Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்
சினிமால்

விஜய் சேதுபதி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்ட படம் ‘விக்ரம் வேதா’. இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக மாதவன் நடிக்கிறார். தவிர, மூன்று காலகட்டங்களில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் ஜான் விஜய். விரைவில் தொடங்குகிறது இப்படத்தின் ஷூட்டிங். இதுல ஹீரோ யாரு சார்?

• அமிதாப் பச்சன் தான் நடிக்கும் ‘சர்க்கார் 3’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ‘ஷமிதாப்’ படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய பாடலைக் கேட்ட ராம் கோபால் வர்மா, ‘நீங்க நிச்சயம் பாடணும்’ என வேண்டுகோள் வைத்தாராம். விடிய விடிய நடித்துக் கொடுத்து, காலையில் ஸ்டூடியோவுக்குப் போய் பாடிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் அமிதாப். ஆல் இன் ஆல் ராஜா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு ‘4ஜி’ எனப் பெயர் வைத்தால், ஜெய் நடிக்கும் படத்துக்கு ‘4கே’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். ‘கனவில் கண்ட காதல் கவிதை’ என்பதன் சுருக்கம்தான் ‘4கே’வாம். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, சோனாலி ரவுத் என ஜெய்க்கு இரண்டு ஜோடிகள். பேரு பெத்த பேரு!

சினிமால்

• விஜய் ஆண்டனியை ‘சைத்தான்’ படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ரொம்பவே கவர்ந்து விட்டாராம். படத்தைப் பார்த்த விஜய் ஆண்டனி, படம் முடியும் முன்பே சிபிராஜிடம் இயக்குநரைப் பற்றிப் பேசி சிபாரிசு செய்து, அவரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

• ஹிந்தியில் ‘பெகன் ஹோகி தெரி’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ‘டி-டே’ போல தன்னை மையப்படுத்திய கதையாக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டு விட்டாராம் ஸ்ருதி. அஜய் இயக்க, டோனி டிசோசா தயாரிக்கிறார். லக் அடிக்குமா?

• நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் குறும்படங்கள், ஆவணப்படங்களைத் தாயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித், முழுநீளப் படத்தையும் தயாரிக்கிறார். தன் உதவியாளர் மாரி என்பவரை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இதில், கதிர் ஹீரோவாகவும், யோகிபாபு காமெடியனாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

சினிமால்

• ‘அனேகன்’ மூலம் தமிழ், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் அமையும் என நினைத்தார் அமைரா தஸ்துர். ‘அனேகன்’ நல்ல பெயரைக் கொடுத்தாலும், வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது சந்தானம் நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன், இப்படத்தை இயக்குகிறார்.

• இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தெலுங்கில் கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி பல கோடிகள் வசூலித்த ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார். தன் உதவியாளர் ஒருவரை இயக்குநராக்கி, சொந்த பேனரில் தயாரிக்கவிருக்கிறார் கௌதம். தெலுங்கைப் போலவே தமிழிலும் வசூல் கொட்டும் என நம்புகிறார் மேனன்.  சூப்பர் மேன் மேனன்!

• ‘திருட்டுப் பயலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் சுசி கணேசன், நாயகியைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக இருந்தார். கதையைக் கேட்ட அமலா பால், ‘ஒரு நடிகையின் கேரியரில் இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அமைவது ரொம்பக் கஷ்டம், நிச்சயம் நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லி உடனே ஓகே சொன்னாராம். ரசிகர்களுக்கு ட்ரீட் தான்!

சினிமால்

• கதை கேட்பதில் தொடங்கி, ரிலீஸ் வரை மெனக்கெடும் விஜய் ஆண்டனி, ‘வருடத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் வேற லெவல்ல இருக்கணும்’ என முடிவெடுத்திருக்கிறார். ‘எமன்’ படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார். படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தாலும், ஏராளமான படங்கள் வரிசையில் நிற்பதால், ‘இதை அடுத்த வருடம் சம்மர்ல ரிலீஸ் பண்ணுங்க’ எனத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

• ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் பேயாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘மோ’ படத்தின் மூலம் மீண்டும் பேய் ஆகிறார். புவன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். பேய்வர்யா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism