வேலை விஷயத்தில் ஹாலிவுட் நடிகைகளின் கமிட்மென்ட் `அதுக்கும் மேல' ரகம். ரிட்டையர்ட்மென்ட் வயதை நெருங்கினாலும் அசராமல் பேய்த்தனமாக உழைக்கிறார்கள். ஃபிட்னஸிலும் அதீத கவனம் செலுத்துகிறார்கள். அப்படி, வேலை அண்ட் பிட்னஸ் இரண்டிலும் கச்சிதமாகப் பயணிக்கும் சில ஐம்பதைத் தாண்டிய ஹீரோயின்களின் டிட் பிட்ஸ் குறிப்புகள்.

ஷெரான் ஸ்டோன்

ஹாலிவுட் சில்க் ஸ்மிதா. கண்களால் சொக்கவைக்கும் பேரழகி. 1980-ல் சினிமாவில் அறிமுகமானவருக்கு இப்போது 58 வயது. ஆனாலும் அசராமல் இளைய தலைமுறைக்கு ஈடு கொடுத்து நடிக்கிறார். தொடக்கத்தில் கிடைத்த ரோல்களில் எல்லாம் நடித்தவரின் ரேஞ்ச் `பேஸிக் இன்ஸ்டிங்ட்' படத்தில் நடித்தபின் ராக்கெட் வேகத்தில் எகிறியது. அன்று ஏறிய கிராஃப்பை இன்று வரை டெம்ப்போ குறையாமல் பார்த்துக்கொள்வதில் இருக்கிறது ஷெரானின் கடின உழைப்பு!

ஜெனிஃபர் டில்லி

கனட - அமெரிக்க கொலாப்ரேஷனில் பிறந்த பியூட்டி. 1984-ல் தொடங்கிய இவரின் கலைப்பயணம் இன்றுவரை நான் ஸ்டாப்பாய் செல்கிறது. டெடி பியர் போல இருந்தாலும் ஃபிட்னஸில் கில்லி. பார்க்க நாற்பதைத் தொடுபவர் போல இருந்தாலும் நிஜ வயது 58. `லெட் இட் ரைட்', `மேட் இன் அமெரிக்கா', `ப்ரைட் ஆஃப் சக்கி', `ஸ்டூவர்ட் லிட்டில்' என எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். `புல்லட்ஸ் ஓவர் பிராட்வே' படத்திற்காக ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு தொழில் சுத்தம். மேடம் போக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் என்பது அடிஷனல் செய்தி.

மேரி லூயிஸ் பார்க்கர்

எனக்கு 52 வயது என இவர் சூடம் ஏற்றி அடித்துச் சொன்னாலும் நம்ப ஆளில்லை. 1989-ல் தொடங்கிய இவரின் கலைப்பயணம் 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகப் பயணிக்கிறது. சின்னத்திரை, பெரியத்திரை இரண்டிலும் பொளந்து கட்டியவர். `ரெட் ட்ராகன்', `ரெட்', `ரெட் - 2' என இவருக்கும் சிவப்பிற்கும் அவ்வளவு ராசி. கோல்டன் குளோப் விருதுகளை வரிசையாக ஷோக்கேஸில் அடுக்கி வைத்திருக்கிறார். மேடம் சிறந்த எழுத்தாளரும்கூட. இவரின் கட்டுரைகள் புத்தகமாக வெளியாகியிருக்கின்றன.

ஜினா ஹெர்ஷன்

54 வயதாகும் ஜினாவுக்கு நடிகை, பாடகர், எழுத்தாளர் என ஏகப்பட்ட முகங்கள் உண்டு. 1981-ல் துணை நடிகையாக துக்கடா ரோலில் நடிக்கத் தொடங்கியவர் லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்ததன் பின்னால் அசுர உழைப்பு இருக்கிறது. தொலைந்துபோன தன் பூனையைப் பற்றியும் புத்தகம் எழுதுவார், குழந்தைகளைத் தூங்கவிடாத பேய்க்கதைகளையும் எழுதுவார். `காக்டெயில்', `பவுண்ட்', `தி இன்ஸைடர்' என நிறைய படங்களில் வெரைட்டி விருந்து வைத்தவர். இவரின் கன்னக்குழியில் இன்னமும் தவறி விழுகிறார்கள் ரசிகர்கள்.

மோனிகா பெல்லூச்சி

இத்தாலியில் பிறந்து மொத்த உலகத்தையும் கிறங்கடித்த சொப்பனசுந்தரி. 13 வயதில் மாடலாக கேமரா முன்னால் தோன்றியவருக்கு 52 வயதாகியும் போரடிக்கவே இல்லை போல. கை தூக்கி முடிகோதும் இவரின் மேனரிசத்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். `மெலினா' என்ற ஒரே படத்தின் மூலம் ஸ்டேடியம் தாண்டி சிக்ஸ் அடித்த ஒல்லி கில்லி. கடந்த ஆண்டு வெளியான `ஸ்பெக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் உலகின் வயதான பாண்ட் கேர்ள் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.

எலிசபெத் ஸூ

1984-ல் `கராத்தே கிட்' படத்தில் அறிமுகமான எலிசபெத்துக்கு இப்போது அகவை 53. `பேக் டு தி ஃபியூச்சர்' தொடங்கி `ஹாலோ மேன்' வரை சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் நிறைய நடித்தவர். `லீவிங் லாஸ் வேகாஸ்' என்ற ஒரே படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்தவர். தங்கநிற முடியும் வொர்க் அவுட் செய்த உடலும்தான் ஸூவின் அடையாளங்கள். காதல் வாழ்க்கையில் பலருக்கு இவர் ரோல்மாடல். இயக்குநர் டேவிஸ் ஹுஜன்ஹைமை மணமுடித்த இவரின் திருமண வாழ்க்கைக்கு 22 வயது!

டயான் லேன்

ஷெரானுக்கும் முன்னால் சினிமாவிற்கு வந்தவர். 1979-ல் ஹாலிவுட்டில் அறிமுகமானவருக்கு இப்போது வயது 51. ஒரு படத்தில் ஹீரோயினாகவும் இன்னொரு படத்தில் ஹீரோவின் அம்மாவாகவும் அடுத்தடுத்து நடிக்கும் நடிப்புச் சூறாவளி. சூப்பர்மேனின் ஆஸ்தான அம்மா. அடல்ட்ஸ் ஒன்லி க்ளாஸிக்கான `அன்ஃபெய்த்புல்' படத்திற்காக ஆஸ்கார், கோல்டன் குளோப் என அத்தனை விருதுகளையும் கோணிப்பையில் அள்ளியவர். அந்தப் பளீர் அரிசிப்பல் சிரிப்பிற்கு மயங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

- நித்திஷ்