`நீங்காத மேலாடை நீங்கஎன் நிழல்கூட நீ தீண்ட ஏங்கநீள் கூந்தல் பூவின்றி வாடஅதில் நீ வந்து உன் மூச்சைச் சூடஅணைக்காத பாகங்கள் நோகஒரு அணையாத தீ நெஞ்சில் வேககையை கையால் நீ கிள்ளமெய்யை மெய்யை நான் அள்ள...

ஓயா...ஓயா ..

ஓயா தீயா...!'

-கவிஞர் லலிதானந்த் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையில் மனதை அள்ளுகிறது, `காஷ்மோரா' திரைப்படப் பாடலான ஓயா...ஓயா'! கிளாஸிக் ரொமாண்டிக் ஃபீல் கொடுக்கும் இந்த பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் கல்பனா ராகவேந்தர். ரஜினி முருகனில் `ஜிகிரு ஜிகுரு', `36 வயதினிலே' படத்தில் `போகிறேன்...' உள்ளிட்ட பல பாடல்களை திரையிலும் ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார் இவர். அமெரிக்காவில் பிஸியாக இருந்தவரிடம் வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்மால் சாட் போட்டோம்.

`` `ஓயா...ஓயா'னு ரிப்பீட் மோட்ல ஓயாமல் போகுதே இந்தப் பாட்டு. எப்டிங்க இப்டி?

``இதுக்கு சந்தோஷ் நாராயணனுக்கும் அவங்க மனைவிக்கும் நன்றி சொல்லணும். ஏற்கெனவே 36 வயதினிலே படத்துல அவரோட சேர்ந்து பாடியிருக்கேன். எங்க கூட்டணி நல்ல சக்சஸ் கொடுத்துச்சு. என் மேல அவருக்கு இருந்த நம்பிக்கையால திரும்பவும் எனக்கு இந்த சான்ஸ் கொடுத்திருக்காரு. தொடர்ந்து நல்ல பாடல்களைக் கொடுப்பேன்னு நம்புறேன்.''

``36 வயதினிலே படத்தில் `போகிறேன்...' பாடலைத்தான் உங்க காலர் டியூனா வச்சிருக்கீங்க. அந்த பாடல் அனுபவம் பத்தி சொல்லுங்க?''

``நான் ரொம்ப ஃபீல் பண்ணிப் பாடிய பாடல் இது. இன்னும் சீக்ரெட் சொல்லணும்னா எனக்கும் இப்ப 36 வயசுதான். அதனால மனசோட ஃபீல் பண்ணி இதை வச்சிருக்கேன். வாழ்க்கையோட அடுத்தகட்டப் பயணத்துக்கு இந்தப் பாடல் உந்துசக்தியா இருக்கும். வயசு ஒரு மேட்டரே இல்ல. மனசு இருந்தாப் போதும் எந்த வயசுலயும் ஜெயிக்கலாம். ஐ லவ் திஸ் சாங்.''

``சின்ன வயசுல இருந்து இசைத்துறையில இருக்கீங்க. உங்க டிராவல் ரொம்ப பெருசாச்சே! கொஞ்சம் சொல்லலாமே மேடம்?''

``எங்க அப்பா டி.எஸ்.ராகவேந்தருக்கு பாடகர், நடிகர், இசையமைப்பாளர்னு நிறைய அடையாளங்கள். அம்மா சுலோச்சனாவும் நல்ல பாடகி. ரெண்டு பேரோடயும் சேர்ந்து நிறைய மேடைக் கச்சேரிகள்ல கலந்துப்பேன். அதன் மூலமா தான் என் திறமை வெளிய தெரிஞ்சு 5 வயசுல பாட ஆரம்பிச்சேன். மதுரை டி. னிவாசன் அவர்கள்தான் என்னோட குருநாதர். அவர்கிட்ட 12 வருஷமா பாட்டு கத்துக்கிட்டேன். குழந்தை நட்சத்திரமா என்னோட 6 வயசுல மலையாளப் படத்துல நடிச்சேன். அப்பவே மத்த குழந்தை நட்சத்திரங்களுக்கும் டப்பிங் பேச ஆரம்பிச்சேன். தொடர்ந்து மேடைக் கச்சேரிகள், ஆல்பங்கள், திரைப் படங்கள்ல பாடி இருக்கேன். இந்தத் துறைக்கு வந்து 30 வருஷம் ஆயிடுச்சு.''

``பாட்டு, நடிப்பு வேற என்ன பிடிக்கும்?''

``டீச்சிங் ரொம்ப பிடிக்கும். நடுவுல சில காலங்கள் காதுகேளாத சிறப்புக் குழந்தைகளுக்கு டீச்சரா இருந்தேன். இப்ப பிஎட் படிச்சிட்டு இருக்கேன். ஹெலன்கெலர்தான் என்னோட ரோல் மாடல். அவங்களைப் போல சேவை செய்யணும். தொடர்ந்து சிறப்புக் குழந்தைகளுக்கு டீச்சிங் பண்ணணும். அவ்ளோதான்.''

`ஓயா’மல் செய்யுங்க மேடம்!

- பொன்.விமலா