தமிழ் சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம். ஆனால் கேரக்டர் ரோல்களுக்கு எப்போதுமே வெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆண்டில் கேரக்டர் ரோல்களில் கவனம் ஈர்த்தவர்களில் இவர்களும் அடக்கம்!

தேசிய விருதுபெற்ற `வல்லினம்', `மாயா' படங்கள் அம்ஜத்தின் அடையாளங்கள். அனிருத் இசையில் `ரம்' வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது.

``உங்களோட ஃப்ளாஷ்பேக்?''

``சொந்த ஊரு சேலம். புனேல எம்பிஏ முடிச்சுட்டு மும்பைல மார்க் கெட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். சரி நடிக்கலாம்னு முடிவு பண்ணி சென்னை வந்தேன். சென்னையில் ரேடியோ ஒன் எஃப்எம்ல வேலைபார்த்துட்டு இருந்தேன். நிறைய தியேட்டர் நாடகங்கள் நடிச்சேன். நிறைய குறும் படங்கள் வாய்ப்பு வந்தது. அப்படியே வேலைய விட்டுட்டு முழு நேரமா சினிமாவுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். `மாயா' படத்தோட இயக்குநர் அஷ்வினோட குறும்படத்துல எல்லாம் நடிச்சிருந்தேன். குறும்படங்கள் மூலமாதான் எனக்கு வல்லினம் வாய்ப்பு வந்தது. `வல்லினம்' படம் மூலமா `மாயா', `நட்பதிகாரம்', `களம்'னு இப்போ `ரம்' என் அஞ்சாவது படம்.''

`` `வல்லினம்' வாய்ப்பு எப்படி வந்தது?''

``அறிவழகன் சார் ஆடிஷனுக்கு கூப்பிட்டிருந்தார். ஆடிஷன்ல என்னோட பெர்ஃபார்மென்ஸ் அவருக்குப் பிடிச்சிருந்துச்சு. `பேஸ்கட் பால் விளையாடுவியா'ன்னு கேட்டாரு.

என் வாழ்க்கையில அதுவரை பேஸ்கட்பாலைத் தொட்டதுகூட கிடையாது. சொன்னா சான்ஸ் போயிடுமோன்னு பயத்துல `சின்ன வயசுல விளையாடியிருக்கேன் சார்'னு சமாளிச்சேன். அதுக்குப்பிறகு பத்து நாள்ல என்னால எவ்வளவு முடியுமோ கத்துக்கிட்டு அவரு முன்னால போயி நின்னேன். `உனக்கு பேஸ்கட் பால் தெரியாதுங்கிறது எனக்குத் தெரியும்.நீ எடுத்த முயற்சிகள்தான் உன்னைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகுது'ன்னு சொன்னார். என் கேரியர்ல மறக்க முடியாத நிகழ்வு!''

``என்ன மாதிரியான கேரக்டர் பண்ண ஆசை?''

``இதுதான் பண்ணணும், இது பண்ணக்கூடாதுன்னு எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் பண்ணாலும் அதுல இண்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயத்தைத் தேடிப்பிடிச்சு பண்ணணும்னு இருக்கேன். வில்லன் பாத்திரம்னாலும் வழக்கமான வில்லனா இருந்துரக்கூடாது!''

`நான் மகான் அல்ல', `ராஜா ராணி' மற்றும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட `விசாரணை' ஆகியவை மிஷா கோஷலின் அடையாளங்கள்! படப்பிடிப்பில் இருந்தவரிடம் ஒரு காபி ப்ரேக் பேட்டி...

``மிஷா கோஷல் பத்தி சொல்லுங்க?''

``நான் பெங்காலி பொண்ணு. எட்டாவது படிக்கும்போது சென்னைக்கு வந்துட்டோம். அதனால தமிழ் நல்லா பழகிருச்சு. ஸ்கூல் டைம்ல இருந்தே நடிக்கச் சொல்லி நிறைய பேரு கேட்டாங்க. ஆனா மாட்டேன்னு சொல்லிட்டேன். எஸ்.ஐ.இ.டி-ல காலேஜ் முடிச்சேன். `வர்ற வாய்ப்பை ஏன் வேணாங்குற'ன்னு கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ் சொல்லவும்தான் சினிமா பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். ஹீரோயினா பண்ணச் சொல்லிக் கேட்டாலே `வேணாம்'னு சொல்லிடுவேன். பார்ட் டைமா தான் நடிக்க வந்தேன். டென்ஷன் இல்லாம ஜாலியா பண்ணிட்டுப் போகணும்னு நெனைப்பேன். சின்னச் சின்ன கேரக்டர்ஸ் பண்ணினாலும் பத்து நாள் ஷூட் முடிச்சுட்டு அடுத்தபடத்துல நடிக்கப் போயிடலாம்.''

``ஆஸ்கர் ரேஸில் விசாரணை! அதுபற்றி...''

``படம் ஃபுல்லாவே ஆண்கள் இருந்தாலும் அதுல நடிச்ச அனுபவம் மறக்க முடியாதது. வெற்றிமாறன் சார் செட்டே ஒரு சிஸ்டமெடிக்கா இருக்கும். எல்லாரும் நிஜமாவே அடி வாங்கி இருக்காங்க. நான் கூட அடிச்சிருக்கேன். எல்லாமே ரியல் அடி. அதெல்லாம் எடிட்டிங்ல போயிருச்சு. எல்லோரோட கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைச்ச பரிசுதான் இப்போ ஆஸ்கர் ரேஸில் இருக்கிறது.''

``யார்கிட்டயாவது திட்டு வாங்கியிருக்கீங்களா?''

``முருகதாஸ் சார் எனக்குக் கூடப் பொறக்காத அண்ணன் மாதிரி. செட்ல அப்படி பார்த்துப்பாங்க. யார்கிட்ட எப்படி பேசணும்... எந்த மாதிரி கேரக்டர்ஸ் செலக்ட் பண்ணணும்னு ஒரு அண்ணனுக்கான அக்கறை இருக்கும். அதுக்காக அப்பப்போ அவர்கிட்ட திட்டு வாங்குவேன்.''

``காதலிச்சுருக்கீங்களான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவீங்க.ஒரு லவ் புரப்போசல் எப்படி ரிஜெக்ட் பண்ணுவீங்க?''

``இது ஒண்ணும் சினிமா இல்லன்னு சொல்லி, புரிய வைப்பேன். ரெண்டு மூணு தடவை பொறுமையா சொல்லிப்பார்ப்பேன். கேட்கலைன்னா பத்ரகாளியா மாறிடுவேன்.''

- ந.புஹாரி ராஜா