Published:Updated:

சிவகார்த்திகேயனுடன் முதல் படம்! என்ன விசேஷம் வைத்திருக்கிறார் ராஜேஷ்.எம்!?

உ. சுதர்சன் காந்தி.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பவர், எம்.ராஜேஷ். படத்தின் அப்டேட்ஸ் இது.

சிவகார்த்திகேயனுடன் முதல் படம்! என்ன விசேஷம் வைத்திருக்கிறார் ராஜேஷ்.எம்!?
சிவகார்த்திகேயனுடன் முதல் படம்! என்ன விசேஷம் வைத்திருக்கிறார் ராஜேஷ்.எம்!?

பொன்ராம் இயக்கியிருக்கும் `சீமராஜா' படத்தின் ஷூட்டிங் முடிந்து, மே 15- ம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் `இன்று நேற்று நாளை' ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதும், அப்படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் குறித்து இயக்குநர் ராஜேஷை தொடர்புகொண்டு பேசினோம். 
 

படத்துக்கான வேலைகள் எந்தளவுல இருக்கு? 

``இப்போ ஸ்கிரிப்ட் வொர்க்தான் பண்ணிட்டு இருக்கேன். பூஜைதான் போட்டிருக்கோம். ஹீரோயின், டெக்னீஷியன்ஸ்னு எல்லோர்கிட்டேயும் பேசிட்டிருக்கோம். இன்னும் எதுவும் கன்ஃபார்ம் ஆகலை. முழுக்க முழுக்க படம் ஃபேமிலி என்டர்டெயினரா இருக்கும். சிவாவுக்குக் குழந்தைகள், பெண்கள்னு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். `எல்லோரும் என்ஜாய் பண்ணி கொண்டாடுற படமா இருக்கணும் சார்'னு என்கிட்ட சொன்னார். எனக்கும் அதே மைண்ட்தான் இருந்துச்சு. 

இந்தப் படத்துல சிகரெட், டாஸ்மாக், குடிக்குற சீன்னு எதுமே இருக்காது. ஒரு ஃப்லிம் மேக்கரா எனக்கு அடுத்த லெவலுக்குப் போகும்போது இது மாதிரியான விஷயங்களைத் தவிர்க்கிறது நல்லதுனு தோணுச்சு. அதனால முழுக்க முழுக்க ஜாலி கலாட்டா மட்டும்தான் இந்தப் படத்துல இருக்கும்!"

`வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல வசனம் எழுதிட்டு, இப்போ அவரை டைரக்ட் பண்ணப்போறீங்க. இது எப்படி இருக்கு? 

``ரொம்ப சந்தோசமா இருக்கு. அவர் சேனல்ல இருந்தபோதே அவரோட நடவடிக்கைகள், காமெடி, ஹியூமர் சென்ஸ், மிமிக்ரி எல்லாமே  மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல இருந்து இன்னைக்கு வரை சிவாவோட வளர்ச்சி ரொம்ப பெரிசு. அவருக்குனு ரசிகர் கூட்டமே இருக்காங்க. இந்தக் குறைவான நேரத்துல இவ்ளோ பெரிய இடத்துக்கு வர்றது சாதாரண விஷயமில்ல. அதற்கு காரணம் அவரோட உழைப்புதான். ரொம்ப சின்ஸியரான நபர். எந்தச் சூழ்நிலையிலும் தப்பாகிறக்கூடாதுனு ரொம்ப தெளிவா ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து பண்றார். "

சந்தானம் ஹீரோவா வெச்சு படம் பண்ணறதா இருந்துச்சே ! அது எப்போ ? 

``இதை முடிச்சிட்டு பண்ணப்போறோம். அவர் இப்போ `தில்லுக்கு துட்டு 2' படத்துல பிஸியா இருக்கார். ஸ்டுடியோ கிரீன்ல கமிட்மென்ட் இருந்துச்சு. சிவாவுக்கும் கதை பிடிச்சிருந்தது. அதனால், இதை முதல்ல பண்ணப்போறோம்.  "
 

விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் மாறி  ராஜெஷ் - சிவகார்த்திகேயன் எப்போ நடந்துச்சு?  

"விக்னேஷ் சிவன் தான் பண்ற மாதிரி இருந்துச்சு. அவர் ஸ்கிர்ப்ட் வொர்க் பண்ண டைம் கேட்டிருக்கார். அவர் சிவாவுக்குதான் ஸ்கிர்ப்ட் எழுதிட்டு இருக்கார். அடுத்து அவர் சிவாவுக்கு படம் பண்ணுவார்னு நினைக்கிறேன். என் ஸ்கிரிப்ட் ரெடியா இருந்ததுனால, நான் முதல்ல படம் பண்ண வேண்டியதாகிடுச்சு. இந்தப் படத்துக்கான நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் பத்தின செய்தியை சீக்கரமா சொல்றேன்.