Published:Updated:

“நெருப்புடா” விசில்காரர்!

“நெருப்புடா” விசில்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
“நெருப்புடா” விசில்காரர்!

“நெருப்புடா” விசில்காரர்!

“நெருப்புடா” விசில்காரர்!

“நெருப்புடா” விசில்காரர்!

Published:Updated:
“நெருப்புடா” விசில்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
“நெருப்புடா” விசில்காரர்!

'இறுதிச்சுற்று', `மனிதன்', `இறைவி' எனத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடிக் கொண்டிருப்பவர் விஜய்நாராயண். `கொடி'யில் `ஏய்... சுழலி' எனத் தன் குரலால் இளசுகளைச் சுழலவிட்டுக்கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பாடகர் விஜய்நாராயணுடன் ஒரு ஜாலி சாட்டிங்!

“நெருப்புடா” விசில்காரர்!

``இசைப்பயணம் எங்க இருந்து ஆரம்பிச்சது?''

``பிறந்தது மும்பை. சென்னை, டெல்லினு வளர்ந்தேன். சென்னையில இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தப்போதான், `தமிழ் ராக் பேண்ட்' ஆரம்பிச்சோம். டி.வி ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்டோம். பிறகு,  `சிருஷ்டி'னு வேறொரு பேண்ட் உருவாக்கி, சன் டி.வி `ஊ லா லா' ஷோவுல கலந்துகிட்டோம். ரஹ்மான் சார் ஜட்ஜா கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சியில, நாங்கதான் வின்னர். அப்புறம் எங்க டீம் ஆட்கள் வேற வேற வேலைகள்ல பிஸி ஆகிட்டாங்க. நானும் வேலையை விட்டுட்டு, எம்.பி.ஏ முடிச்சுட்டு ரெண்டு வருஷமா சிட்னியில வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நிறைய நிகழ்ச்சிகள்ல பாடுனது, ரஹ்மான் சாரோட ஸ்டூடியோவுல ரெக்கார்டிங் பண்ணது... நிறைய ஸ்வீட் மெமரீஸ் எங்களுக்குள்ள இருக்கு!''

``ரஹ்மான் மியூசிக்ல பாடுன அனுபவம்?''


``ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. அவர்தான் என்னை ரஹ்மான் சார்கிட்ட கொண்டுபோனார். `ராவணன்' `கடல்', `எந்திரன்'னு அவரோட மியூசிக்ல பல பாடல்களுக்கு டிராக் வாய்ஸ் கொடுத்திருக்கேன். `ஏலே கீச்சான் வந்தாச்சு...' பாட்டுல, `வாலே கொண்டாலே' போர்ஷன் பாடுனதை இப்போ நினைச்சாலும், அவ்ளோ மகிழ்ச்சி!''

“நெருப்புடா” விசில்காரர்!

``சந்தோஷ் நாராயணனுக்குப் ஃபேவரைட் ஆனது எப்படி?"

``மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டனும், பிரதீப்பும் ஒரு நிகழ்ச்சியில அறிமுகமானாங்க! சந்தோஷ் அண்ணாவை அங்கே பார்த்தேன். அப்புறம் `இறுதிச்சுற்று' படத்தோட இசைப்பணிக்காக அவர் சிட்னி வந்திருந்தப்போ, கூப்பிட்டு வேலை கொடுத்தார். ஒரு பாட்டுக்கு என்னென்ன தேவையோ, அதை பெர்ஃபெக்டா கொண்டு வரணும்னு நிறைய மெனக்கெடுவார். என் மியூசிக்கல் பயணத்துல சந்தோஷ் அண்ணாவோட பங்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. `இறுதிச்சுற்று'ல நான் பாடுன, `மாயவிசை...'தான் என்னோட கேரியருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து, `இறைவி', `கொடி' படங்களிலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். சின்னப் பங்களிப்பு கொடுத்தாலும் அதுக்கான அங்கீகாரம் கொடுக்குற நல்ல மனுஷன். குறிப்பா சொல்லணும்னா, போன வருடம் ஸ்டூடியோவுல கேஷூவலா ஒரு விசில் மியூசிக்கை ரெக்கார்ட் பண்ணியிருந்தேன். எந்தப் படத்துக்காகப் பண்ணேன்னு எனக்கே மறந்துபோச்சு. ஆனா, `கபாலி'யில `நெருப்புடா' பாட்டுக்கு அந்த விசில் சவுண்டைப் பயன்படுத்துனதோட, அதுக்காக கிரெடிட்ல என்னோட பெயரைப் போட்டார், சந்தோஷ். ஐ லவ் யூ அண்ணா!''

``ஐ.டி கம்பெனி வேலை, இசை... ஒரேநேரத்துல ரெண்டையும் எப்படிச் சமாளிக்கிறீங்க?''

``டெக்னாலஜி ரொம்ப வளர்ந்திருச்சு. வீட்டுலேயே ரெக்கார்டிங் செட்டப் இருக்கு. ஸ்டூடியோவும் இருக்கு. அதனால, பெரிய சவால் இல்லை. பெரும்பாலும் வார இறுதியை இசைக்காக ஒதுக்கிடுவேன். தேவைப்பட்டா, விடிய விடியகூட வேலை பார்ப்பேன். ஸோ, சிம்பிள்!''

- ந.புஹாரிராஜா