கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்
Published:Updated:

``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’

``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’
பிரீமியம் ஸ்டோரி
News
``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’

``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’

``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’

லையாளத்தில் முன்னணிக் கதாநாயகர்களின் ஜோடியாக வலம் வந்தவர்... தமிழில் `வால்மீகி', `அய்யனார்', `சண்டமாருதம்' என சில படங்களில் நடித்து வந்த மீரா நந்தன் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள `கோல்ட் எஃப் எம்'மின் பண்பலை தொகுப்பாளர்! சமீபத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து `ஸ்கை டைவிங்' சாகசம் செய்திருக்கிறார். திகில் அனுபவம், திருமணம் என மீரா நந்தனோடு ஒரு பேட்டி...

``எப்படி இருக்கு நடிகைல இருந்து பண்பலை தொகுப்பாளரா மாறிய அனுபவம்?’’

``நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாலயே தொலைக்காட்சி தொகுப்பாளராதான் இருந்தேன். இப்போதும் என்னை ஒரு நடிகையாதான் பார்க்குறாங்க. ஆரம்பத்துல சின்னச்சின்ன தப்பெல்லாம் பண்ணினேன். இங்கே லைவா இருக்கணும். இது ஒரு சவாலான வேலை. சினிமா மாதிரி டப்பிங்ல தப்பு பண்ணிட்டா அடுத்த டேக்ல சரி பண்ண முடியாது. ஆர்ஜே ஆன பிறகும் படத்துல டப்பிங் பேசினேன். வழக்கமா ரெண்டு நாள் மூணு நாள் டப்பிங் பேசுன நான் அரை நாள்லயே டப்பிங் முடிச்சிட்டேன். அதுபோக தினம்தினம் புதுப்புது ஆட்கள் கிட்ட பேசுறோம். புதுசா இருக்கு. ஆர்ஜே பண்றது ரொம்பப் பிடிச்சுருக்கு.’’

``அப்போ இனிமே சினிமாவுல மீராவை தரிசிக்க முடியாதா?''

``ஹாஹா... அப்படி இல்லை. சினிமால நடிக்கிறதுக்கு இங்க எந்தத் தடையும் இல்ல. ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கலாமேனு இந்த ஃபீல்டுக்கு வந்திருக்கேன். வந்து சேர்ந்து நாலு மாசம் ஆகுது. திரும்பவும் சினிமாவுல மீராவைப் பார்க்கலாம். ரெஃப்ரெஷ் பட்டன் ஆன் பண்ணின ஃபீல் இப்போ!’’

``ஸ்கை டைவிங் ஆர்வம் எப்படி வந்துச்சு?’’

``எனக்கு இந்த மாதிரி சாகசங்கள் அடுத்தவங்க செய்யிறப்பவே அதுல ரொம்ப ஆர்வமா இருக்கும். நாமளும் இது மாதிரி செய்யணும்னு தோணுச்சு. no fear day அன்று பண்ணலாம்னு முடிவு பண்ணினப்போ ஆபிஸ்லயும் நல்ல சப்போர்ட் பண்ணினாங்க. 13 ஆயிரம் அடி உயரத்துல இருந்து இரண்டே நிமிஷத்துல கீழே வந்திட்டேன். அது ஒரு மறக்க முடியாத த்ரில் அனுபவம். கீழே இறங்கும்போது ஜலதோஷமே பிடிச்சிடுச்சு!’’

``கல்யாணம்னு சொன்னாங்க?’’

``கல்யாணமும் ஸ்கை டைவிங்கும் ஒண்ணுதான்’’

``போட்டு வாங்குறீங்களா? இப்போதைக்குக் கல்யாணம் இல்ல. அதுக்காக கல்யாணமே பண்ண மாட்டேன்னு இல்ல. கல்யாணம்ங்கிறது இந்த ஸ்கை டைவிங் மாதிரி. அவ்வளவு உயரத்துல இருந்து குதிக்கப் போற கடைசி நொடி வரைக்கும் ஒரு பதற்றம் இருந்துட்டே இருக்கும்ல. குதிச்சிடலாம்னு மனசு சொல்லும்போதுதானே குதிக்க முடியும். அதுவரைக்கும் வெயிட் பண்ணலாம், தப்பு இல்லை!’’

``மீராவுக்கு என்னெல்லாம் பிடிக்கும்?’’

``மழை வாசனை, ஃபில்டர் காபியோட வாசனை பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து வெளிய லாங் ட்ரைவ் போகப் பிடிக்கும். மோகன்லால் பிடிக்கும். ஜார்ஜ் க்ளூனி பிடிக்கும். லிஸ்ட் ரொம்பப் பெருசு பாஸ்’’

``சென்னை பிடிக்குமா?’’

``சென்னை ரொம்பப் பிடிக்கும். அங்கே ஷூட்டிங் டைம்ல எல்லா மக்களுமே ரொம்ப அக்கறையா அன்பா பார்த்துக்கிட்டாங்க. பொங்கல் சாம்பார்னா இஷ்டம். சீக்கிரமே சென்னை வருவேன்!''

-ந.புஹாரி ராஜா