தோட்டா தெறிக்கத் தெறிக்க, ரத்தம் ஆறாய் ஓட, புகைமண்டலமாய்க் காட்சியளிக்கும் போர்க்களங்களை அப்படியே தத்ரூபமாய் கண்முன் கொண்டுவரும் `வார் ஜானர்' சினிமாக்கள் ஹாலிவுட்டில் எக்கச்சக்கம். எண்டு கார்டு போட்ட பின்னும் ஏதேதோ உணர்ச்சிகளை நம் உள்ளே கடத்தும் சில தவிர்க்க முடியாத படங்கள் பற்றிய பயோடேட்டாதான் இது...

Black Hawk Down

2001-ல் வெளியான பரபர ஆக்ஷன் சினிமா. ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான ரிட்லி ஸ்காட் இயக்க, பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம். சோமாலிய சர்வாதிகாரி முகமது ஃபாராவுக்கும் அமெரிக்க அதிகார வர்க்கத்திற்கும் முட்டிக்கொள்ள, அதன் விளைவாக நடந்த போரைப் பற்றிப் பேசும் படம். அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் காட்சிகள் எல்லாம் சென்ஸார் செய்யப்பட்டுவிட்டது எனக் குரல்கள் எழுந்தாலும் படத்தில் ஆக்ஷனுக்குப் பஞ்சமில்லை. ரிலீஸிலும் சொல்லி அடித்தது. சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங் என இரண்டு ஆஸ்கார் விருதுகளும் பார்சலானது!

Fury

இதுவும் இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். பிராட் பிட்டின் அசரவைக்கும் நடிப்பில் டேவிட் அயர் இயக்கிய படம். அமெரிக்க பீரங்கி அணியின் ஒரு பகுதியினருக்கு யுத்தத்தின் இறுதி நாட்களில் நடக்கும் அனுபவங்கள்தான் கதை. முறையாக ரிகர்சல் செய்து படபடவென படத்தைச் சுட்டுத் தள்ளினார்கள். சோனி நிறுவனம் ஹேக்கர்களின் பாதிப்புக்குள்ளானபோது இந்தப் படம் ஆன்லைனில் வெளியானது. லட்சக்கணக்கில் டவுன்லோடும் ஆனது. அதைத்தாண்டி படம் குவித்த லாபம் எக்கச்சக்கம். விமர்சகர்களின் குட்புக்கில் இந்தப் படத்திற்கும் இடமுண்டு.

Saving Private Ryan

இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களுக்கும் அமெரிக்க கூட்டுப்படையும் உக்கிரமாக மோதிக்கொண்ட பின்னணியில் எடுக்கப்பட்ட படம். இயக்கம் - ஹாலிவுட் கில்லி ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். நடிப்பு ராட்சஷன் டாம் ஹாங்க்ஸ், மேட் டாமன், எட்வர்ட் பர்ன்ஸ் போன்றவர்கள் போட்டி போட்டு நடிக்க, படம் வேற லெவலில் இருந்தது. அதிலும் முதல் 27 நிமிடங்கள் வெறித்த்த்தனம். சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் என ஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. வசூலையும் மூட்டை மூட்டையாய் அள்ளியது தயாரிப்பு நிறுவனம்.

Full Metal Jacket

ஸ்டான்லி குப்ரிக்கின் மற்றுமோர் மாஸ்டர் க்ளாஸ் படைப்பு. வியட்நாம் போரில் பங்கேற்ற குஸ்டாவ் என்பவரின் வாழ்க்கை வரலாற்று நாவலைத் தழுவிய படம் இது. வியட்நாம் போரில் பங்கேற்கும் மிலிட்டரி குழு ஒன்றின் பயிற்சிகளைப் பற்றியும் அனுபவங்களைப் பற்றியும் டீட்டெயிலாகப் பேசும் உலக சினிமா. நாவலை விட சினிமாவில் அழுத்தம், சோகம் அதிகமாக இருக்கிறது எனக் கருதினார்கள் விமர்சகர்கள். ஆனால் அந்த வித்தியாசங்களை எல்லாம் தாண்டி படம் சூப்பர் ஹிட். விமர்சகர்களும் படத்திற்கு ரெட் கார்பெட் வரவேற்பு கொடுத்தார்கள். திரைக்கதைக்காக இன்றளவும் பேசப்படுகிறது

The Great Dictator

காமெடி உலகின் தன்னிகரற்ற தலைவன் சார்லி சாப்ளின் எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்த படம். அரசியல் பகடியில் இன்றளவும் பெஸ்ட் இந்தப் படம்தான் எனப் பெரும்பான்மையானவர்கள் மறு பேச்சில்லாமல் ஆமோதிக்கும் க்ளாஸிக் சினிமா. சாப்ளினின் முதல் ஒலிப்படமும் இதுதான். போரில் நினைவிழக்கும் யூதர் ஒருவர் இருபது ஆண்டுகள் கழித்துத் தன் சொந்த ஊருக்கு வருகிறார். அந்தப் பிரதேசத்தையே ஆண்டுகொண்டிருக்கும் சர்வாதிகாரியும் பார்ப்பதற்கு இவரைப் போலவே இருக்க, ஒரு கட்டத்தில் ஆள் மாறாட்டம் நடக்கிறது. அதன் விளைவுகள்தான் கதை. க்ளைமாக்ஸில், `போர், பேராசை வேண்டாம். ஒற்றுமையும் அமைதியும் போதும்' என சாப்ளின் ஆற்றும் அந்த உரை இப்போது கேட்டாலும் சிலிர்க்கும். ஹிட்லர், முசோலினி என சகலரையும் மானாவாரியாய் கலாய்த்திருப்பார் சாப்ளின்.

Apocalypse Now

உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் க்ளாஸிக். ஹாலிவுட்டின் எவர்க்ரீன் அழகன் மார்லன் பிராண்டோவின் நடிப்பில் ஃப்ரான்சிஸ் கோப்பாலா இயக்கிய மாஸ்டர்பீஸ். 1969 வியட்நாம் போரின்போது கம்போடியாவில் முகாமிட்டிருக்கிறது கலோனல் வால்டரின் தலைமையிலான சிறப்புப் படை. புது இடம், அளவில்லா அதிகாரம் போன்றவை வால்டரின் கண்ணை மறைக்க, சர்வாதிகாரியாக உருமாறுகிறான் வால்டர். அவனை அழிக்க மேலதிகாரிகளால் வில்லார்ட் என்பவன் அனுப்பப்படுகிறான். வில்லார்டின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை. ஜோசப் கான்ராடின் `ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களும் விமர்சகர்களும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவித்தார்கள்.

The Great Escape

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து வெளியான படங்களில் இதுவும் ஒன்று. `The Magnificent Seven' படத்திற்குப் பின் ஜான் ஸ்டூர்ஜஸ் இயக்கிய படம் இது. நாஜிக்களின் வதை முகாமில் இருந்து தப்பிக்கும் சில கைதிகளின் கதையைச் சொல்லும் `தி க்ரேட் எஸ்கேப்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். படத்தில் அமெரிக்கர்களுக்கு அநியாயத்திற்கு ஹீரோயிஸ இமேஜ் தரப்பட்டதாக குரல்கள் ஒருபக்கம் எழுந்தாலும் முதல் பாதி முழுக்க தத்ரூபமாக இருந்ததாகக் கூறினார்கள், நிஜத்தில் நாஜி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர்கள். இந்தத் தத்ரூபக் காட்சிகளுக்காகவே படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது.

The Hurt Locker

படத்துக்குப் படம் அசரடிக்கும் ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரிஜினல் சவாலே அவரின் மாஜி மனைவியும் இயக்குநருமான கேத்ரீன் பிகலோதான். ஈராக் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவக்குழு ஒன்றைப் பற்றிய இந்தப் படத்தைத் தன் அசாத்திய உழைப்பால் செதுக்கியிருந்தார் கேத்ரீன். போரில் ஈடுபடும் வீரர்களின் மன உணர்வுகள், மரணம் அவர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவற்றை உறையவைக்கும் விதத்தில் சொன்னதால் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, சவுண்ட் மிக்சிங், எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங் என ஆறு ஆஸ்கார்களை அள்ளியது. பல நூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட `அவதார்' படத்திற்கு சரியான சவால் கொடுத்த பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

- நித்திஷ்