கலாய்
சினிமா
ஃபோட்டோ கமென்ட்
Published:Updated:

காதல் பாதி காமெடி பாதி!

காதல் பாதி காமெடி பாதி!
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் பாதி காமெடி பாதி!

காதல் பாதி காமெடி பாதி!

காதல் பாதி காமெடி பாதி!

ரொமான்ஸ், ஹாலிவுட்காரர்களுக்குக் கைவந்த கலை. காமெடி பொதுவாகவே கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் பெனால்டியில் கோல் அடித்தாவது அதிலும் பாஸாகிவிடுகிறது ஹாலிவுட் சினிமா. அப்போ இவை இரண்டையும் மிக்ஸ் பண்ணா? ரொமான்டிக் காமெடி ஜானரைச் சேர்ந்த படங்கள் பார்க்க லைட் வெயிட்டாக இருந்தாலும் ஆடியன்ஸிடம் ரீச் ஆவது மிகச் சிரமம். சலிக்காத காதல் கதை, கொஞ்சம் கூடல், நிறைய ஊடல், நடுநடுவே காமெடி, கிக் கெமிஸ்ட்ரி என சகல மசாலாக்களையும் சரிவிகிதத்தில் கலந்தால்தான் படம் ஹிட். அப்படி எல்லாம் சரியாகக் கலந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்த ரொமான்டிக் காமெடி ஜானர் படங்கள் சிலவற்றின் பலே பட்டியல்!

காதல் பாதி காமெடி பாதி!

ஸ்டீவ் காரெல், ஜூலியன் மூர், எம்மா ஸ்டோன், மரிசா தொமேய் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த படம். மனைவி டைவர்ஸ் வாங்கிப் பிரிந்து செல்ல, தனிமையில் தவிக்கிறான் கால் வீவர். அப்போது அவனுக்கு ஜேக்கப் என்பவனின் நட்பு கிடைக்கிறது. அவன் பெண்களைக் கவர எக்கச்சக்க ஐடியாக்கள் தருகிறான். அவற்றைப் பின்பற்றும் கால், கேட் என்ற பெண்ணைக் காதலில் விழ வைக்கிறான். வெயிட் வெயிட். இந்தக் கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? இத்தனை ஸ்டார்ஸ் நடிக்கிற படம்னா கண்டிப்பா அதைத் தமிழ்ல எடுக்க சுந்தர்.சியால மட்டும்தான் முடியும். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ இந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். தமிழ் வெர்ஷனைப் போலவே ஹாலிவுட் வெர்ஷனும் கலெக்‌ஷன் குவித்தது.

காதல் பாதி காமெடி பாதி!

ஹாலிவுட்டின் ஸ்டார் இயக்குநர் வுடி ஆலனின் படைப்பு. ஹீரோ தன் பிரேக்அப் குறித்து அசைபோடுவதுதான் கதை. காதல், மோதல், காமெடி எனக் கதம்பமாகச் செல்லும் கதையின் முடிவில் ‘சரி, இது நமக்கு ஒர்க் அவுட் ஆகாது’ என காதலர்கள் பேசிவைத்துப் பிரிகிறார்கள். பின் ஆளுக்கொருவரை சந்தித்து மீண்டும் காதலில் விழுகிறார்கள். ‘காதல் எல்லோருக்கும் அவசியமானது’ என்ற வுடி ஆலனின் குரலோடு படம் முடியும். படத்தின் ஹீரோயின் டயான் கீட்டன் மேல் நிஜமாகவே காதல் இருந்ததால் அவருக்காகவே உருகி உருகி சீன் வைத்தார் ஆலன்!

இதுவும் பிரேக் அப்பிற்குப் பின்னான காதலைக் கொண்டாடும் படம்தான். இசையமைப்பாளர் பீட்டருடன் பிரேக் அப் செய்துகொள்கிறாள் முன்னணி நடிகையான சாரா மார்ஷல். காதல் தோல்வியை மறக்க ஹவாய்க்கு செல்கிறான் பீட்டர். அங்கு இந்நாள் காதலனோடு வெக்கேஷன் கொண்டாட வருகிறாள் சாரா. அங்கிருக்கும் ரேச்சலோடு பீட்டருக்குக் காதல் மலர, மறுபக்கம் சாராவுக்கு திரும்பவும் பிரேக் அப் ஆகிறது. பொறாமையில் பீட்டரையும் ரேச்சலையும் அவள் பிரிக்கப் பார்க்க, அப்புறம் என்ன ஆனது என்பதுதான் கதை. ஹவாயின் குளுகுளுப் பின்னணியில் கலகல காமெடி கலந்து சொன்ன கதை என்பதால் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.

காதல் பாதி காமெடி பாதி!

பெயரைப் பார்த்தாலே கதை புரிந்துவிடுமே. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கைப்படி வாழும் இருவர் வேலை நிமித்தமாய் சந்தித்துக்கொள்கிறார்கள். நண்பர்களாகிறார்கள். செக்ஸும் வெச்சுக்கலாம், தப்பில்லை. ஆனா அதுக்கு மேல `நோ ஃபீலிங்ஸ்' என்ற கொள்கைப்படி நெருக்கமாகிறார்கள். கடைசியில் காதலிலும் விழுகிறார்கள். அதன்பின் வழக்கமான மோதல், சேர்தல்தான். ஜஸ்டின் டிம்பர்லேக் - மிலா குனிஸ் இடையிலான கெமிஸ்ட்ரி தெறி லெவலில் இருக்க படமும் சூப்பர் ஹிட். மேற்கத்திய நாடுகள் மட்டுமே அறிந்திருந்த ஒரு கலாசாரத்தை நம் ஊர் பட்டிதொட்டிகளுக்கும் பரிச்சயப்படுத்திய படம் இது.

காதல் பாதி காமெடி பாதி!

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு வேற்று மொழித் திரைப்படம். தங்கள் மகள் அமிலிக்கு இதயக்கோளாறு இருக்கிறது என நம்பும் அவளின் பெற்றோர் அவளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். பெரியவளானதும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்க்கிறாள். ஒரு பழைய பெட்டியைக் கண்டுபிடிக்கும் அவள் அதை அதன் உரிமையாளரிடம் சேர்ப்பதுதான் கதை. அந்தப் பயணத்தில் அவள் சந்திக்கும் மனிதர்களும், கொள்ளும் காதலும்தான் கதை. தன் க்யூட் ரியாக்‌ஷன்களால் படம் முழுக்க ராஜ்ஜியம் செலுத்தினார் அமிலியாக நடித்த ஆட்ரே. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

காதல் பாதி காமெடி பாதி!

ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் படத்தின் இன்னொரு வெர்ஷன் இது. லைட் ஹார்டட் ரொமான்டிக் படங்களுக்கெனவே நேர்ந்துவிடப்பட்ட ஆஸ்டன் குட்சர்தான் இந்தப் படத்திலும் ஹீரோ. திரும்பத் திரும்ப ‘தற்செயலாக’ சந்தித்துக்கொள்ளும் இருவர் நட்பாகிறார்கள். ஒரு கட்டத்தில் ‘கேஷுவல் செக்ஸ்’ தப்பில்லை என அதையும் முயற்சி செய்கிறார்கள். அப்புறமென்ன ஊடல், கூடல், காமெடிதான் மிச்சக் கதை. ஆஸ்டனின் குறும்பிற்காகவும் நடாலி போர்ட்மென்னின் ‘தாராளத்துக்காகவும்’ படம் இளசுகள் மத்தியில் கொண்டாடப்பட்டது. விமர்சகர்கள் கொஞ்சம் கழுவி ஊற்றினாலும் வசூல் பட்டையைக் கிளப்பியது.

காதல் பாதி காமெடி பாதி!

ஹாலிவுட் மார்க்கண்டேயனி கேமரூன் டயஸும், கனவுக்கண்ணன் ஆஸ்டன் குட்சரும் நடித்த செம ஜாலிக்கதை இது. காதல் தோல்விகளால் கடுப்பாகிச் சுற்றும் இருவரும் லாஸ் வேகாஸில் தற்செயலாக சந்தித்துக்கொள்கிறார்கள். சேர்ந்து பார்ட்டி செய்கிறார்கள். போதையில் திருமணமும் செய்துகொள்கிறார்கள். விடிந்தபின் தங்கள் தவறை உணர்ந்து விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்நேரம் பார்த்து ஆஸ்டனுக்கு மூன்று மில்லியன் டாலர் ஜாக்பாட் அடிக்க, மனைவிக்கும் பங்கு உண்டு என மல்லுகட்டுகிறார் கேமரூன். இப்படியாக சண்டை, பித்தலாட்டம் எல்லாவற்றையும் கடந்து திரும்ப அவர்கள் சேர்வதுதான் கதை. இளமை ததும்பும் கதை என்பதால் எகிறி எகிறி வசூல் குவித்தது.
 

காதல் பாதி காமெடி பாதி!

இந்த லிஸ்ட்டில் உள்ள இன்டிபென்டண்ட் சினிமா. டாம் - சம்மர் என்ற இருவருக்கும் இடையிலான காதலைக் கொஞ்சம் காமெடியோடு சொல்லும் படம். முடிந்துபோன காதல் பக்கங்களை டாம் திருப்பிப் பார்ப்பதாக நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருப்பார்கள். இதற்காக அன்னி ஹால் படத்தின் தழுவல் இது என சிலர் விமர்சித்தாலும் இந்தப் படத்தைத் தழுவியும் எக்கச்சக்க படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் நாம் கொண்டாடும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. முதல் வாரத்திலேயே பட்ஜெட்டை விட 27 மடங்கு வசூல் அள்ளிய படம் என்ற ரெக்கார்ட் இந்தப் படத்திற்கு உண்டு. மில்லேனியத்தின் பெஸ்ட் லவ் சப்ஜெக்ட் என இப்போதுவரை கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

- நித்திஷ்