``காமெடிக்கும் கிண்டலுக்கும் நம்ம அத்தை பொண்ணை வம்பிழுக்கிறதுக்கும், யாருன்னே தெரியாத பொண்ணை வம்பிழுக்கிறதுக்கும் இடையில உள்ள வித்தியாசம்தான். வார்த்தைகள் யாரையும் காயப்படுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன்.” - பேச்சில் தெக்கத்தி வாசனை தெறிக்கப் பேசுகிறார், தன் உடல்மொழியின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும் முருகானந்தம். `சூப்பர் ஜி... சூப்பர் ஜி' என `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வில் நடிகராக அறிமுகமானவர், இப்போது விஷ்ணு விஷால் நடிக்கும் `கதாநாயகன்' படத்தின் இயக்குநர்!

``முதல்ல நடிகரா அறிமுகம் ஆனது திட்டமிட்டு நடந்த விஷயமா?''

``இல்லை. தற்செயலா நடந்ததுதான். சொந்த ஊரு பரமக்குடி. விக்ரமன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். `கலாபக் காதலன்' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்தேன். சினிமா நண்பர்கள் எல்லாம் வழக்கமா சந்திச்சுப்போம். கோகுல் `இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' படம் டிஸ்கஷன் பண்றப்போ, `வாங்க ஜி...'னு சொல்ற கேரக்டருக்காக ரெண்டு, மூணு பேர்கிட்ட ஆடிஷன் பண்ணோம். நான்தான் எப்படி அந்தக் கேரக்டர் பெர்ஃபார்ம் பண்ணணும்னு சொல்லி, நடிச்சுக் காட்டினேன். திடீர்னு கோகுல், `நீயே இந்தக் கேரக்டரைப் பண்ணு நண்பா'னு உரிமையா சொன்னார். `வேணாங்க. டைரக்ட் பண்ண வந்துட்டு, நடிக்க ஆரம்பிச்சா இப்பிடியே போயிடும்'னு சொன்னதைக் கேட்கலை. அந்தக் கேரக்டருக்காக எனக்குக் கிடைச்ச கைதட்டல்கள் எல்லாம் கோகுலுக்குத்தான் போய்ச்சேரும்!''

``உங்க உடல்மொழிக்குத் தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் கவனிச்சீங்களா?''

``சின்ன வயசுல ஒரு தீபாவளி சமயத்துல வீட்டுல ஸ்வீட், முறுக்கு ஐயிட்டம் எல்லாத்தையும் பானையில போட்டு வெச்சிருந்தாங்க. எனக்கு மூணு தங்கச்சிங்க. யாருக்கும் கொடுக்காம நானே காலிபண்ணிட்டேன். அப்பா தங்கச்சிககிட்ட, `என்னம்மா எதையுமே காணோமே'னு கேட்க, அதுக எல்லாம் `தெரியாது'னு சொல்லிடுச்சுங்க. பிறகு, நேரா எங்கிட்ட வந்தாரு. எப்படியும் நான் இல்லைன்னுதான் சொல்லுவேன்னு நெனச்சு, `என்ன தம்பி எல்லாத்தையும் சாப்பிட்டியா? இனிமே சாப்பிடுறப்போ தங்கச்சிகளுக்கும் ஒண்ணு ரெண்டு குடுத்துட்டு சாப்பிடுப்பா'னு சொல்லவும், நான் வேகமா `சரிப்பா'னு மண்டைய ஆட்டிட்டேன். `பொளேர்'னு கன்னத்துல ஒண்ணு வெச்சாரு... அப்போதான் புரிஞ்சது, அவரோட ட்ரிக்கு! எங்க அப்பா மாதிரி, ஊர்ப்பக்கம் ஊருப்பட்ட கேரக்டர்கள் இருக்காங்க. எல்லாமே அவங்ககிட்ட இருந்து வந்ததுதான். `காஷ்மோரா' பார்த்துட்டு, `முருகா, ரெண்டாவது படத்துலேயே உன்னைப் பார்த்ததும் ஆடியன்ஸ் ஞாபகம் வெச்சிருக்காங்க. இதெல்லாம் சாதாரணமா யாருக்கும் கிடைச்சிடாது!'னு சீனியர்ஸ் சொன்னாங்க. சந்தோஷமா இருந்துச்சு!''

``நடிகரா இருக்கிறது பிடிச்சிருக்கா, இயக்குநரா வேலை பார்க்கிறது பிடிச்சிருக்கா?''

``நான் அடிப்படையில ஒரு இயக்குநர். முதல் படம் முடிஞ்சதும், நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. `நாம வந்ததே டைரக்டர் ஆகுறதுக்குத்தான்'னு நினைச்சுப் பார்த்தேன். அதனால, ஒரு படத்தை இயக்கிட்டு, நடிப்பையும் தொடரலாம்னு இருக்கேன். தவிர, கிடைக்கிற கேப்புல நடிக்கவும் செய்றேன்.''

``தயாரிப்பாளர்கிட்ட கதை சொன்ன அனுபவத்துல மறக்க முடியாதது?''

``மத்தியான டைம், ஏ.சி ரூம்ல உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிச்சேன். இண்டர்வெல் போர்ஷன் வரைக்கும் சொல்றப்பவே, புரொடியூசர் தூங்கிட்டாரு. சரின்னு நானும் கதை சொல்றதை நிறுத்திட்டு உட்கார்ந்திருந்தேன். கொஞ்சநேரம் கழிச்சு ஆளு தூக்கத்துல இருந்து எந்திரிக்கப் போற மாதிரி இருந்துச்சு. நான் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு, `அந்த இடத்துல எண்டு கார்டு போடுறோம் சார்'னு சொன்னேன். என்னையப் பார்த்தாரு. `நல்லா இருக்கு முருகா. இந்தக் க்ளைமாக்ஸ்' மட்டும் கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும்'னு சொன்னாரு. அப்படியே ஓடி வந்துட்டேன்!''

`` `கதாநாயகன்' படம் பற்றி?"

```நாலு நாள் தூங்கல'னு சொல்ற மாதிரி படம் எல்லாம் இல்லை. விஷ்ணுகிட்ட கதை சொன்னதும், `நானே இருபது இடத்துல என்னையும் அறியாம சிரிச்சுட்டேன் முருகா'ன்னு சொன்னாரு. கேத்ரின் தெரசா ஹீரோயின். சூரி இருக்காரு. ஷான் ரோல்டன் மியூசிக். `கதாநாயகன்' கண்டிப்பா எல்லாருக்கும் பிடிச்ச, ஒரு நல்ல என்டர்ட்டெயின்மென்ட் கொடுக்குற படமா இருக்கும் நண்பா!''

``ஜாலியான ஆள் மாதிரி இருக்கீங்களே... எப்பவுமே இப்படித்தானா?''

``இந்த உலகத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே சிரிப்புதான். நீங்க பேசுறப்போ ஒருத்தரை சிரிக்க வெச்சுட்டீங்கன்னு வைங்க, உங்கள அவ்வளவு சீக்கிரத்துல மறக்கமாட்டாங்க. சிரிப்பு மட்டும் தான் நம்மள இன்னும் மனுஷனாவே வெச்சிருக்கு. இதனாலதான் என் பையனுக்கு `அகமகிழன்'னு பேரு வெச்சேன். கவலைகள் எல்லாருக்கும் இருக்கும்தானே... அதை மறந்தோ அல்லது மறைச்சோ நாம ஜாலியா இருக்கும்போது, கூட இருக்கிறவங்களுக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும். ஜாலியா இருங்க ஜி.''

சூப்பர் ஜி!

- ந.புஹாரி ராஜா