காவிரித் தண்ணீருக்காகக் கட்சிக்காரர்கள் ரயில் மறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், `தொடரி'யில் தன் கட்சிக்காரருக்காக ரயில் மறியலில் இறங்கி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டிய ஃப்லோரென்ட் பெரெராவிடம் பேசினேன்.

``சினிமா என்ட்ரி எப்படி?''

``2003-ல் டைரக்டர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்த `புதிய கீதை' படத்தில் சி.பி.ஐ. ஆபிஸராக நடித்தேன். ரபி பெர்னாட்டைத்தான் அந்த வேடத்தில் நடிக்கவைக்கக் கேட்டிருக்கிறார்கள். அவரோ, `நான் உயரம் குறைவாக இருப்பேன். என்னை எப்படி சி.பி.ஐ. ஆபீஸராக ஏற்றுக்கொள்வார்கள்' என்றதோடு, அவரது தொலைபேசி எண்ணை வழங்கிய என்னையே `அந்த ரோலுக்கு, அவர் சரியாக இருப்பார்' என்று கூறினார். இப்படித்தான் `புதிய கீதை'யில் என்ட்ரியானேன்.''

`` `புதிய கீதை'க்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?''

``உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சினிமாவிற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. நான் தொலைக்காட்சிகளில் 1995-ம் ஆண்டு முதலே பணி செய்து வருகிறேன். கலைஞர் தொலைக்காட்சியின் `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன் இறுதியிலும் நடைபெறும் விழாவில், கலைஞர் தொலைக்காட்சி சார்பாக பொதுமேலாளர் என்ற முறையில் வரவேற்புரை நிகழ்த்துவேன். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு, இயக்குநர் பிரபுசாலமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். அன்று நான் பட்டு வேஷ்டி, முண்டாசு, சில்க் சட்டை காஸ்டியூமோடு மேடையில் தோன்றினேன். அடுத்தநாள், பிரபு சாலமனின் மானேஜர் போன் செய்து `கயல்' படத்தில் ஜமீன்தாராக நடிக்க வேண்டும் என்றார். நடித்தேன்.

அப்படி ஆரம்பித்த அடுத்த இன்னிங்ஸ் தொடக்கம், இப்போது 20 படங்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. அதில் `தர்மதுரை', `தொடரி', `ராஜா மந்திரி', `காஷ்மோரா' வெளியாகிவிட்டன. மேலும், `இடம் பொருள் ஏவல்', `புரியாத புதிர்', `தரமணி', `முப்பரிமாணம்', `செய்', `என்கிட்ட மோதாதே', `மாவீரன் கிட்டு', `திரி', `முடி சூடா மன்னன்' ஆகிய படங்களில் நடித்துள்ளேன். இவை விரைவில் திரைக்கு வர உள்ளது. டைரக்டர் ஷங்கரின் `2.0' படத்திலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது.''

`` `கயல்' படத்தில் காதலுக்கு எதிர்ப்பு... `தர்மதுரை'யில் காதலுக்கு ஆதரவு. உண்மையில் காதலில் உங்கள் நிலைப்பாடு?''

``நிறைய காதலித்திருக்கிறேன்! இப்போது மனைவியை மட்டும் காதலிக்கிறேன்.''

``கலைஞர் தொலைக்காட்சியில் நீங்கள் ஜி.எம். உங்கள் நடிப்பைக் கருணாநிதி பாராட்டியுள்ளாரா?''

``ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். `தர்மதுரை' படத்தைத் தளபதி ஸ்டாலின் பார்த்து ரசித்து, நான்கு பக்கம் கடிதமும் எழுதி, பத்திரிகை, தொலைக்காட்சியிலும் செய்தியாக வந்துள்ளது. அதில் என் நடிப்பைப் பாராட்டியதாகவும் கேள்விப்பட்டேன்.''

``உங்களை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தால் யார் ஹீரோயின்?''

``வயதான கதாபாத்திரத்தில், என்னைச்சுற்றி கதை நடந்தால், நான் கதாநாயகன்தானே. அப்படி வாய்ப்பு வந்தால், லட்சுமி ராமகிருஷ்ணனை ஜோடியாக நடிக்கக் கேட்டுக்கொள்வேன். அவருடைய தீவிர ரசிகன் நான்.''

``ஒரு பக்கம் ஜி.எம். மறுபக்கம் நடிகர். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''

``என்னுடைய பாஸ் அமிர்தம், கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர். அப்பா ஸ்தானத்தில் அவரைப் பார்க்கிறேன். என் வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல், நல்ல படங்களாக இருந்தால் மட்டுமே, அனுமதி பெற்று நடிக்கிறேன்.''

``சினிமா தவிர...?''

``நான் நன்றாகப் பாடுவேன். படிக்கிற காலத்தில் இசைக் குழுக்களில், ஜெயச்சந்திரன் குரலில் பாடுவதுண்டு. பாக்கெட் மணியாக அது பயன்படும்.''

``உங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத ஜோக்?''

`` `கயல்' படத்தில் நடந்த நிகழ்வுதான் அது. படத்தில் எனக்கு ஹீரோயினின் அப்பா ரோல் என்றதும், இயக்குநரை அசத்திவிட வேண்டும் என்று ஒரு பெட்டி நிறைய கோட்டு, சூட்டு, கலர் கலரா ஷூ எல்லாம் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்றேன். காஸ்ட்யூமரை அழைத்து `இவருக்கு என்ன டிரெஸ்' என்று இயக்குநர் கேட்டுக்கொண்டிருந்தபோது, இடைமறித்தபடியே நான் கொண்டு வந்த காஸ்ட்யூமைக் காட்டினேன். அவர் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, `இதை உங்களிடம் யார் கொண்டு வரச் சொன்னது' என்றவர், ஓர் அழுக்கு வேட்டியைக் கொண்டு வரச் சொன்னார். அதை மண்ணில் புரட்டி, சுருட்டி, விரித்து கூடுதல் அழுக்காக்கினார். `இதுதான் காஸ்ட்யூம்' என்று சொல்லி, அதையே கட்டச் சொன்னார். இதுதான் என்னால் இன்றும் மறக்க முடியாத சம்பவம்.''

- மு.செய்யது முகம்மது ஆசாத்