Published:Updated:

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

Published:Updated:
”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

பெரும்பாலும் தன் திரைப்படங்களில் கதையை நகர்த்துவதற்கான கருவியாக பாடல்களை, `மாண்டேஜ்' பாடல்களாகப் பயன்படுத்தும் இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி.

“துக்கத்துக்கு, காதலுக்கு, கொண்டாட்டத்துக்கு எனப் பாடல்கள் நம் வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. என் தாத்தா, தியாகராஜ பாகவதர் பாட்டு கேட்டு அழுதார். நான் இளையராஜாவைத் துணைக்கு வெச்சுக்கிட்டேன். எனக்கு அடுத்த தலைமுறை ரகுமான் தோளில் சாய்ந்திருந்தார்கள். இப்போது யுவனும் சந்தோஷ் நாராயணனும் இருக்கிறார்கள். பாடல்கள் எல்லாமே நம் நினைவின் தடம். அந்தத் தடம் முழுதும் ஈரமும் வெறுமையும் நிறைந்தது” - தனக்கு  நெருக்கமான பாடல்கள் பற்றியும் அதன் நினைவுகள் பற்றியும் சிலாகித்துப் பேசும் இயக்குநர் சீனு ராமசாமியின் ஃபேவரைட் டாப் 10 ப்ளே லிஸ்ட் இது! 

பூங்காற்று புதிரானது (மூன்றாம் பிறை)


``மூன்றாம் பிறைல கமல் சார் பேரு சீனு. ஸ்ரீதேவி சீனு சீனுன்னு கூப்பிடுவாங்க. படத்தைப் பார்த்துட்டு பரவசத்திலேயே இருந்தேன். ஸ்ரீதேவி,  `சீனு சீனு'ன்னு என்னையக் கூப்பிடுற மாதிரியே இருக்கும்.பின்னாலதான் எனக்குத் தெரிஞ்சது சீனு சீனுன்னு என்னய கூப்பிட்டது ஸ்ரீதேவி இல்ல. என்னோட ஆசான் பாலுமகேந்திரா சாருன்னு. அவருக்கு சீனு அப்டிங்குற பேரு ரொம்பப் பிடிச்ச பேரு!

``நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி,பொன்வண்டோடும் மலர் தேடி,என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ...'னு பாடல் வரி வரும். என்னோட கலை வாழ்வில் பாலு சார் வந்ததுதான் விதியைப் புலர்த்திய ஒரு விதி. இந்தப் பாடல் என்னுடைய  ஆத்ம விருப்பமும்கூட!'

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

பால்வண்ணம் பருவம் (பாசம்)

``எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிச்ச `பாசம்' படத்துல வர்ற பாட்டு  பால்வண்ணம் பருவம் கண்டு. கதைப்படி ஹீரோ ஒரு திருடன்.

`நேர் சென்ற பாதைவிட்டு நான் சென்ற போது, வந்து வா என்று அள்ளிக்கொண்ட மங்கை இல்லையா'னு வரிகள் வரும். என் மனைவி ஒரு தமிழ் டீச்சர். வாழ்க்கையில எந்த இலக்கணத்தையும் பின்பற்றாத என்னைக் கைப்பிடிச்சதே ஒரு ஆச்சரியம்தான். கணவனுக்கும் மனைவிக்கும் இடைப்பட்ட வாழ்க்கையைச் சொல்ற ஒரு பாட்டு. இதைக் கேட்கும்போதெல்லாம் என் மனைவி தர்ஷனாவோட ஞாபகம் வரும்.''

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

சங்கீத ஸ்வரங்கள் (அழகன்)

``என்னோட படங்கள்ல செல்வினு ஒரு கேரக்டர் எப்போதும் வந்துகிட்டே இருக்கும். இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல நான் சந்திச்ச ஒரு பொண்ணு பேரு செல்வி. எங்க ரெண்டு பேருக்கும் ஒரு கன நேரத்துல உருவான நட்பு அது. டீன் ஏஜ்ல செல்போன் கிடையாது, பேஜர் கிடையாது, எல்லாமே பக்கத்துல இருக்கிற டெலிபோன் பூத் லேண்ட்லைன் போன்தான். இந்தப் பொண்ணு ஹாஸ்டல்ல இருக்கும். போன் பண்ணுனா `அண்ணன் பேசுறேன்'னு சொல்லித்தான் பேசுவேன். அது ஒரு பரிசுத்தமான அன்பு.

`அழகன்' படத்துல வரும் `சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா' பாட்டுல, இசை தெரியாத ஹீரோ தன்னோட சிற்றறிவில் இசையைப் பத்திக் கேள்வி கேட்கிற மாதிரி போகும். இலங்கை ரேடியோ, தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும்னு என்னோட டீனேஜுக்கு என்னைத் தூக்கிப்போயி உட்கார வைக்கிற பாட்டு இது!'

போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா)

``போறாளே பொண்ணுத்தாயி  பொல பொல வென்று கண்ணீர்விட்டு  தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு...''

இருபது வருடத்துக்கு முந்தைய திருமண உறவு வேற மாதிரி இருந்துச்சு. லட்சுமினு  ஒரு அக்கா  ஊர்ல இருந்தாங்க. சின்ன வயசுல என்ன சினிமா கூட்டிட்டுப்போறது அவுங்கதான். கல்யாணம் செஞ்சு போன இடத்துல தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவுங்க கல்யாணம் செஞ்சு போகும் போது அவுங்களுக்குப் பின்னாடியே ஓடிப் போன ஞாபகம் இன்னும் இருக்கு. தேசிய விருது பெற்ற இந்தப் பாட்டைப் பாடுன சொர்ணலதா அக்காவும்  இல்லை, லெட்சுமி அக்காவும் இல்லைங்கிற வருத்தம் எனக்கு இருக்கு!''

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

பூக்கள் பூக்கும் தருணம் (மதராஸபட்டினம்)

``இந்தப் பாட்டை நா.முத்துக்குமார் எழுதி முடிச்சதும் எனக்குத்தான் வாசிச்சு காமிச்சாரு. பத்துநாள் கழிச்சு இந்தப் பாட்டைக் கார்ல போறப்ப போட்டுக் காமிச்சாரு. பாட்டு வெளியாகாத நேரம் அது. அப்போவே இது உன்னோட மிகச்சிறந்த பாடல்னு சொல்லி இருக்கேன். `வேறின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூப் பூக்குதே'ன்னு இந்தப் பாட்டுல நான் லயித்துக் கெடந்துருக்கேன்.''

கள்ளிக்காட்டில் பொறந்த தாயே (தென்மேற்கு பருவக்காற்று)


``தமிழ் சினிமாவுக்குப் பாட்டுத் தேவை இல்லைங்குற கட்சியில இருந்து வந்தவன் நான். இப்படியான என் படத்தில உள்ள ஒரு பாட்டுக்காக தேசிய விருது கிடைச்சதும் மறக்கமுடியாதது. தன்னோட உழைப்பில் மகனை வளர்த்த தாய், மரணப்படுக்கையில் இருக்கும்போது தன்னோட மகனைப் பார்க்காமலேயே செத்துப்போகவும், அம்மாவுக்கு எதுவுமே செய்யலையேங்குற குற்ற உணர்ச்சில அழுது புலம்புற ஒரு மகன். கவிப்பேரரசு எழுதிக் குடுத்த பாட்டு. இப்போதும் பண்பலையில் கேட்டுவிட்டு யாராவது மனசு விட்டுப் பேசும்போது ஒரு பாடல் மூலமா அவுங்ககிட்ட நேரடியா பேசிருக்கோமேன்னு நெகிழ்ச்சியா இருக்கும்.''

தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)

``காலேஜ்  ஃப்ரெண்டு நாகரத்தினம். அவருக்குப் பார்வை கிடையாது. புல்லாங்குழல் நல்லா வாசிப்பாரு. காலேஜ் டைம்ல பார்வை இல்லாத நண்பர்களுக்கு  தினம் லைப்ரரில போய் பேப்பர் வாசிக்கணும். இதான் என்னோட தினம் வேலை. செய்தியை ஒரே அளவில படிக்கணும். இடையில புரிஞ்சுச்சானு கேட்கக் கூடாது. கேட்டா கோபப்படுவாங்க. அவங்களைப் பார்க்குறப்ப  எல்லாம் ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். பஸ்சுக்கு நிப்போம். வர்ற பஸ் எந்த ரூட் பஸ் நம்பர்னு சொல்லி ஆச்சர்யப்படுத்துவாங்க. சினிமாவுக்கெல்லாம் ஒண்ணாதான் போவோம். சமீபத்துல பதினைஞ்சு வருஷம் கழிச்சு  டி.கல்லுப்பட்டில பார்த்து  `வணக்கம் நாகரத்தினம்'னு சொன்னேன். `வணக்கம் சீனிவாசன்'னாரு. எப்படிய்யா ஒரு மனுஷனால பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால கேட்ட  குரலை மட்டும் வெச்சு நம்மள இவ்வளவு நுணுக்கமா  ஞாபகப்படுத்திக்க முடியுதுன்னு அசந்துருக்கேன். அவங்களோட உலகம் அவ்வளவு அழகானது. அது கொண்டாட்டங்கள் நிறைஞ்சது. `அவதாரம்' படத்துல தென்றல் வந்து தீண்டும் போது பாட்டு கேட்கிறப்ப எல்லாம் நாகரத்தினமும் அவர் வாசிக்கிற புல்லாங்குழலும் என்னை எங்கோ கடத்திப்போகும்.''

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

மக்க கலங்குதப்பா (தர்மதுரை)

``சாவைக் கொண்டாடுகிற கலாசாரம் நம்ம தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தது.கல்யாணச்சாவுன்னு சொல்லுவாங்க. என் தாத்தா ராமசாமிய கண்ணு முன்னால காட்டும். 95 வயசு வரைக்கும் வாழ்ந்த அவரோட வாழ்க்கையைக் கொண்டாடுற பாட்டு இது. ஓலைக்குள்ள குறைந்த வெளிச்சத்துல பதிவு பண்ணின இந்தப் பாட்ட வெறும் குத்துப்பாட்டா இல்லாம ஒரு கலாசார பதிவா பதிவு பண்ணினது சந்தோஷம்.''

மன்னிப்பாயா (விண்ணைத்தாண்டி வருவாயா)

``என்னைவிட ஒரு வயசு அதிகமா ஒரு பணக்காரத் தோழி எனக்கு உண்டு. சின்ன வயசுல நான் கவிதை எழுதும்போது, என்ன எழுதியிருக்கேன்னு எனக்கே புரியாதப்ப, அதை ஒவ்வொரு கோணத்துல திரும்பத் திரும்ப வாசிச்சு எனக்குள்ள நம்பிக்கை ஏற்படுத்துன ஒரு தோழி. தாமரையோட ஒரு வரி வரும். `உன்னால்தான் கலைஞன் ஆனேன்.' அது ஒரு அப்பட்டமான உண்மை. இதுபோக நான் ரஹ்மானோட குரலுக்கு மிகப்பெரிய ரசிகன். குரலும் வார்த்தையும் குழைச்சு என்னை ஜென் நிலையில கொண்டு போயி வைக்கிற பாட்டுதான் மன்னிப்பாயா.''

”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்!”

விஜய் சேதுபதிக்கு டெடிகேஷன்! (`தர்மதுரை' பிரிவுப் பாடல்)

``இந்தப் பாட்டோட சூழல் மாதிரிதான் நானும் சினிமாவுக்கு வர்றப்ப, வீட்டுலகூட சொல்லாம நடுராத்திரில ஒரு குருட்டு தைரியத்துல ரயிலேறி சென்னைக்கு வந்தேன். `போய் வாடா பொலிக்காட்டு ராசா... போராடு இந்த மலையெல்லாம் தூசா... வல்லவனே நீ நடந்தா புல்லு வெளி நெல்லு விளையும்'னு இன்னும் நிறைய வெற்றிகள் வந்து சேரணும்னு விஜய் சேதுபதியை வாழ்த்தி இந்தப் பாட்டை டெடிகேட் பண்றேன்.''


- ந.புஹாரி ராஜா