Published:Updated:

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’
பிரீமியம் ஸ்டோரி
``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

Published:Updated:
``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’
பிரீமியம் ஸ்டோரி
``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’
``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

``அப்பா சினிமாவுல ரொம்ப வருஷம் உதவி இயக்குநராகவே இருந்தவர். நான் இஞ்சினியரிங் முடிச்சுட்டு சினிமாவுக்குப் போறேன்னு சொன்னப்ப யாருமே ஏத்துக்கல. `இவ்ளோ வருஷமா அப்பா சினிமால இருக்காரு. அவராலயே  சக்சஸ் ஆக முடியல. நீ சினிமாவுக்குப் போய் என்ன பண்ணப்போறே'ன்னு சொன்னாங்க. நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்ய முடிவெடுக்குறப்ப அதுல இருக்கும் ரிஸ்க், நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு  ஒருவித பயத்த உண்டு பண்ணிடுது. ஏன்னா இங்க எல்லா விஷயத்தையுமே ஒரு வெற்றிதானே தீர்மானிக்குது!” - கனவுகளை ஜெயித்துவிட்ட சந்தோசத்தில் நம்பிக்கையோடு பேசுகிறார்  `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

``முதல் படம் `திரிஷா இல்லைனா நயன்தாரா'வை அடல்ட் காமெடி ஜானர்ல எடுக்கணும்ங்கிற தைரியம் எப்படி வந்துச்சு?’’

‘‘இது யாருமே பேசத் தயங்குற ஒரு விஷயம். பாலிவுட்ல எல்லாம் பிரேக்-அப் பத்தி படங்கள் வருது. லவ் பத்தி நேரடியா பேசுறாங்க. ஆனா தமிழ்ல ஏன் இந்த மாதிரி சோதனை முயற்சிகள் பண்ணமாட்றாங்கன்னு ஒரு கேள்விதான் `திரிஷா இல்லைனா நயன்தாரா'.

`டார்லிங்', `பென்சில்' எல்லாம் பண்றதுக்கு முன்னாலயே ஜி.விதான் பண்ணஞும்னு முடிவு பண்ணி  முப்பத்தி எட்டு தயாரிப்பாளர்கள்கிட்ட இந்த கதையச் சொல்லியிப்பேன். பாதிப் பேருக்குப் புரியல. மீதிப் பேருக்குப் புடிக்கல. `என்னப்பா இது ஒரே வல்கரா இருக்கு!'ன்னு. `அப்படியே பண்ணாலும் சென்சார்ல போயிட்டு படம் முழுசா வருமாங்குறதே சந்தேகம்'னு சொன்னாங்க. ஆனா அதையெல்லாம் மீறி இந்தக் கதைய முதல் தடவை அங்கீகரிச்சது தாணு சார்தான். ஆனா அவரால அப்ப பண்ண முடியல. ஏதோ ஒரு விஷயம் புதுசா இருக்கேங்குற நம்பிக்கைலதான் அப்போ படத்தோட தயாரிப்பாளார் ஜெயக்குமார் இதைத் தயாரிக்க ஒத்துக்கிட்டார்.

சினிமாவுல என்ட்ரிங்குறது சாதாரணம் இல்ல. பத்தோட ஒரு படமா பண்ணிடக்கூடாது, சரியோ தப்போ முதல் படம் எடுக்கப்போறோம்.திட்டுனாலும் பரவாயில்லை. எல்லாரும் அந்தப் படத்தைப் பத்திப் பேசணும். நம்மள யாரும் மறக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிதான் அந்தப் படம்  பண்ணினேன். ஆனா நான் எதிர்பார்த்ததைவிட கம்மியாதான் திட்டுனாங்க.’’

``சூப் பாய் சிம்பு, விர்ஜின் பையன் ஆதிக், காம்பினேஷனே கலவரப்படுத்துது! எப்படி இந்தக் கூட்டணி?’’

``என்னோட முதல் படம் டீசர் வந்தப்ப இண்டஸ்ட்ரில இருந்து பெருசா யாரும் எந்த ரெஸ்பான்சும் காட்டிக்கல. சிம்பு சார்தான் முதல்ல போன் பண்ணி டீசர் சூப்பரா இருக்குன்னு நம்பிக்கை கொடுத்தார். அடுத்தடுத்து ட்ரெய்லர் பாட்டுன்னு ரிலீஸ் ஆனதும் இந்தப் படம் கல்ச்சுரல் ஷாக் கொடுத்தாலும் கலெக்‌ஷன்ல ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும்னு சொன்னார். `அப்படியெல்லாம் இல்லண்ணா, படம் ஓடுனாலே போதும்'னு சொன்னேன். ரிலீஸ் ஆன பிறகு அவரோட கணிப்பு சரியா இருந்துச்சு. ஒருநாள் வீட்டுக்கு கூப்பிட்டிருந்தார். லஞ்ச் சாப்பிடும்போது, `எனக்கு ஏதாவது கதை இருக்கா'ன்னு கேட்டார். ஒரு கதை சொன்னேன். `இது வழக்கமா இருக்கு. வேற ஏதாச்சும் இருக்கா'ன்னு கேட்டார். `இருக்கு... கொஞ்சம் ஹெவியான கதை. நிறைய மெனக்கெடல் இருக்கு. கெட்டப்ல இருந்து எல்லாமே மாறணும்னு சொன்னேன். கதையைக் கேட்ட உடனே,  `கண்டிப்பா நான் இதைப் பண்றேன்'னு கிரீன் சிக்னல் கொடுத்தார். அப்படி ஆரம்பிச்சதுதான் ட்ரிப்பிள் ஏ.’’

``இதுவும் முதல் படம் மாதிரிதானா?’’

``நிச்சயமா இது வேற படம். எனக்கு மாஸான ஒரு படம் எடுக்கணும்னு ஆசை. மாஸ் அப்படின்னதும் அடிச்சதும் பத்துப்பேரு பறந்து விழுறது இல்ல. ஒரு சைலன்ட் ஹீரோயிஸம் இருக்கும். இதோட அவுட்புட் முதல் படம் மாதிரி இருக்காது. இது எல்லாருக்கும் பிடிச்ச ஒரு மாஸ் என்டர்டெயினரா இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா அஜீத் சாருக்கு ஒரு தீனான்னா சிம்புவுக்கு இந்த ட்ரிப்பிள் ஏ இருக்கும்னு என்னால உறுதியா சொல்லமுடியும். அதே நேரத்துல என்னோட டச்சும் கண்டிப்பா இருக்கும்.’’

``திரும்பவும் யுவன்-சிம்பு, பத்தாததுக்கு மூணு ஹீரோயின்ஸ்..?’’

``ஏற்கனவே சிம்புவும் யுவனும் நாலு படம் சேர்ந்து பண்ணியிருக்காங்க. அதோட ரீச்சே வேற. கண்டிப்பா அதைவிட பெஸ்ட் கொடுக்கணும்ங்கிற பொறுப்பு எல்லாருக்குமே இருக்கு. இதுல சிம்பு எழுதியிருக்கிற பாட்டு நிச்சயம் எல்லாருக்கும் சர்ப்பிரைஸா இருக்கும்.

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிம்பு நடிக்காத ஹீரோயின்ஸ் யாருடான்னு பார்த்தா, தேட வேண்டியதா இருந்துச்சு. முக்கால்வாசிப் பேரு கூட ஜோடி சேர்ந்துட்டாரு. ஷ்ரேயா, தமன்னா இப்போ மூணாவது ஹீரோயினும் இதுவரை அவர் கூட நடிக்காத ஒரு நடிகையாதான் இருப்பாங்க.

படம் முழுக்க நிறைய சைலன்ட் பஞ்ச் டயலாக்ஸ் இருக்கு. `சிறப்பு' னு வசனம் படம் முழுதும் டிராவல் பண்ணிட்டே இருக்கும். 75 சதவீதம் படம் முடிஞ்சுருச்சு. பிப்ரவரி ரிலீஸுக்கு பிளான் பண்ணிருக்கோம். பார்க்கலாம்’’

``அது சரி, பொண்ணுங்க மேல ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம்?’’

`` `திரிஷா இல்லைனா நயன்தாரா' ஓப்பனாவே ஏ சர்ட்டிபிகேட் வாங்கி எடுத்த படம். `இது பசங்களுக்கான படம் தயவு செஞ்சு லேடீஸ் பார்க்காதீங்க'ன்னு, பேட்டியிலேயே சொல்லியிருந்துருப்பேன். ஆனா நடந்தது எல்லாமே தலைகீழ். பொண்ணுங்க மேல கோபம் அப்படினெல்லாம் கிடையாது. பசங்களுக்கான ஸ்பேஸ் என்னோட படத்துல எப்போவும் இருக்கும். அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.’’

``முதல் படத்தைப் பார்த்துட்டு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?''

 ``அப்பாதான் என்னோட முதல் படத்துல எனக்கு கோ டைரக்டர். இப்போ `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'லயும் அப்பாதான் கோ டைரக்டர். அப்பாவுக்கும் எனக்கும் உள்ள டீலே படத்த பத்தியோ ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்குறதைப் பத்தியோ வீட்டுல பேசக்கூடாதுங்குறதுதான்.

``இந்தமாதிரி படம் எடுக்காதேனு அம்மா திட்டுனாங்க!’’

`திரிஷா இல்லைனா நயன்தாரா' முதல் ஷோ காசி தியேட்டர்ல அம்மாவைக் கூட்டிட்டுப் போனேன். அந்த தியேட்டர்ல இருந்த ஒரே லேடின்னா அது அம்மா மட்டும்தான். ``ஏண்டா படத்தைப் பார்த்துட்டு விசிலடிக்கிறாங்க கை தட்டுறாங்க. அவ்ளோதான். அதுக்காக இந்த மாதிரிலாமாடா படம் எடுப்ப'ன்னு ரொம்ப திட்டுனாங்க. `இனிமே இந்த மாதிரி தயவு செஞ்சு படம் எடுத்து வந்து நிக்காத'ன்னு சொன்னாங்க. இது எல்லாத்தையும்விட தமிழ் சினிமா ரெஃப்ரெஷ் ஆகணும்னா இது மாதிரி படங்கள்  வரணும். பத்து வருஷத்துக்கு முன்னால செல்வராகவன் சார் `துள்ளுவதோ இளமை' பண்ணாங்க. இப்போ நான் பண்ணியிக்கேன், இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு வேற யாராவது பண்ணுவாங்க. இங்க பரிசோதனைகள் நடந்துகிட்டே இருந்தாதான் சினிமாவுல மாற்றம் உண்டாகும்!’’

- ந.புஹாரி ராஜா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism