Published:Updated:

‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

 ‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

Published:Updated:
 ‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’
 ‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

பேட்டினா நடிகர் ஜான் விஜய்க்கு சிவகாசிப் பட்டாசு போல. கேள்வியை முடிக்கிறதுக்கு முன்னாடியே `பட்பட்’னு தெறிக்க விடுறது அவர் ஸ்டைல்!

``எங்கேயோ கிளம்பிட்டு இருக்கீங்க போல..?’’

``ஆமாம் பாஸ். உள்ளே நுழையுறப்போவே விசா வந்ததைப் பார்த்தீங்களோ... இந்தப் பேட்டியை மக்கள் படிச்சுகிட்டு இருக்கும்போது நான் அமெரிக்காவில் மலையாளம் பறைஞ்சிட்டு இருப்பேன். அமல் நீரட் டைரக்ட் செய்யும் அந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ. மகிழ்ச்சி பாஸ்!’’

‘‘என்னென்ன படம் ரிலீஸ்க்கு ரெடி?’’

`` `வீரசிவாஜி’ படத்தில் செம ஃபங்கியான ரோல். ஸ்டைலா காட்டியிருக்காரு டைரக்டர். ‘உள்குத்து’ன்னு ‘அட்டகத்தி’ தினேஷ் கூட ஒரு படம். ரெண்டுலயும் செம ரோல்! ‘மௌனகுரு’ தெலுங்கில் ரிலீஸாகி நல்ல ரீச். வழக்கமா காரமா நடிப்பேன். தெலுங்குக்காக இன்னும் காரசாரமா நடிச்சிருந்தேன். அதைத் தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி!’’

``பாட்டெலாம் பாட ஆரம்பிச்சிட்டீங்க போல ?

``ஆமாம் பாஸ்... ‘ஆளுக்குப் பாதி’ங்கிற படத்தில பாடியிருக்கேன். இசையமைப்பாளர் தரணிடம் ஒரு முறை பேசிட்டு இருக்கும்போது விளையாட்டுக்கு ‘லிரிக்ஸ்லாம் எழுதுவேன்பா’ன்னு வாய்ப்பு கேட்டேன். அதை மனசில வெச்சு, இந்தப் படத்தில் `எழுதவேணாம் பாடுங்க'ன்னு வாய்ப்பு கொடுத்திட்டார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு, நான்- மூணு பேரும் பிரதர்ஸ். எங்க தீம் சாங்கைத்தான் பாடியிருக்கேன். உண்மையாவே நல்லா வந்திருக்கு நைனா!’’

“ரஜினி உங்களுக்கு மட்டுமே சொன்ன பிரத்யேகமான விஷயம் என்ன?’’ 

`` `பாபா' படம் சூப்பர் ஸ்டார் எடுக்கிறதுக்கு முன்னாடி அவர்கிட்ட கதை சொல்ல வாய்ப்புக் கிடைச்சுப் போனேன். அவரை இம்ப்ரஸ் பண்றதுக்காக ஷால் ஒண்ணை தலைப்பாகை மாதிரி கட்டிக்கிட்டு கையை மடிச்சுவிட்டுக்கிட்டு ஒருமாதிரி கெட்-அப்ல போனேன். கதையெல்லாம் கேட்டு அனுப்பிட்டாலும் பின்னாடி ஒரு நாள், ஆள் மூலமா நான் அவரைப் பார்க்கப்போன கெட்டப்பை `பாபா'வில் பயன்படுத்தப் போறதா சொல்லி விட்டார். அப்புறம் பல வருஷம் கழிச்சி கபாலி சான்ஸ். கூட நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு. இந்த நேரத்தில் அதை ஏன் சொல்லிக்கிட்டுனு சொல்லாம விட்டுட்டு கூட நடிச்சேன்.  `கபாலி' ஷூட்டிங் அவர்கூட என் போர்ஷன்ஸ் முடியும்போது கூப்பிட்டு, `அப்ப நீதானே ஒரு மாதிரி ஃப்ரீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து கதை சொன்னே? எனக்கு இன்னும் நினைவு இருக்கு. இன்னும் ஒல்லியா இருந்தியே தம்பி!’னு கரெக்ட்டா கேட்டுட்டார்.  அவர் பழசை மறக்காமல் இருக்கார். `விஜய்! உன் வாழ்க்கையில் உனக்குப் பிடிச்ச எதையும் நிறுத்தி நிதானமா அனுபவி. அதுலயே குதிச்சு வீணாக்கிடாத!'- இதுதான் சூப்பர் ஸ்டார் எனக்குச் சொன்ன அட்வைஸ்!”

‘‘நீங்க நடிக்க விரும்பும் இயக்குநர்களை க்யூட்டா லிஸ்ட் போடுங்க ப்ரோ!’’

``புஷ்கர் காயத்ரி - என்னை எனக்கு உணர்த்தியவர்கள்.

மணிரத்னம் - எவ்வளவு சாதாரண நடிகருக்கும் இவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு கான்ஃபிடன்ஸ் வந்துடும். ராணுவ கேம்ப் போய் வந்த அனுபவம் கிடைக்கும்.

அல்போன்ஸ் புத்திரன்  - `நேரம்' படத்தில் நடிக்கும் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேஷம் என்பதால் கொஞ்சம் சவுண்டா டயலாக் பேசினேன். `எதுக்கு இவ்வளவு சவுண்டா பேசுறீங்க. ரெண்டு நாள் சாப்பிடலைன்னா எப்படிப் பேசுவிங்கன்னு பேசிக்காட்டுங்க’ன்னு சொன்னார். பேசிக்காட்டினேன். `இனிமே இந்த சவுண்டில் பேசினா போதும்’னார். அலட்டிக்காம பெர்ஃபார்மென்ஸ் பண்ணுவது எப்படின்னு இவர்கிட்ட கத்துகிட்டது மலையாளரக்கரையோரம் இப்பவரைக்கும் ஹெல்ப் பண்ணுது!

சாந்தகுமார் - மனுஷன் என்னை அந்த கேரக்டராகவே மாத்திட்டார். வீட்டில்கூட அப்படியே இருக்குறமாதிரி ஃபிக்ஸ் ஆகிட்டேன். `படத்தில் என்ன கேரக்டர் பண்ணுறோமோ அதை ஃபிக்ஸாகி வாழ்ந்திடணும்'னு சொல்லிக்கொடுத்தவர். டெரரான ஆள்!

சுந்தர்.சி -  அனாவசியமான டயலாக், தேவையில்லாம நீளமான சீன் போன்றவற்றை வைக்காமல் எடுப்பார். ரஜினி, கமல் எல்லோரையும் இயக்கியவர். `அலட்டாம நடிங்க, ஜனங்களுக்கு பிடிக்கும்’ என்பது இவர் எனக்குச் சொன்ன அட்வைஸ்.

பா.ரஞ்சித் - தோழமையான இயக்குநர். ஒரு வார்த்தைகூட எந்த இடத்திலும் அதிகாரமாகப் பயன்படுத்தமாட்டார். அழகா சொல்லிக்கொடுத்து வேலை வாங்குவார்!

மிஷ்கின் என் கனவு இயக்குநர். அவரின் டைஹார்ட் ஃபேன் நான். சீக்கிரமே அந்த ஆசை பலிக்கணும்!”

 ‘‘ஹாலிவுட்டில் சான்ஸ் தேடப் போறேன்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எந்த ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படுறீங்க ப்ரோ?’’

``விஷால் - உண்மையாலுமே எம்ஜிஆர் மாதிரி வள்ளல்.

தனுஷ் - தெறி பெர்ஃபார்மர். கத்துக்கிட்டே இருக்கிறவர்.

சிம்பு - என்னை மாதிரியே தக் (Thug)! கம்ப்ளீட் ஆக்டர்.

சிவகார்த்திகேயன் - என்டர்டெயினர். சிவாவை முன்னாடியே தெரியும் என்றாலும் இன்னைக்கு சின்னப்பிள்ளைங்கள்லாம் இவரைக் கண்டா குஜாலாகிடுதுங்க. இப்படியான நடிகரா அவர் மாறி நிற்கும்போது நாமும் கூடநடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுது. பெண்களில் திரிஷாகூட நடிக்கணும். கோவை சரளா மேடம் கூட நடிக்கணும். இதெல்லாம் தாண்டி இரண்டே இரண்டு ஆசைகள் இருக்கு. கௌதம் மேனன் சார் படத்தில் தெறிக்க தெறிக்க டெரர் வில்லனா நடிக்கணும். இயக்குநர் விசு சார் படத்தில் அப்பாவி குடும்பஸ்தனா நடிக்கணும். `கோதாவரி கோட்டை கிழிடி’ன்னு அவர் சத்தம் போடும்போது கண்களில் ஆற்றாமையுடன் நிற்கும் அவரது மகன்களைப் போன்ற கேரக்டரில் நடிக்க ரொம்பவே ஆசை. இந்தப் பேட்டியைப் படிக்கப்போற உங்க கண்களில் தெரியும் மரணபயத்தைப் பார்த்துட்டேன். அடுத்து இரண்டு ஐடியா இருக்கு. அதையும் சொல்லிடுறேன். நம்பர் 1 - இட்லிக் கடை போடப்போறேன். சும்மா காரசாரமா மணக்க மணக்க குழம்பு வகைகளோட இட்லிக்கடை. தெறிக்க வுடுறோம் (எங்களை ஏன் பாஸ் ஆட்டைக்கு சேர்க்கிறீங்க?)

நம்பர் 2 - ஹாலிவுட்ல சான்ஸ் தேடப்போறேன். ஒவ்வொரு இங்கிலீஷ் படத்திலேயும் நம்மாளுங்க பத்து பேர் இருக்கத்தான் செய்றாங்க. அதனால ஏதாவது ஒரு சீன்லயாவது நடிச்சிடுறதுங்கிற ஐடியாவோடதான் அமெரிக்கா கிளம்புறேன். பை பை!’’
 

- வரவனை செந்தில், படங்கள்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism