தெத்துப்பல் அழகி ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியை மறக்க முடியுமா? வருடத்துக்கு ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தவர், ‘யட்சனு’க்குப் பிறகு, ‘யாக்கை’ மூலம் வருகிறார். ஹைதராபாத்தில் இருந்தவரோடு, 2 எம்.பி சாட்டிங் இது!

`‘கம்மியாதான் நடிக்கணும்னு எதுவும் முடிவு எடுத்து வெச்சிருக்கீங்களா?”

``அப்படி இல்லை. மனசுக்குப் பிடிச்ச படங்கள் மட்டும் பண்றேன். அதேசமயம், தமிழ், தெலுங்கு, மலையாளம்னு தொடர்ச்சியா நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். வேற வேற மொழிகள்ல மாறி மாறி நடிக்கிறதுனால, இங்கே இடைவெளி விழுந்தமாதிரி தெரியுது!''
‘` `யாக்கை' படம் குறித்து...”

``கண்டிப்பா ‘யாக்கை’யில இதுக்கு முன்னாடி பார்த்த சுவாதியைவிட வேற லெவல் சுவாதியைக் கண்டிப்பா பார்ப்பீங்க. முழுக்க யூத்ஃபுல் டீம். ஏற்கெனவே கிருஷ்ணாகூட ‘யட்சன்’ பண்ணியிருக்கேன். யுவன் மியூஸிக்கோட மேஜிக் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லை. செம என்டர்டெயின்மென்ட் படத்துக்காக, நானும் வெயிட் பண்றேன்!

‘`சினிமாவுக்கு வெளியே இருக்கிற சுவாதியை எந்த சினிமாவாவது பிரதிபலிச்சிருக்கா?”

``என்னை நானே ஸ்கிரீன்ல பார்க்குற மாதிரி ஒரு படம்னா, அது ‘24 காதம்’ மலையாளப் படம்தான். மேக்கப் இல்லாம, ஓவர் ரியாக்ஷன் காட்டாம ஃபகத் ஃபாசில்கூட நடிச்ச ரெண்டாவது படம் அது. அந்த நாராயணி கேரக்டர் ரியல் லைஃப்லேயும் நானேதான்! ஆக்சுவலா, நான் இயற்கையோட தொலைஞ்சு போகணும்னு ஆசைப்படுற பொண்ணு. அவ்ளோ ரசிப்பேன். இந்தப் படத்துக்காக மொத்த கேரளாவையும் சுத்திப் பார்த்துட்டு வந்தேன். ‘யாக்கை’கூட அதே மாதிரி லொக்கேஷன்லதான் ஷூட்டிங் அமைஞ்சது. படத்தை ஸ்க்ரீன்ல பார்க்கும்போது ஜில்லுனு இருக்கும்!''

‘`வெற்றி, தோல்வி எல்லாம் உங்களுக்கு எப்படி?”

``படத்தோட முதல் ஷோ முடிஞ்சதுமே நமக்குப் படத்தோட ரிசல்ட் தெரிஞ்சுடும். மூணு மணிக்குள்ள வர்ற போன் கால், அதை உறுதி பண்ணிடும். ஹிட்டுன்னா, தொடர்ந்து போன் வந்துகிட்டே இருக்கும். நெகட்டிவா இருந்தா யாருமே நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க! ஆரம்பத்துல ஹிட், ஃபிளாப் எந்த அளவுக்கு நம்மளோட கேரியர்ல தாக்கத்தைக் கொடுக்கும்னு தெரியாது. இப்போ ஹிட்டோட எனர்ஜியும், ஃபிளாப் மூலமா கிடைக்கிற பாடமும் எனக்குப் புரியுது!''

‘`தெலுங்குப் படத்துல பாடியிருக்கீங்க. தமிழ்ப் படங்களுக்குப் பாடமாட்டீங்களா?”

``இப்போ இருக்கிற டெக்னாலஜிக்கு யாரும் பாடலாம். முதல்ல நான் நல்லா தமிழ் பேசக் கத்துக்கிறேன். அப்புறமா பாடுறதைப் பத்தி யோசிக்கலாம்.''

‘`வழக்கமான கேள்விதான். நடிக்க வரலைனா என்ன ஆகியிருப்பீங்க?”

``ஹா..ஹா... ஆனா, எங்கிட்ட வழக்கமான பதில் இல்லை. ஆக்சுவலா, நான் பயோ-டெக்னாலஜி ஸ்டூடண்ட். சின்ன வயசுல இருந்தே அறிவியல்னா ரொம்பப் பிடிக்கும். படிச்சு முடிச்சதுமே அமெரிக்காவுல ஆராய்ச்சி பண்ண ஒரு வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துலதான் ‘சுப்ரமணியபுரம்’ வாய்ப்பும் கிடைச்சது. நல்ல கதையை மிஸ் பண்ண மனசு வரலை. நடிக்க வரலைனா, கண்டிப்பா எதையாவது ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்திருப்பேன்.''
‘`யாருக்கு ‘ஸாரி’ சொல்லவேண்டி இருக்கு?”

``எனக்கு நானேதான் சொல்லிக்கணும். எந்த ஒரு விஷயத்தையும் அதோட போக்குல விடாம, யோசிச்சு யோசிச்சு அதிகமான ஸ்ட்ரெஸ் எடுத்துக்குறேன். என்னை நானே சித்ரவதை பண்ணிக்குறேன். கொஞ்சம் கொஞ்சமா மாறணும்.''

`உங்க தாங்க்ஸ் யாருக்கு?”

``எப்பவுமே, என் அப்பா, அம்மாவுக்குத்தான் சொல்லணும்!''

‘`காதல்?”

``உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்குமே லவ் புரபோஷல் வந்திருக்கும். நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஆனா, அந்த ஃபீல் நமக்குள்ள வரணும்ல? அது, ரீல் ஃலைப்லதான் வந்திருக்கு. ரியல் ஃலைப்ல வரலை! லவ் ஒரு நம்பிக்கை. காலையில நேரத்துக்கு வர்ற டிரெயினைப் பிடிக்கிற மாதிரி ஷெட்யூல் கிடையாது. அதுவா நடக்கணும்!''

- ந.புஹாரி ராஜா