‘மதுரைனு சொன்னாலே பத்துப் பதினைஞ்சு பேர் அருவாளோடு சுத்திட்டு இருப்பாய்ங்க, காஸ்ட்லி மொபைல் வெச்சிருந்தாலும் மொச்சைக்கொட்டை பல்லழகி பாட்டைத்தான் ரிங்டோனாக வெச்சுருப்பாய்ங்க’ என தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் இமேஜில் கல்லைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள் மதுரை சோல்ஜர்ஸ் சொல்லிசைக் குழுவினர் (ராப் பேண்ட்). மதுரையில் சின்னக்குழுவாக இணைந்து ராப் பாடிய `மதுரை சோல்ஜர்ஸ்' இப்போது யுவன் இசையில் ராப் பாடியிருக்கிறார்கள். ராப் குழுவில் ஒருவரான ஸ்யானுடன் பேசியதில்...

‘`நானும் மியூஸிக் புரொடியூஸர் நௌஷாஜியும் சொந்தக்காரப் பயபுள்ளைங்க. சின்ன வயசில் இருந்தே ஒண்ணாதான் சுத்துவோம். 2006-ம் வருசம் நௌஷாஜி மதுரை, கோரிப்பாளையத்தில் கேம் சென்டர் ஆரம்பிச்சார். அங்கேதான் நான் கேம் விளையாடிட்டுப் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். அந்த கேம் சென்டருக்கு விளையாட வந்து எங்ககூட பழக்கம் ஆனவர்தான் செந்துலன். அந்தச் சமயத்தில் யோகி-பி சாரோட ‘வல்லவன்’ ஆல்பம் செம ஹிட். அந்த ஆல்பத்தில் இருக்கும் ‘மடை திறந்து...’ பாடலைக் கேட்டு இம்ப்ரெஸ் ஆகி, வரியே புரியலைனாலும் வாய்க்கு வந்ததை மூணு பேரும் தம் கட்டிப் பாடிட்டு இருப்போம். அப்படியே பாடிப்பாடி ராப் இசை மேல் ஈர்ப்பு வந்திடுச்சு. சில இங்கிலீஷ் ராப் பாடல்களின் வரிகளையும் தெரிஞ்சுக்கிட்டு ஓரளவு முறையா பாட ஆரம்பிச்சோம். ஒருநாள் ஃபுட்பால் விளையாடி முடிச்சிட்டு சும்மா உட்கார்ந்து இங்கிலீஷ் ராப் பாடல் ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அப்போ எங்கிருந்தோ எசப்பாட்டு கேட்க, யார்னு தேடிப் பார்த்தால் என் பொடனிக்குப் பின்னால் உட்கார்ந்து பாடிட்டு இருந்தார் ராபின். இப்படியாக இசைதான் எங்க எல்லோரையும் ஒண்ணு சேர்த்துச்சு’’ என்றவர் சின்ன கேப் விட்டு,

‘`கதிரேசன்னு ஒருத்தர் எங்களுக்கு ஒரு ஸ்டூடியோவையே உபயோகத்திற்குக் கொடுத்தார். அங்கேதான் ‘கேட்டுப்பார்’ங்கிற பெயரில் ஒரு ஆல்பம் பண்ணோம். எங்களுக்கே திருப்தியா இல்லை. அந்தச் சமயத்தில்தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி, அவர் ஆல்பம் ரிலீஸ் பண்ற நிகழ்ச்சிக்கு எங்களையும் அழைச்சிருந்தார். ஏதோ ஒரு விஷயம் அங்கே புதுசா இருக்கும், அதை நாம கத்துக்குவோம்னு சென்னைக்குக் கிளம்பிப் போனோம். அங்கே சிலர் தொடர்புகள் கிடைத்தன. அந்தத் தொடர்புகள் மூலமா ‘கேட்டுபார்’ ஆல்பத்தின் டிரெய்லரை ஒரு நிகழ்ச்சியில் போட்டுக்காட்ட எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த டிரெய்லரை யோகி-பி சார் பார்த்து எங்களை சந்திக்க வரச் சொன்னார். அவர் பாடல்கள்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தன, அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்க அங்கே போனோம். ஆனால், அவரே எங்களை சந்திக்க வரச் சொன்னது எங்களால நம்பவே முடியலை. `உன் லட்சியம் என்ன'ன்னு எங்க எல்லோரையும் தனித்தனியா கூப்பிட்டுக் கேட்டார். `இசைதான் இனி எங்க வாழ்க்கை'னு சொன்னோம், அவர்தான் எங்களுக்கு பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தார். மதுரைக்கு வந்தோம், ‘எப்படி பாடினாரோ’ பாடல் ரிலீஸ் பண்ணோம். அந்தப் பாடலைக் கேட்ட தயாரிப்பாளர் சரவணன், வெங்கட் பிரபு சார்கிட்ட எங்களை அறிமுகப்படுத்தினார். அப்படிக் கிடைச்சதுதான் ‘சென்னை -28: செகண்ட் இன்னிங்க்ஸ்’ படத்தில் வரும் ‘பாய்ஸ் ஆர் பேக்’ பாடல். ரொம்ப சந்தோசமா இருக்கு’’ என்றார்.

வாழ்த்துகள் ஃபிரெண்ட்ச்...

- ப.சூரியராஜ்