Published:Updated:

''பெண் பேயைக் கூட இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா?!’’ ’இ.அ.மு.கு’-க்கு எதிராகக் கொதிக்கும் அப்சரா

''பெண் பேயைக் கூட இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா?!’’ ’இ.அ.மு.கு’-க்கு எதிராகக் கொதிக்கும் அப்சரா
''பெண் பேயைக் கூட இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா?!’’ ’இ.அ.மு.கு’-க்கு எதிராகக் கொதிக்கும் அப்சரா

''பெண் பேயைக் கூட இப்படித்தான் அசிங்கப்படுத்துவீங்களா?!’’ ’இ.அ.மு.கு’-க்கு எதிராகக் கொதிக்கும் அப்சரா

 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்கிற பெயரில் சென்ற வாரம் ரிலீஸ் ஆன தமிழ் படம், அதில் இடம்பெற்ற ஆபாச கருத்துகளாலும் கதையின் நோக்கத்தை வைத்தும் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இயக்குநர் பாரதிராஜாகூட,''கதையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று சதையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இரட்டை அர்த்த வசனங்கள் மலிந்துபோய் கிடக்கின்றன. இலைமறை காயாய் சொன்ன விஷயங்களை எல்லாம் இவர் இலை போட்டு பரிமாறியிருக்கிறார். 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' போன்ற படங்களால் தலைகுனிகிறது நம் தமிழ் சினிமா'' என்று வருத்தப்பட்டுப் பேசியிருந்தார். இந்த நிலையில், சமூக ஆர்வலரும் திருநங்கையுமான அப்சரா ரெட்டி, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற ஆபாசப் படத்தை எடுத்ததற்காகப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் மற்றும் படத்தில் நடித்த கதாநாயகன் கெளதம் கார்த்திக் இருவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்று இன்று (8.5.18) புரொடியூசர் கவுன்சில் முன்னால் போராட்டம் நடத்தியிருக்கிறார். அவரிடம் பேசினோம். 

''படத்துல செக்ஸுக்காக ஏங்குற ஒரு பொண்ணு இறந்து போறா. ஆனா பேயா அலைஞ்சு தன்னோட ஏக்கத்தை அவ தீர்த்துக்க நினைக்கிறதா சொல்லுது படம். இது எத்தனை அபத்தமான கதைக்கரு. இதெல்லாம் ஒரு கதையா. பொண்ணுங்களை நடந்து போறப்ப ஆரம்பிச்சு பல இடங்கள்ல வார்த்தைகளால துன்புறுத்திட்டு இருக்கு சில ஆண் சமூகம். போதாக்குறைக்கு பாலியல் துன்புறுத்தல்கள் வேற, இப்படி குழந்தையில ஆரம்பிச்சு குமரிகள் வரைக்கும் எங்களை திரையில அசிங்கப்படுத்துறது போதாதுனு படத்துல காமிக்கிற பேய் வடிவம் மூலமாவும் அசிங்கப்படுத்துவீர்களா... என்ன கொடுமைங்க. போதாக்குறைக்கு கே, ஹோமோசெக்ஸ் உணர்வாளர்களையும் அசிங்கப்படுத்தியிருக்காங்க.

எங்க திருநங்கை சமுதாயத்துல பலத்த போராட்டத்துக்கு இடையில, கஷ்டப்பட்டு படிச்சு, வேலை செய்து இப்பத்தான் எங்களுக்கான அங்கீகாரத்தை வாங்கியிருக்கோம். கே, ஹோமோசெக்ஸ் மாதிரியான உணர்வுகள் கொண்டவர்களுக்கு இன்னும் எங்களை மாதிரி சமூக அங்கீகாரம் கிடைக்கலை. சொல்லப்போனா, இப்பத்தான் கே, ஹோமோ செக்ஸ் உணர்வாளர்களை சமுதாயம் நிமிர்ந்து பார்க்கவே ஆரம்பிச்சிருக்கு. இப்பப் போய், அவங்களை அசிங்கமா திரையில காண்பிக்கிற உங்க எண்ண அழுக்குகளால அவங்க வெளியில நடமாட முடியாம உள்ளேயே புழுங்கி செத்திடுவாங்கங்கிற நிதர்சனம், அழுக்குகள் நிரம்பின உங்க எண்ணத்துக்கும் மூளைக்கும் புரியுமா இயக்குநரே?

 இந்தப் படம் பத்தி தெரியாம குழந்தைகளோட திரையரங்குக்கு போகப் போறவங்களை நினைத்து பார்த்தா மனசு பகீர்ங்குது. நிஜத்துல நடக்கிறதைத்தான் சினிமாவுல காட்டுறோம்னு எல்லா இயக்குநர்களும் ஒரு சப்பைக்கட்டைப் பதிலா வைச்சிருப்பாங்க. சொல்லுங்க இயக்குநரே... பேயா பெண்கள் அலையுறாங்களா..?

 படத்துல வர்ற டயலாக்குகள் எல்லாம் ஆபாசம், வக்கிரம். பொண்ணுங்களை செஞ்சது போரடிச்சு போச்சு... அதான் பையன்களை டிரை பண்றோம்னு வைக்கிறதுக்கு எல்லாம் மிகமிக வக்கிரமான மனசு வேணும். உங்க மனசைப் பத்தி இப்போ எங்களுக்குப் புரிஞ்சு போச்சு. 

படத்துல நடிக்கிறதுங்கிறது திறமை, பணம், சமூகத்துல ஒரு அந்தஸ்து வேணுங்கிறதுக்காகதான். முத்துராமன் மாதிரியான பாரம்பர்யமான குடும்பத்துல இருந்து வந்த கெளதம் கார்த்திக் இந்தப் படத்துல நடிக்கிறது மிக மோசம். இந்தப் படத்தை பார்க்கிற இளசுகளுக்கு இவங்க கிளாஸ் எடுக்கிற மாதிரி ஆகிடாதா?!

இந்தப் படத்தோட டைரக்டர் ஒரு பேட்டியில, 'நீங்க இந்தப் படத்துக்கு எதிரா போர்க்கொடி தூக்கிட்டுப் போனா எங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும்னு சொல்லியிருக்காரு. தவிர, தன் கையே தனக்கு சொர்க்கம்னு வேற கிண்டல் பண்ணியிருக்காரு. இவங்களுக்கெல்லாம் பெண்களை எப்படி மதிக்கணும், நடந்துக்கிடணும், சமூகத்துல எப்படி பேசணும்னு ஒரு கிளாஸ் எடுத்தால்கூட பத்தாது. அதான், இதை எடுத்த இயக்குநர், நடிச்ச கெளதம் கார்த்திக் மேல ஆக்‌ஷன் எடுக்கணும்னு கமிஷனர்கிட்ட பெட்டிஷன் கொடுத்திருக்கேன். இன்னைக்கு நடக்குற பிரஸ் மீட்ல விஷால் கலந்துக்கிறதா சொல்லியிருக்கார். 

தயாரிப்பாளர்களே... இந்த மாதிரி தரம் குறைஞ்ச படங்களை எடுத்து அது மூலமா அடுத்த தலைமுறையை கெடுத்து உங்க வயிறு வளரணும்னு நினைக்காதீங்க ப்ளீஸ்'' என்று காட்டமாக சொல்லி முடித்தார் திருநங்கை அப்சரா. 

அடுத்த கட்டுரைக்கு