Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

•     `ஷமிதாப்' படத்துக்குப் பிறகு படவாய்ப்பு இல்லாமல் போனதால் தன் அப்பாவின் `சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் அக்‌ஷராஹாசன். அந்தப்படமும் பாதியில் நிற்க, இப்போது அக்கா ஸ்ருதிஹாசன் முயற்சியால் அஜித் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். தவிர, விஷாலின் `துப்பறிவாளன்' படத்திலும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. அக்கா டா!

சினிமால்

•   இசையமைக்க வந்த சித்தார்த் விபினுக்குப் பிடித்தது என்னவோ நடிப்புதான் போல. இசையமைக்கக் கேட்டு வரும் இயக்குநர்களிடம் தன் நடிப்பு ஆசையையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. சில படங்களில் தலைகாட்டியவர், நகுல் நடிக்கும் `பிரம்மா.காம்' படத்தில் இரண்டாவது ஹீரோ ஆகிவிட்டார். இவருக்கு ஜோடி ஆஷ்னா சவேரியாம். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

•   ஜல்லிகட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பில் அங்கம் வகிக்கும் எமி ஜாக்ஸன், சமீபத்தில் பீட்டா பிரசாரப் பாடல் ஒன்றில் நடித்துக் கொடுத்திருக்கிறார். விரைவில் அந்தப் பாடல் ரிலீஸ் ஆகிறது. பிறகென்ன? `எமி ஜாக்ஸன் நடிக்கும் 2.0 படத்தைத் தடை செய்யவேண்டும்' என இப்போதே போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கின்றன சில அமைப்புகள். என்னமா இப்டி பண்றியேமா!

•     விஜய்சேதுபதி நடித்த அரைடஜன் படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகிவிட்டது. பல்வேறு பிரச்சினைகளால் பெட்டிக்குள் முடங்கிய `மெல்லிசை', `இடம் பொருள் ஏவல்' படங்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரிலீஸ் செய்கிறார்களாம். இதில், `இடம் பொருள் ஏவல்' படத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விஜய்சேதுபதியே களத்தில் இறங்கி இருக்கிறாராம். ரைட்டு!

•   `அழகு குட்டி செல்லம்' படத்தில் நடித்த கிரிஷா கரூப் காட்டில் இப்போது அடைமழை. `அழகு குட்டி செல்லம்' இயக்குநரின் அடுத்த படத்திலும், `கூட்டாளி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஷிவ் கோபால் வர்மா இயக்கும் `நர்த்தகி' என்ற பாலிவுட் படத்திலும் நடன மங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார். இனி எல்லாம் சுகமே!

• இன்னும் `ரீமேக்'கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார் மித்ரன்.ஆர்.ஜவஹர். மூன்று தெலுங்கு, ஒரு மலையாளப் படங்களை ரீமேக் செய்த மித்ரன், தற்போது `100 டிகிரி செல்சியஸ்' என்ற மலையாள திரில்லர் படத்தை ரீமேக் செய்கிறாராம். ஐந்து பெண்களை மையப்படுத்திய இப்படத்துக்காக இப்போது ஹீரோயின்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். செம!

சினிமால்

•    உதயநிதி படம் டிராப் ஆன சில நாட்களிலேயே `மாவீரன் கிட்டு' படத்தை ஆரம்பித்தார் சுசீந்திரன். முழுப்படமும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் நிலையில், கலையரசன், நிகிலா விமல் நடிக்கத் தனது அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் சுசீந்திரன். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்துக்கும் தன் வழக்கமான டெக்னிக்கல் டீம்தான். புல்லட் ரெயில்!

• மிஷ்கினின் `துப்பறிவாளன்' படத்துக்குப் பிறகு, அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்க, சொந்தத் தயாரிப்பில் நடிக்கிறார் விஷால். சிவாஜி கணேசனின் `இரும்புத்திரை' தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். ஜார்ஜ் சி வில்லியம்ஸ், ரூபன், முத்துராஜ் என `தெறி' டீம் இதில் பணியாற்றுகிறது. தெறிக்க விடுங்க!

•    முழுக்க மழையில் எடுக்கப்பட்ட `மழை' படத்திற்குப் போட்டியாக இருக்குமாம், ‘சேட்டை’ கண்ணன் இயக்கும் `இவன் தந்திரன்' படம். ஏனெனில், இப்படத்தில் மழையும் ஒரு முக்கிய கேரக்டர். செயற்கையாக இல்லாமல், இயற்கை மழையிலேயே படமாக்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது படக்குழு. மழையே வரலைனா என்ன பாஸ் செய்வீங்க?

• `றெக்க' படத்தில் மாலா அக்கா கேரக்டரில் அசத்திய சிஜா ரோஸ் ஏற்கனவே தமிழுக்கு அறிமுகமானவர்தான். தமிழில் அவர் நடித்த படங்கள் எதுவும் கை கொடுக்காததால், தாய்மொழியான மலையாளத்தில் நடித்துக்கொண்டே, மறைந்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்து வந்தார். சீக்கிரமே இயக்குநராகும் கனவும் இருக்கிறதாம். அடிப்பொலி!

•   விதார்த்துக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கொடுத்த படம் எதுவும் இல்லை. `குற்றமே தண்டனை' பாராட்டு பெற்றது. ஆனால் வசூல் ரீதியில் வெற்றியில்லை. இதனால் மதுரைப் பின்னணியில் மண்வாசனையோடு ஒரு காமெடி ப்ளஸ் ஆக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். `சைத்தான்' அருந்ததி நாயர் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘பில்லா பாண்டி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். பேரு மாஸாதான் இருக்கு!

•   சன்னி லியோன் நடித்த ‘ராகினி எம்எம்எஸ் 2’ படத்தைத் தமிழில் ‘ராத்ரி’ என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள். படத்தில் ‘ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு...’ என்ற ஒரு `கிக்'கான பாடலைப் பாட பிரபல பாடகியைத் தேடியவர்கள், கடைசியில் ரம்யா நம்பீசனைப் பாடவைத்திருக்கிறார்கள். ஹை!

சினிமால்

•    படப்பிடிப்பில் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் நயன்தாராவிடம் நிறைய மாற்றங்கள். உடன் நடிப்பவர்களோடு கலகலப்பாகப் பேசுகிறாராம். உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கிறாராம். மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்த ராமநாதபுரம் பகுதி மக்களோடும்கூட ஜாலியான அரட்டை அடித்துக்கொண்டு, கலகலப்பாக இருந்தாராம். நயன் டா!

• விஜய்யிடமிருந்து சமீபத்தில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது `றெக்க' இயக்குநர் ரத்தினசிவாவுக்கு. படத்தைப் பற்றிப் பேசுவாரோ என நினைத்தவருக்கு இன்ப அதிர்ச்சியாம். வீட்டுக்கு அழைத்து, `எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க' எனக் கேட்டிருக்கிறார் விஜய். `றெக்க' பாணியில் ஒரு அதிரடி மாஸ் கதையை இரண்டு மணி நேரம் அசராமல் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட விஜய், `நல்ல சேதி சீக்கிரமாவே வரும்' எனச் சொல்லி அனுப்பியிருக்கிறாராம்! றெக்கடோய்!

•     பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பிரபலங்கள் தங்கள் வாரிசுகளுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நடிக்க கேட்டும் மறுத்தவர், கரண்ஜோகர் கையில் ஜான்வியை ஒப்படைத்திருக்கிறாராம். கரண் ஜோகர் இயக்கத்தில் வருண் தவான் ஜோடியாக ஜான்வி நடிக்கும் படம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறதாம். கம் ஹியர் பேபி!