Published:Updated:

"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு!'' - நடிகை ரெஜினா

"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு!'' - நடிகை ரெஜினா

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ரெஜினா. சினிமா குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு!'' - நடிகை ரெஜினா

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ரெஜினா. சினிமா குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

Published:Updated:
"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு!'' - நடிகை ரெஜினா


"சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுங்க நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறையப் படங்கள் பண்ணதுனால, பல பேர் என்னை ஆந்திரா பொண்ணுனு நினைக்கிறாங்க. நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!" என்கிறார், ரெஜினா கெஸன்ட்ரா. இந்த வருடம் தமிழ் சினிமாவில் இவரது நடித்து, ரிலிஸூக்காகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, பாலிவுட் சினிமாவிலும் கால்பதிக்கப் போகும் ரெஜினாவிடம் பேசினேன்.


"ரொம்ப சந்தோஷமா இருக்கு. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கலை. இப்போ நிறைய வாய்ப்புகள் தேடி வருது. போன வருடத்தைவிட இந்த வருடம் என் கரியர் இன்னும் சக்சஸ்ஃபுல்லா இருக்கும்னு நம்புறேன். முக்கியமா, இந்தியில் முதல் முறையா நடிக்கப்போறேன். நினைக்கும்போது இன்னும்  ஹாப்பியா இருக்கு. பஞ்சாபி பொண்ணா இந்தப் படத்துல நடிக்கிறேன். என்கூட சேர்ந்து சோனம் கபூரும் நடிக்கிறாங்க. என் கேரக்டர் பெயர், குகூ. சோனம் கபூரும், நானும் எப்படி ஃபிரெண்ட்ஸ் ஆவோம்ங்கிற கான்செஃப்ட் படத்துல ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். படத்தோட பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அனில் கபூருடைய ஒரு பாடல் வரியான 'ஏக் லடிக்கி கோ தேகா தோ ஹைசா லகா'தான் படத்தோட டைட்டில். அந்தப் பாட்டைத்தான் இப்போ அடிக்கடி பாடிக்கிட்டு இருக்கேன். 

"ரெஜினா தொடர்ந்து டபுள், ட்ரிபிள் ஹீரோயின்ஸ் சப்ஜெக்ட்ல நடிக்கிறாங்களே?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எனக்கு இது ஒரு விஷயமாவே தெரியல. என் கேரக்டர் இதுதான்னு சொல்லிட்டா, அது எனக்குப் பிடிச்சிருந்துச்சுனா, எத்தனை ஹீரோயின்ஸ் இருந்தாலும் அதைக் கண்டுக்க மாட்டேன். எனக்குத் தேவை, படத்துல எனக்கான கேரக்டர், கதைக்குள்ள அதுக்குக்கான முக்கியத்துவம். மத்தப்படி, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. 

"எக்கச்சக்க சினிமா பிரபலங்களுடன் இணைந்து 'பார்ட்டி' படத்துல நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?" 

"வெங்கட்பிரபு சார் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. 'இந்தக் கேரக்டர்லதான் நான் நடிப்பேன்'னு அவர்கிட்ட கேட்டு வாங்கினேன். 'பார்ட்டி'யில வித்தியசமான ரெஜினாவை நீங்க பார்க்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல்நாள் போகும்போது, என் லுக்கைப் பார்த்துட்டு பலருக்கும் அடையாளமே தெரியலை. 'யாரு இந்தப் பொண்ணு'னு கேட்டாங்க. அப்படி ஒரு லுக்ல நான் நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல நிறைய சீனியர் நடிகர், நடிகைகளுடன் நடிச்சது ஒரு வரம். ஒரே படத்துல இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம். அந்த வகையில, நான் ரொம்ப லக்கிதான். படத்துக்காக நிறைய டாட்டூஸ் போட்டு நடிச்சிருக்கேன். பிஜூ தீவுல ஷூட்டிங். ரொம்ப ஜாலியா, ஃபன்னா இருந்தது. ஏதோ பிக்னிக் போன மாதிரி ஒரு ஃபீல். முக்கியமா அங்கே தமிழ் பேசுற பல மக்களைப் பார்த்தேன், ரொம்ப சந்தோஷமா இருந்தது!"  

"தமிழ்ல நடிப்புக்கு முக்கியத்துமுள்ள, ஹீரோயினை மையப்படுத்திய கேரக்டர்கள்ல நடிக்கலையேனு ஆதங்கம் இருக்கா?" 

"தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிப் படங்களிலும் நான் பண்ண எல்லா கேரக்டர்களுமே விரும்பிப் பண்ணனுதான். அந்த வகையில் நான் சந்தோஷமாதான் இருக்கேன். கொஞ்சம் டைம் ஆனாலும், இன்னும் ஸ்ட்ராங்கான கேரக்டர் என்னைத் தேடி வரும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக வெயிட்டிங்!" 

"தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிப் படங்களிலும் நடிச்சிருக்கீங்க. சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நினைக்கிறீங்களா?"

"பாலியல் தொல்லை சினிமாவுல இருக்கு. அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். நடிகைகள் லைம் லைட்ல இருக்கிறதுனாலதான், சினிமாவுல இருக்கிற பிரச்னைகள் வெளியே தெரியுது. சிலர் வாய்ப்புக்காக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க. அந்தச் சூழலை நடிகைகளான நாமதான் தைரியமா ஃபேஸ் பண்ணனும். நடக்குற விஷயத்தை வெளியே சொல்லத் தயங்கக் கூடாது. அதை தைரியமா எதிர்க்கணும். வாய்ப்புக்காக எதையும் பண்ணனும்னு அவசியமில்லை!"