Published:Updated:

“கவிக்கோ காட்டிய வழி!''

“கவிக்கோ காட்டிய வழி!''
பிரீமியம் ஸ்டோரி
“கவிக்கோ காட்டிய வழி!''

“கவிக்கோ காட்டிய வழி!''

“கவிக்கோ காட்டிய வழி!''

“கவிக்கோ காட்டிய வழி!''

Published:Updated:
“கவிக்கோ காட்டிய வழி!''
பிரீமியம் ஸ்டோரி
“கவிக்கோ காட்டிய வழி!''
“கவிக்கோ காட்டிய வழி!''

சனகர்த்தா, இயக்குநர், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் சினிமாத் துறையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இருந்தாலும், அதிகமாக வெளித்தெரியாத முகம் இவருடையது. சமீபமாகக் `காக்கிச்சட்டை', `விசாரணை', `தர்மதுரை' போன்ற படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்த ஈ.ராம்தாஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினேன்.

“சின்ன வயசிலிருந்தே ரொம்ப நல்லா படிப்பேன். அப்பவே எழுதுறதில் ரொம்ப ஆர்வம். கல்லூரியில் படிக்கும் சமயம் கவிக்கோ அப்துல் ரகுமானிடம் பேசும்போது `சினிமாத் துறைக்குள்ளே போகலாமே'னு சொன்னார். எனக்கும் சினிமா ஆசை துளிர்விட்டு, படிப்பு முடிஞ்சதும் ‘கிழக்கே போகும் ரயில்’ ரிலீசான சமயத்தில், படம் பார்த்ததும் அன்னிக்கு ராத்திரியே, `மெட்ராஸுக்குப் போறேன்'னு வீட்டில் சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். அப்போ எனக்கு இலக்கியத்தின் மீது ரொம்ப ஈடுபாடு இருந்தது. மெட்ராஸ் வந்ததும் என் நண்பனின் அறையில் தங்கியிருந்தேன். அப்போ பணநெருக்கடியில் இருந்ததால் மத்தியானம் சாப்பாடு போடுவாங்கன்றதுக்காகவே ஒரு கேட்டரிங் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அதற்குப் பக்கத்திலேயே ஃபிலிம் இன்ஸ்ட்டியூட் இருந்ததால் சும்மா இருக்கும்போதெல்லாம் அங்கே போயிருவேன்.

அதற்குப் பக்கத்தில் மனோபாலாவின் அறையும் இருந்ததால் அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. தர் ஒரு படம் பண்ணிட்டு இருக்கும்போது மனோபாலாவின் ரூமுக்குப் போனேன். அங்கே ஒரு ஸ்டில்லைப் பார்த்துட்டு, ‘குடிசை நாவலில் வரும் குறிப்பிட்ட சீனா இது'ன்னு கேட்டேன். அவர், ‘இது எப்படி உனக்குத் தெரியும்'னு ஆச்சர்யப்பட்டார். அப்போதான் என் வாசிப்பு ஆர்வத்தைச் சொன்னதும், `நீ சினிமாவுக்கு வரவேண்டிய ஆள்தான்'னு பாராட்டினார்” என சினிமாவுக்குள் நுழைந்த கதையைச் சொல்கிறார்.

“சினிமாவில் உங்கள் என்ட்ரி எப்படி இருந்தது?”

“சினிமாவில் எழுதுற ஆட்கள் குறைவாக இருந்த காலகட்டம் அது. அதனால், போனதுமே வசனம் எழுதுற வாய்ப்புதான் கிடைச்சது. ரெண்டாவது படத்துக்குப் பிறகு மணிவண்ணன் சார்கிட்ட அஸிஸ்டென்ட்டாகச் சேர்ந்தேன். அப்புறம் படம் இயக்க ஆரம்பிச்சேன். என்னோட முதல் படம் ரிலீசாகுறதுக்கு முன்னாடி ரேடியோவில் என்னுடைய இயக்கத்தில் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படம் எடுத்துக்கிட்டு இருக்கிறதா விளம்பரங்கள் வந்துச்சு. என்னை ஒரு சினிமாக்காரனா எங்க அப்பாவுக்கு அவ்ளோதான் தெரியும். அதுக்குப் பின்னாடி என்னோட வளர்ச்சியைப் பார்க்கிறதுக்கு அவர் இல்லை. சில பிரச்சினைகளால நான் அஸிஸ்டென்டா இருந்த படங்களுக்கு எல்லாம் இசையமைத்த இளையராஜா என்னோட முதல் படத்துக்கு இசையமைக்க முடியாமல் போச்சு. அப்புறம் தொடர்ந்து ராமராஜன் நடிப்பில் ‘ராஜா ராஜாதான்’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’, மன்சூர் அலிகானை வைத்து ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’ போன்ற படங்களை எடுத்தேன்.”

“அப்புறம் ஏன் இவ்வளவு இடைவெளி..?”

“நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளர்ங்கிறதால கமர்ஷியல் படங்கள் எனக்குத் திருப்தி தரலை. இங்கே நல்ல படங்கள் வெளிவரணும்னா ரொம்பக் காத்திருக்கணும். கின்னஸ் சாதனைக்காக 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட ‘சுயம்வரம்’ படத்தின் பத்து இயக்குநர்களில் ஒரு இயக்குநராக இருந்தேன். சில உடல் காரணங்களால் முழுசா சினிமாவில் கவனம் செலுத்த முடியலை. இயக்குநராக இருந்தா அதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி உழைக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால் எழுத்தில் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினேன். கிடைத்த கேப்பில் சீரியல்களுக்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் எபிஸோடுகளுக்கு வசனம் எழுதினேன். அதில் ஓரளவு பொருளாதார நிலை உயர்ந்தது. கலைஞர் டி.வி.யில் நான்கு சீரியல்கள் தயாரிச்சேன். சினிமாவில் நான் இடைவெளி விடவே இல்லை. இப்போவரையும் நான் ரெஸ்ட் எடுக்காமல் ஏதோ ஒரு வடிவத்தில் களத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன்.”

“மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?”

“கவிக்கோ காட்டிய வழி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கண்டிப்பா. போஜ்புரி படங்களை இயக்குறதுக்கு இப்போ கூப்பிட்டிருக்காங்க. இந்த மாசத்தில் வேலை ஆரம்பிச்சுரும்னு நினைக்கிறேன். நாவல்களைப் படமாக்குவது இப்போ ரொம்பவே குறைஞ்சுபோய்டுச்சு. நாவலில் ஒரு அழகியல் இருக்கும். அதில் பல கதாபாத்திரங்கள் வந்து போவார்கள். ஒரு கதையை ஆழமாகவும், அழகாகவும் சொல்லமுடியும். அந்த மாதிரி ஒரு நாவலைப் படமாக்கணும்கிறது என்னோட ஆசை. இப்போ அவங்கவங்க ஒரு கதையை எழுதிடுறாங்க. குறிப்பா அவை விவாதத்துக்கு வர்றதில்லை. விவாதங்களுக்கு உட்பட்டால்தான் படத்தின் நேர்த்தி அதிகரிக்கும்.”

“நடிகராக உங்கள் பணி எப்படிப் போய்ட்டிருக்கு?”

“`விசாரணை', `காக்கிச்சட்டை' படங்களில் நல்லா பண்ணியிருக்கிறதா எல்லோரும் சொன்னாங்க. மீஞ்சூர் கோபி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறாங்க. வசனங்கள் அவ்வளவு கூர்மையா வந்திருக்கு படத்தில். நயன்தாராவுக்கும் அது பேர் சொல்லும் படமாக இருக்கும். அடுத்தடுத்து படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். நல்ல கேரக்டர்கள் கிடைச்சா எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும் நடிக்க நான் தயார்.”

“எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர். இவற்றில் எந்த ரோல் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு?”

“வசனகர்த்தா” என யோசிக்காமல் சொல்கிறார். “நான் நினைக்கிறதை அப்படியே முழுசா வெளிப்படுத்த முடியுறது வசனகர்த்தாவாகத்தான். நான் சொல்ல விரும்பும் விஷயத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கணும்னா என்னோட வசனங்கள் மக்களிடம் நேரடியாகப் போய்ச் சேரணும். இயக்குநராகவும் இதைச் செய்யலாம். ஆனா அது எனக்கு அந்தளவுக்குக் கைகூடி வரலை. இனி வேண்டுமானால் வரும்னு நினைக்கிறேன்.”

- விக்கி, படங்கள்: தி.குமரகுருபரன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism