Published:Updated:

"மாற்றம் நம் வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!" - மெர்சல் காட்டிய 'மெட்ராஸ் மேடை' இசை நிகழ்ச்சி!

"மாற்றம் நம் வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!" - மெர்சல் காட்டிய 'மெட்ராஸ் மேடை' இசை நிகழ்ச்சி!

மெட்ராஸ் மேடை நிகழ்ச்சி 2018

"மாற்றம் நம் வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!" - மெர்சல் காட்டிய 'மெட்ராஸ் மேடை' இசை நிகழ்ச்சி!

மெட்ராஸ் மேடை நிகழ்ச்சி 2018

Published:Updated:
"மாற்றம் நம் வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!" - மெர்சல் காட்டிய 'மெட்ராஸ் மேடை' இசை நிகழ்ச்சி!

ழக்கம்போல எல்லா கலை நிகழ்ச்சியும் தாமதமாதான் ஆரம்பிக்கும்னு ஒரு மெதப்பு, இருந்தாலும் முன்னாடியே போனா சீட் போடலாம்னு தமிழன் இன்ஸ்டிங்ட் சொல்ல, சரியாக 4.30-க்கு, `மெட்ராஸ் மேடை' நிகழ்ச்சிக்காக சி.எஸ்.ஐ பேயின் பள்ளியில் ஆஜர். சொன்ன நேரத்திற்கு மேடையில் டேக்ஆஃப் ஆனது, ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா. பாரதியின் `சின்னஞ்சிறு கிளியே'வில் தொடங்கி, பீத்தோவன் பக்கம் போய், பல மேற்கத்திய இசைகளைக் கடந்து, எம்.எஸ்.அம்மாவோட `குறை ஒன்றும் இல்லை' பாட்டோட முடிஞ்சது. கேட்கவே ரொம்ப ரம்மியமா இருந்தது.

ஸ்டிரிங்ஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்னு சொல்லப்படுற தந்தி வாத்தியக் கருவிகள், வயலின், செல்லோ போன்றவை காதுக்கு இனிமை. அதுவும், தமிழ்ப் பாடல்கள் வாசிக்கும்போது டாப்ல எகிறிது, இசையும் இனிமையும். இனிமே ஸ்டிரிங்ஸ் செக்சன் ரெக்கார்டு பண்ண வெளிநாட்டுக்குப் போற இசையமைப்பாளர்கள், இவங்களைப் பயன்படுத்திக்கலாம்னு தெரியுது. எட்டு வருடமா வாசிச்சு வாசிச்சு  தன்னையே இசையோட இணைச்சிக்கிட்டு இருக்கிற இளைஞர்கள்தாம் சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவின் ஸ்பெஷாலிட்டி.

அடுத்து மேடை ஏறினது, `ஒத்தசெவுரு' இசைக்குழு. மொத்தமே ரெண்டுபேருதாம். ஆனா, இவங்க பாடுன பாடல்கள் எல்லாமே வேற லெவல். ஒரு தனி மனுசனுக்குள்ள எத்தனை விதமான மனுசன் இருக்கான்னு ஒரு பாட்டு, ஒரு காக்கா இந்த உலகம் உனக்கு மட்டும்தானா எனக்கும்தானே... அப்புறம் ஏன் சுற்றுப்புறத்த நாசம் பண்றனு மக்களைப் பார்த்துப் பாடுற பாட்டு, கடவுளுக்குக் கோட்டு சூட்டு போட்டு வியாபாரி ஆக்கி அவருக்கிட்ட வியாபாரம் பேசுறமாதிரி ஒரு பாட்டு. எல்லாமே ஓஹோ ரகம்!. ரொம்ப நாளைக்கு அப்புறம் இண்டிபெண்டென்ட் மியூசிக் சவுண்ட்ஸ்ல இத்தனை பாடல்களைக் கேட்குகிறது தனி வரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சியோனார். இவரைப் பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. மொதல்ல அவரு போட்டிருந்த அந்தக் கோட்டும், அதுக்கு ஏத்தமாதிரி பின்னாடி எல்.ஈ.டி ஸ்கிரீன்ல வர்ற அவரோட படமும். ஒரு தேர்ந்த என்டர்டெயினர் இவர். இவருடைய பாடல்கள் எல்லாமே சூப்பர். பாடல்களை ரொம்பவே ரசிச்சுப் பாடினார், அனிருத்போல!

இசைக்கு சமத்துவம்னு சொல்லியாச்சு. கர்நாடக இசை இல்லாமலானு கர்நாடக இசையையும், ஜாஸ் இசையையும் குழைச்சு அடிச்சாங்க `ஜட்டாயு' டீம். கர்நாடக இசை புரியாதவங்ககூட அந்த எலக்ட்டிக் கிட்டாரின் மகுடிக்கு முன்னாடி மயங்கித்தான் போனாங்க. டிரம்ஸ் சோலோ டிவைன். அடிச்சுப் பிச்சிட்டான்னு சொல்லுவாங்களே... அது, இதுதான். அப்பப்பா... தொவச்சுத் தொங்கவிட்டுட்டாங்க பசங்க.

மாத்தி மாத்தி இசையைக் கேட்டு, லைட்டா ஸ்ருதி இறங்கின கூட்டதுக்கு வார் பிடிக்க மேடை ஏறினாங்க, `காலா' புகழ் டோப்படெலிக்ஸ். பேருக்கு ஏற்றமாதிரி அவங்க பாடல்களும் நாடி நரம்பெல்லாம் ஏறி மூளைக்குப் போய் சிந்தனைத் தீயைக் கொழுந்துவிட்டு எரிய வைக்கிற ரகம். மொத்தமா அவங்க, `வீ ஆர் ஃபிரம் தாரவி யுனைடெட்'னு சொல்லும்போது, ராணுவ ஒழுக்கம் அவங்ககிட்ட. ஒரு தனி மனிதன் தன்னோட அடையாளம், அங்கீகாரம், நிலம், எல்லாத்தையும் இழந்து அடக்கி ஒடுக்கப்படும்போது ஒரு கிளர்ச்சி ஏற்படும். அந்தக் கிளர்ச்சியோட வெளிப்பாடுதான் டோப்படெலிக்ஸ் குழுவும், அவர்களுடைய பாடல்களும். இப்படிப்பட்ட ஒரு குழுவைக் கண்டுபுடிச்சு அவங்களுக்குத் தன்னுடைய படத்துல பாட வாய்ப்பு கொடுத்ததோடு, சென்னையில் ஒரு தனி மேடையும் அமைத்து அதன்மூலம் ரசிகர்களையும் பெற்றுக்கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு ஒரு சல்யூட்.

டோப்படெலிக்ஸ் மும்பைக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் சொத்துதான் இனிமேல். ஏன்னா, ரசிகர்கள் அவர்களைக் கொண்டாடிய விதம் அப்படி. இவங்க பாடல் வரிகள்ல இருக்கிற சிந்தனைகள் விடுதலை, சமூக நீதி, நிலம் மீட்பு, தீண்டாமை எல்லாமே பாஸ்பரஸ் மாதிரி டக்குனு பத்திக்கிற வரிகள்.

ஆப்ரோ, இவரும் ஒரு தனி இசைக் கலைஞர்தான். இவரோடு எலக்ட்ரிக் வயலினில் இவரது நண்பரும், `ஈ.டி.எம்' எனச் சொல்லப்படும் எலக்ட்ரானிக் டேன்ஸ் மியூசிக்கை அள்ளித் தந்தனர். பாடல்கள் சூப்பர், வயலின் சோலோ அற்புதம். இவர்கள் பாடிய பாடல்களின் இசை, இந்த கால யுவதிகளை ஆட்டம் போடவைக்கும் என்பதை முன் சீட்டில் இருந்த யுவதியிடமிருந்து தெரிந்துகொண்டேன். 

அடுத்து, அரங்கமே அதிர மேடை ஏறியது ஏற்கெனவே புகழின் உச்சியில் இருக்கும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ் குழு. இவங்க மேடையேறும்போது, ஆரவாரம் வானம் தாண்டிக் கேட்டது. குறிப்பாக, இசைவாணிக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் போல. இன்னோர் ஆர்மி உருவானாலும் ஆச்சர்யம் இல்லை. அடுத்த ஸ்டார், இந்தக் குழுவுல இருக்கும் அறிவு. இவருடைய வரிகளும் குரலும் இவரைப்போலவே புதுசா, புரட்சியா இருக்கு. இவர், `காலா'வுல பாடலும் எழுதியிருக்கார் என்பது சிறப்புச் செய்தி. இந்த இசைக் குழுவை மேடையில அறிமுகப்படுத்த பா.இரஞ்சித் மேடை ஏறும்போது பார்க்கணுமே... என்னா ஜோஸ்! மொத்தக் கூட்டமும் கத்தி விசிலடிச்சு, ரெண்டு நிமிடம் ஆகியும் அடங்கலை. அதுக்குப் பிறகு அவர், `ஜெய்பீம்'னு சொல்ல, மொத்த இடமும் பத்திக்கிச்சுன்னுதான் சொல்லணும்.

பா.இரஞ்சித் ஒரு தனி மனிதன் அல்ல என்ற ஒட்டு மொத்தக் குரலையும் கேட்கும்போது தெரிந்தது. பாடல்கள் ஏற்கெனவே பாடிய பாடல்கள்தாம் என்றாலும், பெரிய கறி, வடசென்னை, சாதி வேர், பாட்டனுக்குப் பாட்டனெல்லாம் பாடல்கள் வரும்போது மொத்தக் கூட்டம் ஆடிப் பாடிக் கொண்டாடித் தீர்த்தனர். இசை அனைவரையும் இணைக்கும் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி. அங்கு நிலவிய இசைப் புரட்சியை எழுத்துகளில் விவரிக்க முடியாது.

அடுத்து மேடையேறிய பால் ஜேக்கப் + வேல்முருகன் + சின்னப்பொண்ணு குழுவினர், கடைசியாக ஏறினாலும், மற்றவர்களுக்குக் கொஞ்சம்கூட சளைத்தவர்கள் இல்லையென விவசாயம், தண்ணீர், மக்கள் பற்றி தன் பங்குக்கு ஆடவும் சிந்திக்கவும் செய்தனர். ஆகமொத்தம், அருமையான மாலையைக் கழித்துவிட்டு ஏகப்பட்ட சமூகப் பொறுப்புகளுடன் வீடு வந்தோம். மாற்றம் நம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism