Published:Updated:

'கோர்ட்’ சினிமாக்கள்!

'கோர்ட்’ சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
'கோர்ட்’ சினிமாக்கள்!

'கோர்ட்’ சினிமாக்கள்!

'கோர்ட்’ சினிமாக்கள்!

'கோர்ட்’ சினிமாக்கள்!

Published:Updated:
'கோர்ட்’ சினிமாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
'கோர்ட்’ சினிமாக்கள்!

சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, திருப்பங்களும் `திடுக் திடுக்'களுமாகப் பரபரப்பு கூட்டுபவை நீதிமன்றங்கள்தான். இந்த நீதிமன்றங்களை வைத்து ‘கோர்ட் ரூம் டிராமா’ என்ற ஜானரே உருவாகியிருக்கிறது. அந்த ஜானரில் மிஸ் பண்ணக் கூடாத சில படங்கள் இவை...

'கோர்ட்’ சினிமாக்கள்!

12 Angry Men:

க்ளாஸிக் சினிமா என ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் இது. நியூயார்க் நகரில் 18 வயது இளைஞன் ஒருவன் தன் அப்பாவைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்படுகிறான். அவனுக்கு மரண தண்டனை அளிக்கலாமா வேண்டாமா என 12 பேர் கொண்ட குழு விவாதிப்பதுதான் கதை. ஆரம்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே அந்த இளைஞன் குற்றமற்றவர் எனச் சொல்வார். விவாதம் வளர வளர, முடிச்சுகள் அவிழ அவிழ ஒவ்வொருவராக மனம் மாறுவார்கள். ஒரே அறையில் நடந்தாலும் கொஞ்சமும் போரடிக்காத சினிமா. சிறந்த படங்கள் பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும் எவர்கிரீன் க்ளாஸிக்.

'கோர்ட்’ சினிமாக்கள்!

Witness for the Prosecution:

முந்தையப் படம் ரிலீஸான அதே ஆண்டில்தான் இந்தப் படமும் ரிலீஸானது. அகதா கிறிஸ்டியின் நாடகத்தைத் தழுவி வந்த படம். 1950-களிலேயே அபார வசூல் அள்ளிய சினிமா இது. ஒரு விதவையைக் கொன்ற வழக்கில் கைதாகிறான் லியோனார்டு என்ற இளைஞன். அவன் அப்பாவி எனக் கருதும் மூத்த வக்கீல் ஒருவர் அவனுக்காக வாதாடி எதிர்த்தரப்பின் வாதங்களைச் சிதறடிக்கிறார். ஆனால் பெரிய ட்விஸ்டாக லியோனார்டின் மனைவியே அவனைக் கொலைகாரன் என சாட்சி சொல்கிறாள். அடுத்தடுத்து நடக்கும் விறுவிறு சம்பவங்களும் க்ளைமாக்ஸ் `திடுக்'கும் ரசிகர்களை `அட!' சொல்ல வைத்தன.

'கோர்ட்’ சினிமாக்கள்!

The Lincoln Lawyer:

இன்டெர்ஸ்டெல்லார் நாயகன் மேத்யூ மெக்கானகே நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் சினிமா. வழக்கமாக மற்ற கோர்ட் ரூம் டிராமா படங்களில் ஹீரோ அப்பாவிகள் தரப்பில்தான் ஆஜராவார். ஆனால் இதில் ஹீரோ கொலைகாரனுக்கு ஆதரவாக ஆஜராவார். அப்புறம் எப்படி அவர் ஹீரோ? அதுதான் படத்தின் பலம். கொலைகாரனுக்காக வாதிட்டாலும் கொஞ்சமும் உறுத்தாத வகையில் திரைக்கதையில் மெனக்கெட்டிருப்பார்கள். இதிலும் ஒரு எதிர்பாராத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உண்டு.

'கோர்ட்’ சினிமாக்கள்!

Inherit the Wind:

அமெரிக்க வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஓர் ஆசிரியர் தடைகளை மீறி டார்வினின் பரிணாமக் கொள்கையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, அது மத உணர்வுகளுக்கு எதிரான செயல் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது. அறிவியலும் மதமும் தத்தமது வாதங்களுடன் இரு பிரிவாக மோதிக்கொண்ட நிஜ சம்பவத்தை அப்படியே கண் முன் காட்டியது இந்த சினிமா. விளைவு, படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படத்தை ஹாலிவுட்டில் மட்டும் எக்கச்சக்க தடவை ரீமேக் செய்திருக்கிறார்கள்.

'கோர்ட்’ சினிமாக்கள்!

பிங்க்:

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். ஓய்வுபெற்ற வயதான வக்கீல் அமிதாப், தன் காலனியில் குடியிருக்கும் டாப்ஸிக்கும் அவரின் தோழிகளுக்கும் ஏற்படும் பிரச்னையைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதுதான் கதை. பெண்ணியம், பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை போன்றவற்றை போகிறபோக்கில் வசனங்களால் போட்டுத்தள்ளிய `பொளேர்' சினிமா. மனைவியோ, காதலியோ செக்ஸுக்கு ‘நோ’ சொன்னால் அது ‘நோ’ தான் என அழுத்தமாகப் பேசிய படம்!

'கோர்ட்’ சினிமாக்கள்!

தி கோர்ட்:

இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு. மலையாளப் படங்களுக்கு நாங்கள்தான் சவால் என்ற கங்கணத்தோடு களமிறங்கி யிருக்கும் மராத்திய சினிமாவுலகின் குறிஞ்சிப்பூ. ஒரு வயதான நாட்டுப்புற பாடகரின் வழியே இந்திய அரசியல் அமைப்பைக் கேள்வி கேட்க வைத்த தைரிய சினிமா. இத்தனைக்கும் இயக்குநருக்கு இதுதான் முதல் படம். மொழிப் பாகுபாடின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அனைத்துக்கும் மகுடமாய் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கும் இந்தப் படம் அனுப்பி வைக்கப்பட்டது.

'கோர்ட்’ சினிமாக்கள்!

விதி:

தமிழிலும் கோர்ட் ரூம் டிராமாக்கள் நிறைய வந்திருக்கின்றன. ‘பராசக்தி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘வில்லாதி வில்லன்’, ‘மெளனம் சம்மதம்’ என எக்கச்சக்க கமர்ஷியல் படங்கள் வந்தாலும் க்ளாஸிக் உதாரணம் ‘விதி’ படம்தான். ‘பிங்க்’ படத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்ணியம் பேசிய சினிமா. சுஜாதா, பூர்ணிமா பாக்கியராஜ் இருவரும் போட்டி போட்டு நடித்ததால் ரீமேக் என்ற விமர்சனத்தைத் தாண்டி வசூல் மழையில் குளித்தது இந்தப் படம். ஹீரோயினை மையமாக வைத்து தமிழ்நாட்டில் 500 நாட்கள் ஓடிய மிகச் சில படங்களிள் இதுவும் ஒன்று.

- நித்திஷ்