Published:Updated:

``தமிழ்ராக்கர்ஸ் விஷயத்தில் விஷால் அப்படி பண்ணியிருக்கமாட்டார்" - ஞானவேல்ராஜா

``தமிழ்ராக்கர்ஸ் விஷயத்தில் விஷால் அப்படி பண்ணியிருக்கமாட்டார்" - ஞானவேல்ராஜா
``தமிழ்ராக்கர்ஸ் விஷயத்தில் விஷால் அப்படி பண்ணியிருக்கமாட்டார்" - ஞானவேல்ராஜா

``தமிழ்ராக்கர்ஸ் விஷயத்தில் விஷால் அப்படி பண்ணியிருக்கமாட்டார்" - ஞானவேல்ராஜா

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதல் தமிழ் சினிமாவில் அவர் செய்துவரும் அனைத்துக் காரியங்களும் விமர்சனத்துக்குரியதாய் மாறி வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கியூப் கட்டண உயர்வுக்கு எதிராக அவர் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி  நடத்திய வேலை நிறுத்தம் முடிந்து கடந்த ஒரு மாதமாக மக்களைத் திரையரங்குக்குக்  கொண்டு வரும் படங்களாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம்  இணையப் புலனாய்வு பத்திரிகை ஒன்றில் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளராய் சேர்ந்த பிறகு தமிழ் சினிமாவின் ஆன்லைன் பைரசியைக்கண்டுப்பிடிக்க ஒருதனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்ததாகவும் அதை விஷால் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட ஓர் இணையதள முகவரை மட்டும் கைது செய்ததாகவும் மற்றொரு இணையதளமான தமிழ் ராக்கர்ஸுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் சம்பந்தம் இருப்பதனால் அதை வைத்து லைக்காவிடம் விசாரித்த விஷாலை லைக்கா பேரம் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக அந்த தனியார் ஏஜென்சி  விஷாலிடம் அறிக்கையளித்தபோது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது.

தயாரிப்பாளர் சங்கத்தில் எனது பங்களிப்பு கடந்த ஆறு மாதங்களாகவே குறைவாக இருக்கிறது. இந்த பைரசி விவகாரத்தில் எந்த ஏஜென்சி வைத்து அவர்கள் விசாரித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழ்ராக்கர்ஸை எவ்வளவு தூரம் நான் வெறுத்து இருக்கிறேன் என்று எல்லாருக்கும் தெரியும். ஞானவேல்ராஜாவுக்கும் தமிழ்ராக்கர்ஸுக்கும் இருக்கும் பகை எல்லாருக்கும் தெரிந்தது. அவர்களின் அடிமூலத்தைக் கண்டுபிடிக்க 25 லட்சம் செலவு செய்து ஒரு ஏஜென்சியை ஒப்பந்தம் செய்தேன். அந்த ஏஜென்சியும்  கண்டிப்பாகக் கண்டுபிடிப்பதாகச் சொன்னார்கள். கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு அட்ரெஸை கண்டுபிடித்து வைக்கிறார்கள். அந்தப் பையன் அந்த இணையத்தின் அட்மின் கிடையாது படம் பார்ப்பவன் என்று அவனைப் பிடித்து விசாரித்ததில் தெரிய வந்தது. அதன்பிறகு அந்தப் பையன் எனக்கு ரொம்ப ஃப்ரெண்டாகிட்டான்.  மிகவும் மொக்கையாக முடிந்த இந்த விஷயத்திற்குப் பிறகு நான் பைரசியில் வேறு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை,

இந்த விஷயத்தில் விஷால் சுயநலத்துடன் தனக்காக டீல் பேசினார் என்று கூறப்படுகிறது?
தயாரிப்பாளர் சங்கத்தில் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களுக்கே இவர்கள் எவ்வளவு தீவிரமாக வேலை செய்து வருகின்றனர் என்று   தெரிய வரும். விஷால் போன்ற ஒரு முன்னணி கதாநாயகன் தன்னுடைய நேரத்தையும், உடல் நலத்தையும் விடுத்து இப்படி ஒரு விஷயத்தில் ஈடுபடமாட்டார்கள். தயாரிப்பாளர்களின் நன்மைக்காகத்தான் அவர் செய்து வருகிறார். நாம் ஒரு சகத் தயாரிப்பாளராக அவருக்கு உதவி செய்யவில்லையென்றாலும், குறுக்கே நிற்பது சிறந்ததாக இருக்காது. பைரசி விஷயத்தில் அவர் இப்படிச் செய்திருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

சமீபகாலமாகத்  தயாரிப்பாளர் சங்கத்தில் உங்கள்மீது தொடர்ந்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, அது குறித்து? இப்போது நடந்து வரும் சங்கத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு தயாரிப்பாளராக  சங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டியது இருக்கிறது. அதன்படி நடந்து வருகிறேன். நான் கடந்த கால சங்க நிர்வாகிகளுடனும் வேலை செய்துள்ளேன். தற்போதும் வேலை செய்து வருகிறேன். முன்னாடி இருந்த நிர்வாகிகள் போல் இல்லை இப்போது நிர்வாகத்தில் இருப்பவர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்கள்.        

`இரும்புத்திரை' படத்தில் காளிவெங்கட் நடித்த ஞானவேல் என்ற கதாபாத்திரம் உங்களைச் கேலி செய்வதாக இருந்துள்ளதே?
 நண்பர்கள் நிறையபேர் சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கச் சென்றேன் 20 நிமிடம் லேட்டாகச் சென்றதால் காளி வெங்கட் காட்சிகளை மிஸ் செய்துவிட்டேன். நல்லதாகச் சொல்லியிருந்தாலும், தவறாகச் சொல்லியிருந்தாலும் அப்படி விஷால் செய்திருக்கக் கூடாது. இப்போது என்ன குறை விஷாலை எனது படம் ஒன்றில் கலாய்த்தால் சரியாப் போகிறது. என்று சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.        

அடுத்த கட்டுரைக்கு