பத்திரிகையாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், சினிமா, சீரியல் இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் `யார்' கண்ணன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்ம ரிஷிமலையில், `உலக நன்மை'க்காக யாகம் நடத்திக் கொண்டிருந்த வருடன் ஒரு சந்திப்பு...

``தஞ்சை மாவட்டம் மதுக்கூரில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகள் எழுதும் பழக்கம் அதிகம். சினிமா மீதும் ஆர்வம் அதிகம். எப்படியாவது பாடலாசிரியர் அல்லது பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தேன். படிக்கும் காலத்திலேயே `கலை நீதி' என்ற பத்திரிகையில் வேலை செய்தேன். டைரக்டர் மகேந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். ஒரு கையெழுத்து தலையெழுத்தை மாற்றும் என்பார்கள், எனக்கு அது நடந்தது!'' மலர்ச்சியோடு ஆரம்பிக்கிறார், `யார்' கண்ணன்.

``1978-ல் சினிமாவில் நுழைந்தேன். உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் `ஏணிப் படிகள்'. இயக்கிய முதல் படம் `யார்'. அர்ஜுன், நளினியை வைத்து இயக்கிய திகில் படம். பிறகு, பாடலாசிரியராகவும் வளர்ந்தேன். இதுவரை 11 படங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். `யார்' படத்தில்தான் அர்ஜுனுக்கு `ஆக்ஷன் கிங்' பட்டம் கொடுத்தேன். தமிழகத்தில் அதிக அளவில் 30x40 போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். கிராஃபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அதிக சிரமம் எடுத்து அந்தப் படத்தை உருவாக்கினேன். அந்தப் படத்துக்கு 70 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. முதல் முறையாக ஒரு சினிமாவுக்கு இவ்வளவு பெரிய கட்-அவுட் வைத்ததும், `யார்' படத்திற்குத்தான்'' என `யார்' சிறப்புகளை இன்னும் ஆச்சர்யமாகப் பேசுகிறார், கண்ணன்.

``அமானுஷ்யம் மூலமாகப் பிரபலம் ஆனவர் நீங்கள். திடீரென ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?''

``எங்க அப்பா சுதந்திரப் போராட்டத் தியாகி. ஆழ்வார்கள், நாயன்மார்கள், தேவாரம், திருவாசகம் போன்ற புத்தகங்களின் நடுவில்தான் வளர்ந்தேன். 1990-ல் என் படத்தின் லொக்கேஷன் தேர்வுக்காக பாபநாசம் அகத்தியர் மலைக்குச் சென்றேன். யாரும் இல்லாத வனாந்திரப் பகுதியில் பெரம்பலூர் அன்னைசித்தர் ராஜ்குமார் சுவாமிகள் என்னைக் `கண்ணா' என அழைத்தார். இன்றுவரையிலும் அவர் சொன்னதுதான் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது. அன்றுமுதல் என்னுடைய குருவாக அவரை எண்ணி, அவருடைய வாக்கைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மிகப் பணிகளின் ஒரு பகுதிதான், பிரம்மரிஷி மலையில் உலக நன்மைக்காக நடத்தும் யாகம்!

``பேய் இருக்கா, இல்லையா?''

``மனசுதான் சைத்தான். நல்லது, கெட்டது இரண்டும்தான் பேய். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால், கெட்டது நடக்கும். மத்தபடி, பேய் என்று தனியாக எதுவும் கிடையாது.''

``தொடர்ந்து நடிக்கும் படங்கள்?''

`` `கும்கி'யில் இருந்து `மனிதன்' வரை சமீபத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் பல படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கிறது. சின்னத்திரையில் 25-க்கும் அதிகமான தொடர்களில் நடித்திருக்கிறேன். நான் இயக்கிய `ஜென்மம் எக்ஸ்' சீரியல் தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதேபோன்ற இன்னொரு திகில் நாடகத்தை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.''

``அடுத்து?''

``இரண்டு படங்களை இயக்குகிறேன். ஒன்று, `பாகுபலி' போன்று ஃபேன்டஸியான அமானுஷ்ய திரைப்படம். இந்தியா, மலேசியா, தாய்லாந்து, நேபாள் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதிக பொருட்செலவில் உருவாகிறது. இரண்டாவது, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானியர்களால் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அந்தச் சம்பவம் இன்றுவரை வரலாற்றில் மறைக்கப்பட்டு வருகிறது. அந்த உண்மையைத் தத்ரூபமாக எடுக்கப்போகிறேன். இரண்டு படத்திற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!''

- எம்.திலீபன், படங்கள் : எஸ்.ராபர்ட்