‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. தன் நண்பன் விக்ராந்துக்கு ஒரு பிரேக் பாயிண்ட் கொடுக்க, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனிடம் விஷ்ணு சொன்ன ஐடியாவாம் இது. சுசீந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, சுசீந்திரனின் உதவியாளர் சேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். #நண்பேண்டா!

‘ஸ்டுடியோ கிரீன்’ பேனரில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா படங்களைத் தவிர்த்து மற்ற ஹீரோக்களின் படங்கள் நேரடியாகத் தயாரானதே கிடையாது. முதல் முறையாக இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பதன் எதிரும் புதிருமாக இருந்த விக்ரம் - சூர்யா நட்பும் ஒட்டுகிறது. யெஸ்... ‘இருமுகன்’ படத்திற்குப் பிறகு ஆனந்த் சங்கர் - விக்ரம் இணையும் புதுப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க இருக்கிறது. ‘டோன்ட் ப்ரீத்’ என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்! #அட!

‘அப்புச்சி கிராமம்’ படத்தை இயக்கிய வி.ஐ.ஆனந்த், தெலுங்கில் ‘டைகர்’ படத்தை இயக்கினார். ‘பாகுபலி’யோடு மோதி, நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்திற்குப் பிறகு, இப்போது அல்லு அர்ஜூனின் தம்பியை நாயகனாக்கி, அடுத்த படத்தை இயக்குகிறார். ‘அப்புச்சி கிராமம்’ போலவே, இதுவும் ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் கதையாம்! #ஓடுனா நல்லது!

குத்துப்பாட்டு இல்லாம டி.ஆர். படமா? விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்திலும் ஒரு மெர்சலான குத்துப்பாட்டு வைத்திருக்கிறார்கள். டி.ஆரே பாடிய இந்தப்பாடலுக்கு, அவரது மகன் சிம்புவும் இணைந்து பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் சொல்ல, ‘யம்மாடி ஆத்தாடி’ மாதிரி எனர்ஜியான பாட்டாக இருக்கவேண்டும் என ரெடியாகிக்கொண்டிருக்கிறாராம் பாடலாசிரியர். #சிம்பு வருவாரா?

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நித்யா மேனன் நடிக்க இருப்பதால், சாவித்ரி நடித்த எல்லா படங்களையும் பார்த்துப் பக்காவாக ரெடியாகி வருகிறாராம் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நானி நடித்த ‘யவடே சுப்ரமண்யம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் ‘மகாநதி’யை இயக்குகிறார். #வாவ்!

‘சிறுத்தை’ சிவா சொன்ன கதையைக் கேட்ட அஜித், அதில் வேறு நடிகருக்கு ஒதுக்கப்பட்டிருந்த முக்கியமான ரோலையும் தானே நடித்தால் நல்லாருக்குமா எனத் தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கேரக்டருக்குப் பாலிவுட் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க விரும்பிய சிவா, அபிஷேக் பச்சனிடம் கதை சொல்லி வைத்திருந்தாராம். அஜித் சொல்லும் முடிவில்தான், நடிப்பது இன்னொரு அஜித்தா இல்லை அபிஷேக் பச்சனா, என்பது தெரியும். #குரு நம்ம ஆளு!

தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிப்போம் என முடிவெடுத்திருக்கிறார் மாதவன். சற்குணம் இயக்கத்தில் நடிக்கும் மாதவன், தீவிரமாக எடையைக் குறைத்து ஒல்லியாக மாறி வருகிறார். ஜாக்கி ஷெராஃப்பும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பாங்காக்கில் நடக்கிறது. இதுதவிர்த்து மேலும் சில தமிழ் இயக்குநர்களிடமும் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார் மேடி. #ஆடி வாங்க மேடி!

‘தில்லுக்கு துட்டு’ படத்தில் காமெடி ஆக்ஷன் செய்த சந்தானம், இப்போது முழுநீள ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். தன் நீண்ட நாள் நண்பர் சேதுராமனை இப்படத்திற்கு இயக்குநராக்கி இருக்கிறார். இன்னொரு நண்பர் வி.டி.வி கணேஷ் படத்தைத் தயாரிக்கிறாராம்.

தன் மகன் ஹர்ஷவர்தன் கபூரை டாப் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவிடம் அறிமுகப்படுத்தச் சொல்லி ஒப்படைத்தார் அனில் கபூர். மகள் சோனம் கபூர் அறிமுகப்படம் மாதிரியே மகனின் ‘மிர்சியா’வும் படுதோல்வி. ஆனாலும், நல்ல சகுனமாக எடுத்துக்கொண்ட அனில் கபூர் தான் நடித்த ‘மிஸ்டர் இந்தியா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதில் மகனை நடிக்க வைக்கத் தீவிரமாகியிருக்கிறார். அனிலும் அதில் நடிக்க இருக்கிறாராம். #பாப்பா ஹை!

‘ராஜா ராணி’ படத்தில் ஸ்கிரிப்ட் எப்படியிருந்தாலும் படத்தை அசால்ட்டாக தூக்கி நிறுத்தி வேற லெவலுக்குக் கொண்டு போனவர் நயன்தாரா. இதை மனதில் நினைத்துப் பார்த்த அட்லீ, அந்த சென்டிமென்ட்காகவே அடுத்து இயக்கும் விஜய் படத்தில் நயன்தாராவை நாயகியாக்க முடிவு செய்து, விஜயிடமும் ஒப்புதல் வாங்கிவிட்டாராம். நயன்தாராவுக்குப் போட்டியாக இன்னொரு நாயகியும் படத்தில் இருக்கிறார். #நயன்டா!

மணிரத்னம் உட்பட பலர் முயற்சி செய்தும் சில பல காரணங்களால் ‘மலர் டீச்சரை’ தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க முடியாமலேயே இருந்தது. தற்போது சந்தானத்தை நாயகனாக்கி, செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில், சாய் பல்லவி நடித்தால் பொறுத்தமாக இருக்கும் என நினைக்க, எப்படியாவது இப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறாராம் சாய்பல்லவி. ஏன்னா, செல்வராகவன் படங்களின் தீவிர ரசிகையாம் மலர். #சைக்கோ ஹீரோ தானே?

வளர்ந்து வரும் நடிகர்களின் போட்டியைச் சமாளிக்க நிறைய செயல்பாடுகளை முடுக்கி விட்டிருக் கிறாராம் தனுஷ். கதை கேட்பது, நடிப்பது தவிர முதல்கட்டமாக தன் ரசிகர் மன்றத்தை பலப்படுத்த மாவட்டத் தலைவர்களை அழைத்து மீட்டிங் போட்டு, அகில இந்தியத் தலைவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறாராம். தவிர, அடுத்தடுத்த படங்களை எப்படிப் கொண்டாடணும், என்னென்ன நற்பணிகள் செய்யணும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறாராம். #கட்சி ஆரம்பிச்சிடுவாரோ?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சயின்ஸ்-ஃபிக்ஷன் கதையாக உருவாகிக்கொண்டிருக்கும் இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, ஹன்சிகா மோத்வானியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். #உச்சத்துல சிவா!