கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்
Published:Updated:

நானும் வில்லன்தான் பார்த்துக்க!

நானும் வில்லன்தான் பார்த்துக்க!
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் வில்லன்தான் பார்த்துக்க!

நானும் வில்லன்தான் பார்த்துக்க!

நானும் வில்லன்தான் பார்த்துக்க!

`தில்லுக்கு துட்டு' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்னு செய்தியைப் படிச்சதும் பக்குனு ஆயிடுச்சு. நம்ம காமெடி சூப்பர் ஸ்டார் எப்படி வில்லத்தனம் பண்ணுவார்னு வழக்கம்போல முந்திரி பக்கோடா சாப்பிட்டுட்டே முக்கால்மணி நேரம் யோசிச்சுப் பார்த்ததில், சிதறிய முத்துக்கள் இதோ...

எல்லா வில்லன்கள் மாதிரியும் `கசகச'னு கத்திக்கிட்டு கத்தி, கடப்பாரையோடு டாட்டா சுமோவில் பறக்க மாட்டார் வடிவேலு. மாறாக, ட்ரை சைக்கிளில் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தோ, மெரினாவில் ரவுண்டடிக்கும் குதிரையை ஆட்டையைப் போட்டோ... அதில்தான் அமர்ந்து செல்வார்.

பெரும்பாலான வில்லன்களைப் போல அடியாட்களை நம்ப மாட்டார். `ச்சூ...'னு சொன்னதும் டைமிங்கில் கடிக்கும் நாய்களையும், கராத்தே பழகிய முரட்டுப் பெண்களையும்தான் அருகில் வைத்திருப்பார். ஏன்னா, அடியாட்கள்கிட்ட இருந்துகூட தப்பிக்கலாம். ஆனால், இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது எனத் தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார்.

நானும் வில்லன்தான் பார்த்துக்க!

முருகன் வேஷம், முயல் பொம்மை வேஷம் எனப் பல கெட்-அப்களோடு வந்து ஹீரோக்களைப் பழிவாங்கவும் வாய்ப்பிருக்கிறது. எந்த வேஷம் போட்டாலும் அந்த வேஷத்தோடு ஒன்றிவிட வேண்டும் என்பதை `சிங்கம் வேஷம் போட்டால் சீறணும். புலி வேஷம் போட்டா பாயணும்' என அவரே சொல்லியிருக்கிறார்.

சாட் பேப்பரில் அழகாய் பிளான் போட்டு டிஸ்கஷன் செய்வார். எடக்கு மடக்காய்ப் பேசினால் பேப்பர் வெயிட்டைத் தூக்கி எறிவார். வில்லத்தனத்தில் வெரைட்டி காட்டுவார். உதாரணமாக, கொசு மருந்தில் பால்டாயிலைக் கலப்பது!

ஹீரோக்களை அடிப்பதற்காக பிரத்தியேகமான மெஷின் ஒன்றையும் வாங்கி வைத்திருப்பார். அந்த மெஷின் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரைத் தெளித்து, தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும்.

நானும் வில்லன்தான் பார்த்துக்க!

ஒரே ஒரு பக்க அட்வைஸில் எப்பேர்ப்பட்ட வில்லனையும் திருத்திவிடலாம் என்பது தமிழ் சினிமா ஹீரோக்களின் நம்பிக்கை. ஆனால், வடிவேலுவிடம் ஒரு பக்கம் வசனமெல்லாம் பேசத் தேவையில்ல... `நீ வில்லன் கிடையாதுடா. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறியேடா. நீ ரொம்ப நல்லவன்டா...'னு சொன்னாலே போதும். பெருவிரல் நகத்தை மற்ற விரல்களின் நகங்களோடு உரசி குமுறிக் குமுறி அழ ஆரம்பித்துவிடுவார்.

- ப.சூரியராஜ்