சினிமா பாடல்களை ரீமிக்ஸ் பண்ற கல்சர் மாறி இப்போ பக்திப்பாடல்களையும் நம்ம ஆட்கள் ரீமிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதில் லேட்டஸ்ட்டா கந்தசஷ்டி கவசத்தின் மேலேயே கைவெச்சிருக்காங்க. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா ரமணிதான் இப்படி கந்தசஷ்டி கவசத்தை ராக் ஸ்டைலில் பாடி அதிரவெச்சவங்க!

``சொந்த ஊர் கேரளா. படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு டி.சி.எஸ்ல டெவலப்பரா வொர்க் பண்றேன். எங்க குடும்பமே ஒரு இசைக் குடும்பம். அப்பா கோவில்ல பாடுவாங்க. அதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்ததால எனக்கும் ஆட்டோமேட்டிக்கா இசை ஆர்வம் வந்திடுச்சு. நாலு வயசு இருக்கும்போதே கர்னாட்டிக் மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிட்டுட்டாங்க. அடுத்து பெசன்ட் நகர் சித்ரா மாதவன்கிட்ட முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கும்போது என் வாய்ஸ்க்கு நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க அவங்களுக்கு போர் அடிச்சா என்னைப் பாடவெச்சு டைம்பாஸ் பண்ணுவாங்க. இதுதவிர நிறைய லைட் மியூசிக்லேயும் பாடியிருக்கேன்!'' என்று அறிமுகம் கொடுத்தவர், தொடர்ந்தார்.

``கந்தசஷ்டி கவசம் ரீமிக்ஸ் ஐடியா சன் மியூசிக் சேனலோடதுதான். அவங்க நோக்கம் பக்க்ப் பாடல்களை இப்போ உள்ள ஐ-போன் காலத்து ஆடியன்ஸ்களையும் கேட்க வைக்கணும்கிறதுதான். நார்த்ல கோக் ஸ்டூடியோக்காரங்க இப்படி டிவோஷனல் சாங்ஸை இன்டிபென்டன்ட் மியூசிஸியன்களை வெச்சு நிறைய ரீமிக்ஸ் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி தமிழ்லயும் பண்ணலாம்னு பிளான் பண்ணி, மியூஸிக் டைரக்டர் ஜேய்சஃப் கெவின்கிட்ட கேட்டுருக்காங்க. கந்தசஷ்டி கவசம் மாதிரி பாப்புலரான ஒரு பாடலை ரீமிக்ஸ் பண்ணா சூப்பரா இருக்கும்னு கான்செப்டும் அவங்களே ஐடியாவும் கொடுத்தாங்க. நான் கெவினோடு சேர்ந்து நிறைய இன்டிபென்டன்ட் ஆல்பம்ஸ் பண்ணியிருந்ததால, இந்த வாய்ப்பு எனக்கு ஈஸியா கிடைச்சது'' என்றவர்.

``எக்காரணத்தைக் கொண்டும் ஒரிஜினல் பாடலை டேமேஜ் பண்ணக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருந்தோம். நான் செமி-கிளாசிக்கள்ல பாடினேன். சிந்து, சாந்தா லட்சுமி குமார்னு இன்னும் ரெண்டுபேர் என்கூட சேர்ந்து பாடினாங்க. சிங்கிள் டிராக் மட்டும் ரெடி பண்ணி முதல்ல சேனலுக்கு அனுப்பினோம். எங்க பாட்டைக் கேட்டவங்க, `சூப்பரா இருக்கு இதை வீடியோவாவே ஷூட் பண்ணலாமே'ன்னு சொல்லிட்டாங்க. பாடின நாங்களே வீடியோவுலேயும் நடிக்கப்போறோம்னு தெரிஞ்சதும் செம ஹேப்பி. எல்லா வொர்க்கும் முடிஞ்சு சன் மியூசிக்ல டெலிகாஸ்ட் ஆன அன்னைக்கு சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் பாராட்டித் தள்ளிட்டாங்க. அதில் சிலர் `நாங்க பக்திப் பாடல்களே கேட்க மாட்டோம். ஆனா, நீங்க எங்களையும் கேட்க வெச்சிட்டீங்க'னு சொன்னாங்க. சோஷியல் மீடியால பலபேர் லைக், ஷேர் பண்ணியிருந்தாங்க. இந்த முயற்சிக்கு இதுவரை நெகட்டிவ் கமெண்ட்ஸ் எதுவும் வரல. அதுவே எங்களுக்கு கிடைச்ச பெரிய சக்சஸ்னு நினைக்கிறேன். டீம் நல்லா செட் ஆயிட்டதுனால, அடுத்து திருப்புகழையும் ஆண்ட்ராய்டு காலத்து ஆடியன்ஸ்களுக்குக் கொண்டு சேர்க்குற ரீமிக்ஸ் ஐடியா இருக்கு'' என்று சியர்ஸ் காட்டும் ஸ்ரீவித்யா ரமணிக்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடுவதுதான் வாழ்நாள் லட்சியமாம்!

ஆல் தி பெஸ்ட்!

- ஜூல்ஃபி