவதில்லை. புத்தகப் பையைக் கழற்றி வீசிவிட்டு விளையாடத் துடிக்கிற துடுக்குக் குழந்தையாகவே இருக்கிறார் இன்னமும். `பிசாசு’ படத்தில், `போகும் பாதை', `ஸ்ட்ராபெர்ரி’ படத்தில் `கை வீசும்', `தெறி’யில் `ஈனா மீனா...’ என வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிற உத்ரா, பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணனின் செல்ல மகள்.

``சின்ன வயசுல இருந்தே மியூசிக் கத்துக்கறேன். டாக்டர் சுதா ராஜாதான் என் குரு. எனக்கு அப்ப 6 வயசு. அப்பா ஒரு சேனல்ல மியூசிக் ஷோவுல ஜட்ஜா இருந்தார். அந்த ஷோவுல னிவாஸ் அங்கிள் பொண்ணு சரண்யா அக்கா, சுஜாதா ஆன்ட்டி பொண்ணு ஸ்வேதா அக்காவோட நானும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினேன். அதே ஷோவுல அப்பாகூட சேர்ந்து `நறுமுகையே...' பாடினேன். அதுதான் என்னை பாப்புலராக்கினது. எங்கண்ணா வாசுதேவ் கிருஷ்ணா, பியானோ வாசிப்பான். அவன்கூட சேர்ந்து நான் பாடுவேன். அப்பா ரெக்கார்டிங் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போய் அங்கே எப்படிப் பாடறதுனு காட்டுவார். இதையெல்லாம் பார்த்து எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிச்சுப் போச்சு...'' உற்சாக அறிமுகம் தருகிறார் உத்ரா.

``சைந்தவி ஆன்ட்டி எங்களுக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட். அப்ப ஜி.வி.பிரகாஷ் அங்கிள் `சைவம்' படத்துல ஒரு குழந்தை வாய்ஸ் தேடிட்டிருந்தார். ஆன்ட்டி என்னைப் பத்தி சொன்னதும், உடனே ரெக்கார்டிங் வரச் சொன்னார். பாடிட்டு வந்தேன். ஜி.வி அங்கிள் உடனே அதை டைரக்டர் விஜய் அங்கிளுக்கு அனுப்பினார். விஜய் அங்கிளுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அப்புறம் அப்பாவும் கேட்டுட்டு, `ரொம்ப நல்லா பாடியிருக்ேகடா'னு சொன்னார்...'' ஹேப்பி பேபியாக பேசுகிறார் உத்ரா.

``அம்மாவும் அப்பாவும் ரொம்ப ஸ்வீட். என்னை எப்பவுமே எதுக்குமே ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க. நான் விளையாடணும்னு சொன்னா, உடனே விளையாட விட்டுடுவாங்க. படிக்கவோ, பாடவோ சொல்லி கட்டாயப் படுத்தினதே இல்லை. `உனக்குப் பிடிச்சதைப் பாடுடா... நீ சின்னக் குழந்தை. இந்த வயசுலயே ரொம்ப கஷ்டப்பட்டுப் பாடினா, உன் குரல் மாறிடும். ரொம்ப ஸ்பெஷலான பாட்டுன்னா பாடு... மத்தபடி ஜாலியா இருடா'னு சொல்லிட்டாங்க. ஆனா, அதே நேரம் மியூசிக்கை இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. எனக்கு நினைச்ச போதெல்லாம் விளையாடணும், பாடணும்னு தோணும்போது பாடணும்'' அழகே அழகாகச் சொல்கிறார்.

சித்தார்த் மகாதேவன்

ஷங்கர் மகாதேவனின் மகன் சித்தார்த் மகாதேவனின் அறிமுகம் நமக்குத்தான் புதுசு. வடக்கில் சித்து செம கெத்து! இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என அத்தனை தென்னிந்திய மொழிகளிலும் சித்தார்த்தின் குரல் ஒலிக்கிறது.

``இசையைக் கேட்டுக்கிட்டே பிறந்தவன் நான். வீடு எப்போதும் பாடகர்களாலயும் மியூசிக் டைரக்டர்களாலயும் நிரம்பி வழியும். என்னோட அஞ்சாவது பிறந்த நாளைக்கு அப்பாவும் அம்மாவும் `கோங்கா’னு ஒரு இசைக் கருவியை எனக்கு கிஃப்ட் பண்ணினாங்க. நானும் என் கசின் சுமில் ஷ்ரிங்கார்புரும் சேர்ந்து பாடறதும், மியூசிக் போடறதுமா வீட்டையே ரணகளமாக்கு வோம். கர்நாட்டிக்கும் ஹிந்துஸ்தானியும் கத்துக்கிட்டேன். டென்த் படிக்கிற வரைக்கும் என்னோட ஃபேவரிட் சப்ஜெக்ட் கெமிஸ்ட்ரி. ஆனா, மியூசிக்ல என் ஆர்வம் அதிகமாக ஆரம்பிச்சதும் எனக்கும் அந்தப் படிப்புக்குமான கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகாதுனு தெரிஞ்சுது. மாஸ் மீடியா முடிச்சேன்...'' ஹஸ்கி வாய்ஸில் சொல்பவருக்கு முதல் அறிமுகம் தந்தது டிவோஷனல் ஆல்பம்.

``நானா என் சொந்த முயற்சியில டிவோஷனல் ஆல்பம், ஜிங்கிள்ஸ்னு பாடிட்டிருந்தேன். மியூசிக் பத்தி படிக்கிறதுக்காக பாஸ்டன் கிளம்பிட்டிருந் தேன். முதல் நாள், `பாக் மில்க்கா பாக்’ படத்துல பாடச் சொல்லிக் கூப்பிட்டாங்க. அது செம ஹிட்... அப்புறம் `தூம் 3’, `ஒன் பை டூ’, `2 ஸ்டேட்ஸ்’, `டி டே’னு வரிசையா நிறைய வாய்ப்புகள்... இத்தனையும் என்னோட திறமைக்குக் கிடைச்ச அங்கீகாரங்கள். தன்னோட செல்வாக்கை வெச்சு என்னை முன்னுக்குக் கொண்டு வரணும்னு அப்பாவும் நினைக்கலை. அப்பாவோட பேரை விசிட்டிங் கார்டா யூஸ் பண்ணிக்கணும்னு நானும் நினைக்கலை. இது போட்டிகள் நிறைஞ்ச ஒரு துறை. நாம பாடறது பிடிக்கலைனா எந்த ஸ்டேஜ்லயும் அதைப் படத்துலேருந்து தூக்கிடுவாங்க... கடைசியில திறமை மட்டும்தான் நிற்கும்.'' - 23 வயது சித்தார்த்தின் பேச்சில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி.

`வடகறி’, `ஈட்டி’ என இரண்டு தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிற சித்தார்த், இன்னும் ஏகப்பட்ட தமிழ் ரிலீஸுக்காக வெயிட்டிங்.

ஆயிஷா எலிசபெத் ஜான்

உஷா உதுப் வாய்ஸின் ரெப்ளிகாவாக இருக்கிறார் ஆயிஷா எலிசபெத் ஜான். இந்தியன் பாப் ஐகான் உஷாவின் மகள் வயிற்றுப் பேத்திதான் ஆயிஷா.

``பிறந்து வளர்ந்ததெல்லாம் கொச்சில. இப்ப நான் லெவன்த் படிக்கிறேன். அம்மா அஞ்சலி, பாட்டி உஷா உதுப்னு வீட்டுக்குள்ள ரெண்டு பெரிய பாடகர்கள் இருக்கிறதால எனக்கு மியூசிக்ல இன்ட்ரஸ்ட் வந்ததுல ஆச்சர்யம் இல்லை.

ஆரம்பத்துல நான் யார்கிட்டயும் முறைப்படி மியூசிக் கத்துக்கலை. யூடியூப் பார்த்தும், படங்கள் பார்த்தும் கத்துக்கிட்டேன். கரோக்கிகூட பாடிப் பழகியிருக்கேன். அப்புறம் பாட்டிகிட்டதான் கத்துக்க ஆரம்பிச்சேன். பாட்டி ரொம்ப ஸ்வீட்.

எப்பவும் எதுக்கும் என்னை விமர்சனம் பண்ண மாட்டாங்க. நான் எப்படிப் பாடறேனோ, அப்படியே பாட அனுமதிப்பாங்க. ஒருத்தரை பயங்கரமா விமர்சனம் பண்ணி, பிரஷர் கொடுத்து, `இப்படிப் பாடு, அப்படிப் பாடு’னு கட்டாயப்படுத்துறதோ, தன்னை மாதிரியோ, வேற யாரோ ஒரு பாடகர் மாதிரியோ பாடவெக்கிறதோ சரியில்லைனு நினைக்கிறவங்க பாட்டி. ``தைரியமா பாடு... தன்னம்பிக்கையோட பாடு...’' இதுதான் பாட்டியோட அட்வைஸ்.

``2010-ம் வருஷத்துல அமெரிக்காவுல நடந்த `இங்க் கான்ஃபிரன்ஸ்'தான் என்னோட முதல் மேடை. 2013-ல மறுபடி கொச்சின்ல நடந்தபோதும் பாடினேன். நான் இதுவரைக்கும் படங்கள்ல பாடினதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வரலைங்கிறதுதான் உண்மை. சினிமாவுலதான் பாடலையே தவிர, நான் பாடாத நாளே இல்லைனு சொல்லலாம். பாட்டி, அம்மா, நான் மூணு பேரும் நிறைய ஃபாரின் டூர் போறோம். இந்தியாவுலயும் ஸ்டேஜ் ஷோஸ்ல பாடுறோம். மூணு தலைமுறையும் சேர்ந்து பாடுறதால எங்களுக்கு `3ஜி'னுதான் பேர். ஆயிஷா ஜான் என்ற பேர்ல என்னோட யூடியூப் சேனல் இருக்கு. பாட்டியும் நானும் சேர்ந்து பாடி, ரெக்கார்ட் பண்ணின பாடல்கள் அதுல இருக்கும். பாட்டிகிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம், அவங்களோட ஸ்டைல். எந்த ஆர்ட்டிஸ்ட்டுக்குப் பாடினாலும் அது உஷா உதுப் பாட்டாதான் அடையாளப்படுத்தப்படும்'' என்கிற ஆயிஷாவுக்கு ஆயிரம் கனவுகள்.

``நிறைய பாடணும்... சொந்தமா பேண்ட் ஆரம்பிக்கணும். தியேட்டர் ஆர்ட்ஸ்லயும் ஆர்வம் உண்டு. கிரிமினல் சைக்காலஜிஸ்ட் அல்லது கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகறதுதான் என் லட்சியம். மியூசிக் தெரபியில ஸ்பெஷலைஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை.''

கனவுகள் பலிக்கட்டும்!

ரம்யா என்.எஸ்.கே

கலைவாணர் குடும்பத்தில் இருந்து கலைத்துறைக்கு வந்திருக்கிற வாரிசுகளில் கவனிக்கத்தக்கவர் ரம்யா என்.எஸ்.கே. கலைவாணரின் பேத்தி!

`காதலில் விழுந்தேன்' படத்தில் `உனக்கென நான்' பாடலில் அறிமுகமாகி, `நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் `சற்று முன்பு' பாடலில் பிரபலமானவர்.

`இருமுக’னில், `ஓ மாயா', `அம்மா கணக்’கில் `உனக்கும் எனக்கும்', `ஒரு மெல்லிய கோடி’ல் டைட்டில் சாங், `நாரதனி’ல் `மாயக்கார மன்மதா' எனத் தன் பாடல் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்.

``ராஜா சார்கூட ஒரு மாசம் அமெரிக்கா டூர் கிளம்பறேன். இப்பவே ஆகாசத்துல பறக்கிற மாதிரி இருக்கு'' என்கிறார் ரம்யா.

அப்பாவோட அப்பா என்.எஸ்.கே., அம்மாவோட அப்பா கே.ஆர்.ராமசாமி. நடிப்புப் பாரம்பர்யம் உள்ள குடும்பத்துலேருந்து வந்திருந்தாலும், எனக்கு நடிக்கிற ஐடியா இல்லை. விஸ்காம் படிச்சேன். அம்மாவுக்கு என்னைப் பாடகியா பார்க்கணும்னு ஆசை. கர்நாட்டிக் மியூசிக்கும், வெஸ்டர்னும் கத்துக்கிட்டேன். கிடார் மாஸ்டர் மூலமா விஜய் ஆண்டனி சார் அறிமுகமும் அவர் மூலமா முதல் பாடல் வாய்ப்பும் கிடைச்சது. என் குரலை நினைச்சு நானே சிரிச்சுக்கிட்டிருந்த டைம்ல திடீர்னு ராஜா சார் மியூசிக்ல பாடற வாய்ப்பு. `நீதானே என் பொன்வசந்தம்’ல `சற்று முன்பு' பாடி முடிச்சதும், `நல்லாருக்கு’னு ராஜா சார் பாராட்டினது எனக்கு ஆஸ்கர் அவார்டே வாங்கின மாதிரி இருந்தது. ராஜா சார் மியூசிக்ல பாடினது கனவா, நனவாங்கிறதே புரியாம இருந்த எனக்கு அடுத்தடுத்து மறுபடி அவர் இசையில பாடற வாய்ப்பு...'' பிரமிப்பு விலகாமல் பேசுகிற ரம்யாவுக்கு ராஜா பாடல்கள் இன்னும் இரண்டு ரிலீஸுக்கு வெயிட்டிங்காம்.

ரம்யாவுக்கு `காஸ்பெல் சிங்கர்' என இன்னொரு முகமும் இருக்கிறது.

``2007-லருந்து இமானுவேல் மேட்ரிஸ் சர்ச் கொயர்ல நானும் இருக்கேன். படத்துக்குப் பாடறதை ஒரு வேலையா செய்யறோம். அது காசு, புகழ் எல்லாம் கொடுக்குது. ஆனா, காஸ்பெல் பாட்டுங்கிறது கடவுளுக்காக மட்டுமே பாடறது. எந்த எதிர்பார்ப்பும் இருக்கிற தில்லை. கடவுள் மேல நமக்கிருக்கிற அன்பை பாட்டு மூலமா வெளிப்படுத்த காஸ்பெல் சிங்கிங் உதவுது. அதுல அதீதமான ஒரு அமைதி கிடைக்குது. அது தனி ஃபீல்...'' கண்கள் மூடி உலகம் மறக்கிறார்.

தாத்தாவைப் பார்த்ததில்லை என்றாலும், அவரைப் பற்றிய தகவல் களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் ரம்யா. ``யார்கிட்டயும் நானா போய் தாத்தா பேரைச் சொல்லி சான்ஸ் கேட்டதில்லை. ராஜா சார்கிட்டகூட நான் பாடி முடிச்ச பிறகுதான் தாத்தா பத்தி சொன்னேன்.

எங்கே பாடப் போனாலும், தாத்தாவைப் பத்திக் கேப்பாங்க. தாத்தாவைப் பத்தி அவங்க சொல்ற விஷயங்களை எல்லாம் கேட்கறப்ப இப்படிக்கூட ஒரு நல்ல மனுஷன் இருக்க முடியுமானு தோணும்...'' - வியக்கிறவருக்கு அவரது பெயருக்குப் பின்னால் உள்ள இனிஷியலே விசிட்டிங் கார்டு. சமீப காலமாக ரம்யாவின் சாயலிலும் தாத்தா தெரிவதாகப் பலர் சொல்கிறார்கள்.

``காரணம், என் ஹேர் ஸ்டைல். காலேஜ் டைம்ல ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணினதுல முடி பயங்கரமா கொட்ட ஆரம்பிச்சது. வேற வழியில்லாம முடியை கட் பண்ணிக்கிட்டேன். அப்புறம் என் ஹேர் ஸ்டைல் இப்படி மாறிடுச்சு. இப்ப என்னைப் பார்க்கிறவங்க எல்லாம் `தாத்தா மாதிரியே இருக்கே’னு சொல்றாங்க. அது இன்னும் கொஞ்சம் கெத்து ஃபீலிங் கொடுக்குது.'' கண்ணடித்துச் சிரிக்கிறார் கலைவாணர் பேத்தி.