Published:Updated:

மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!
மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

``ம்ம்ம்... கேளுங்க சொல்றேன். ஆனா, எதுவும் வில்லங்கமா இருக்கக் கூடாது'' என்று அதட்டுகிறார் நடிகர் ராதாரவி.

``ஒரு கூட்டத்துல பேசக் கிளம்பிட்டிருக்கேன் தம்பி. கேள்வி கேளுங்க. எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சுருக்கமாச் சொல்றேன்'' என்று சாந்தமாகப் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

``நீங்க எக்குத்தப்பா கேட்டால் நானும் எக்குத்தப்பா பதில் சொல்வேன். பரவாயில்லையா?'' என, புருவம் உயர்த்துகிறார் நடிகை வித்யூலேகா.

``எங்கேயாவது தேடிப் பிடிச்சு எடக்குமடக்கா கேள்வி கேட்பீங்களே... அந்தப் பகுதிதானே! படிக்க நல்லா இருக்கும். ஆனா, என்னை ரொம்பக் கிண்டல் பண்ணிடக் கூடாது. சரியா?'' என்று சிரிக்கிறார் இயக்குநர் விஜி.

``ஒரு லிட்டர் ஆவின் பால் என்ன விலை?''

பதில்: 34 முதல் 45 ரூபாய் வரை.

ராதாரவி: டென்ஷன் ஆகிறார். ``அதாவது தம்பி... ஒருதடவை என்கிட்ட பாலிட்டிக்ஸ் பற்றி  கேள்வி கேட்டாங்க. `நான் சினிமாவுல இருக்கேன். என்கிட்ட பாலிட்டிக்ஸ் பற்றி கேட்கலாமா?'னு திட்டிவிட்டேன். இப்படி யார்கிட்ட என்ன கேள்வி கேட்கணும்னு ஒரு முறை இருக்குல்ல? இப்ப நீங்க என்ன கேள்வி கேட்டீங்க? ஏதோ பால் விலையா? ஆங்... ஆவின் பால்! அது எங்க வீட்டுல வேலை செய்றவங்க, பால் பாக்கெட் போடுறவங்ககிட்ட கேட்கவேண்டிய கேள்வி. எனக்கு எப்படி

மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

இது எல்லாம் தெரியும்னு நினைச்சுக் கேக்குறீங்க?'' என்று எதையோ யோசித்து கூல் ஆனவர், ``இதுக்கு தோராயமாத்தான் பதில் சொல்வேன் பரவாயில்லையா? என்ன 50 ரூபாய் இருக்கும்'' எனச் சிரிக்கிறார்.

இரா.முத்தரசன்: ``பால் விலை எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியாதே. எப்பவுமே சரியான விடை தெரிஞ்சாதான் பதில் சொல்வேன். குத்துமதிப்பா எல்லாம் சொல்ல மாட்டேன் தம்பி. நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன்.''

வித்யூலேகா: ``ஒருதடவை ஆரோக்கியா பால் ஒரு லிட்டர் வாங்கினேன். அது 80 ரூபாய். அப்படி கணக்குப் பார்த்தால், கவர்மென்ட் நடத்தும் பால் கம்பெனி 20 ரூபாய் குறைத்து விற்கலாம். அப்ப 60 ரூபாய்.''

விஜி: ``எங்க வீட்டுல மூணுவிதமான கலர் பாக்கெட்ல ஆவின் பால் வாங்குறாங்க. ஒரு கலர் பால் பாக்கெட்ல கொழுப்பு அதிகமா இருக்குமாம். இன்னொரு பால் பாக்கெட்ல தயிர் அதிகமா எடுக்கலாமாம். இப்படி கலர் கலரா பால் வருது. இதுல நான் எந்தப் பால் விலையைச் சொல்ல? ஒரு மாசத்துக்கு பால் பாக்கெட் போடுறவர் சம்பளத்தையும் சேர்த்து 2,000 ரூபாய் தர்றோம். அப்படி கணக்குப் பார்த்தால் 42 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை இருக்கலாம்.''

``ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?''

பதில்: வழக்கமாக 48 நாட்கள். ஆனால், சாஸ்திரங்கள் சொல்வது 41 நாட்கள் மட்டுமே.

ராதாரவி: ``நான் 38 வருஷங்களா சபரிமலைக்கு மாலை போட்டுட்டு வர்றேன். முதல் வருஷம் போகும்போது 48 நாட்கள். அதாவது ஒரு மண்டலம் விரதம் இருந்து 48 கிலோமீட்டர் நடந்து சபரிமலைக்குப் போய் ஐயப்பனை தரிசனம் பண்ணிட்டு வந்தேன். ஒரு மண்டலம் அப்ப 48 நாட்கள்னு சொல்வாங்க. இப்போ அவங்க அவங்க வசதிக்குத் தகுந்த மாதிரி 42 நாட்கள்னு சொல்லிக்கிறாங்க.''

மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

இரா.முத்தரசன்: ``இதை நாட்டுவைத்தியர் அல்லது சாமியார்களிடம் கேட்டா, சரியான பதில்  சொல்வாங்க. எனக்கு எப்படித் தெரியும் தம்பி?''

வித்யூலேகா: ``எங்க அம்மாதான் அடிக்கடி `மண்டலம் மண்டலம்'னு சொல்லிட்டே இருப்பாங்க. `அந்த மண்டலம் எங்கேதான் இருக்கு? நான் பார்க்க முடியுமா?'னு விளையாட்டா கேட்டப்பதான் சொன்னாங்க, 45 நாட்கள்னா ஒரு மண்டலமாம். இப்ப தியேட்டர்ல ஹிட் அடிக்கும் படங்கள் எல்லாம் அதிகபட்சம் ஒரு மண்டலம்தான் ஓடுது. ஹி.. ஹி..!''

விஜி: ``48 நாட்கள். எந்த ஒரு நல்ல பழக்கத்தை வாழ்வில் சேர்க்கவோ, கெட்ட பழக்கத்தை விடவோ தொடர்ந்து ஒரு மண்டலம் செய்தால் அது பழக்கமாகிடும்னு சொல்வாங்க. இது சரியான பதில்தானே?''

``No shave November - இது எதற்கான விழிப்பு உணர்வுப் பிரசாரம்?''

பதில்: கேன்சர் விழிப்புஉணர்வுப் பிரசாரம்.

ராதாரவி: ``ட்ரெண்ட்னு சொல்லி ஏதாவது புதுசு புதுசாக் கிளப்பிவிடுறாங்க. ஒண்ணும் புரிய மாட்டேங்குது. அப்ப ஒரு மாசம், எல்லா பயலுகளும் தாடியை ஷேவ் செய்யாம இருப்பாங்களா? ஏற்கெனவே இவங்க யாரும் ஷேவ் பண்ற மாதிரி தெரியலையே. தாடியோடுதான் இருக்கானுங்க. என்ன காரணமாம்?'' என்று கேட்டவரிடம் பதிலைச் சொன்னதும், ``இது எல்லாம் ஒரு ட்ரெண்டா? இவங்க ஷேவ் பண்ணாம இருந்தா விழிப்புஉணர்வு கிடைச்சுடுமா? என்னப்பா கான்செப்ட் இது? இதுக்கு முன்னாடி, `ரேலி'னு நடத்தி விழிப்புஉணர்வு செஞ்சுட்டிருந்தாங்க. இப்ப இப்படி ஆரம்பிச்சுட்டாங்களா?''

இரா.முத்தரசன்: ``நவம்பர் மாதம் முழுக்க ஷேவ் பண்ண மாட்டாங்களா? தெரியலையே தம்பி. நான் நேரம் கிடைக்கும்போது என் வேலைப் பளுவைப் பொறுத்து ஷேவ் பண்ணிடுவேன். இவங்க தாடியை மழிக்காம எதுக்காக விழிப்புஉணர்வு செய்றாங்க?''

வித்யூலேகா: `
`ஏங்க, அப்ப நவம்பர் மாதத்தைத் தவிர மற்ற மாதங்களில் ஷேவ் பண்ற மாதிரி சொல்றீங்களே! பசங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகிட்டே போகுது. அதனால் இப்படி ஒரு ட்ரெண்டை உருவாக்கி, இதுக்காக அவேர்னஸ் செய்றோம்னு சொல்றாங்க. நவம்பர் மாதம் முழுக்க தாடியை அப்படியே விட்டு `பிரேமம்' நிவின்பாலி மாதிரி திரியப்போறாங்க. டிசம்பர்ல ஃபுல் ஷேவ் பண்ணி குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்க ஏதோ பெரிய ப்ளான் போடுவாங்க. இதுதான் உண்மையான பதில்.''

மண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்!

விஜி: ``ஆமாம். நான்கூட ஃபேஸ்புக்ல பார்த்தேனே! #NoshaveNovember-னு ஹேஷ்டேக் போட்டு தாடியோடு பசங்க போட்டோ போட்டுட்டிருந்தாங்க. என்னன்னு பார்த்தா, `கேன்சர் விழிப்புஉணர்வுக்காக' ஷேவ் பண்ணாம இருக்காங்கனு தெரிஞ்சது. நல்ல விஷயம்தானே!''

`` `பைரவா' பட டீஸரில், யாருக்குமே இல்லாத கெட்ட பழக்கம் தனக்கு மட்டுமே இருப்பதாக விஜய் சொல்லும் அந்தக் கெட்ட பழக்கம் எது?''


பதில்: கெட்ட பழக்கம் இருப்பதாக மட்டுமே சொன்னார். அது என்ன எனச் சொல்லவில்லை.

ராதாரவி: ``விஜய், எனக்கு மகன் மாதிரி. ரொம்ப அமைதியா இருப்பார். டான்ஸ், ஃபைட்னு எல்லாத்துலயுமே பிரமாதப்படுத்துவார். யாரையும் கஷ்டப்படுத்தணும்னு நினைக்க மாட்டார். ஒருவேளை இது எல்லாம்தான் அவர் கெட்ட பழக்கம்னு சொல்றாரோ என்னவோ? ஆமாம், என்ன கெட்ட பழக்கமாம்?''

இரா.முத்தரசன்: ``இப்படி ஒரு படம் வருவதே தெரியாது தம்பி. விஜய்னு ஒரு நடிகர் இருக்கார்னு தெரியும் அவ்வளவுதான். படம் பார்க்க எல்லாம் எங்களுக்கு எங்க நேரம் இருக்கு? ஒருவேளை விஜய்க்கு கெட்ட பழக்கம் இருந்தால், அதைத் திருத்திக்கணும். என்கிட்ட ஏதாவது கெட்ட குணம் இருந்தால், அதை நீங்கதான் சொல்லணும். எனக்கு சரினு பட்டுச்சுன்னா திருத்திப்பேன்.''

வித்யூலேகா: ``அந்தக் கெட்ட பழக்கம் என்னன்னு விஜய் அண்ணா சொல்லவே இல்லையே. அதைத்தான் தியேட்டர்ல வந்து பாருங்கனு இன்டைரக்ட்டா சொல்லிட்டாரேப்பா. ஒருவேளை வில்லன்களை எல்லாம் அழிப்பதைத்தான் கெட்ட பழக்கம்னு சொல்லியிருப்பாரோ!''

விஜி: ``எந்த ஹீரோவும் எப்போதுமே தனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருப்பதாகச் சொல்லவே மாட்டார். அப்படி `பைரவா' படத்தில் விஜய் தனக்கு கெட்ட பழக்கம் இருப்பதாகச் சொல்லி இருந்தால், அந்தப் படத்தின் இயக்குநர் பரதனை நான் தனிப்பட்ட முறையில் கண்டிக்கிறேன்.

ஓ.கே-வா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு