Published:Updated:

கதை ஏற்படுத்திய திருப்தியை, படமும் ஏற்படுத்துகிறதா..? - `ஒரு குப்பைக் கதை’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கதை ஏற்படுத்திய திருப்தியை, படமும் ஏற்படுத்துகிறதா..? - `ஒரு குப்பைக் கதை’ விமர்சனம்
கதை ஏற்படுத்திய திருப்தியை, படமும் ஏற்படுத்துகிறதா..? - `ஒரு குப்பைக் கதை’ விமர்சனம்

`தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம்', இந்த ஒன்லைனைக் கொண்டுதான் `ஒரு குப்பைக் கதை' படத்தை  இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி. 

விடியற்காலை ஓசூர் பஸ்ஸைப் பிடித்து அங்கிருக்கும் ஒரு வீட்டின் விலாசத்தை தேடிச் செல்கிறார், தினேஷ். அமைதி நிலவுகிறது.  வீட்டிற்குள் செல்லும் தினேஷ், சிறிது நேரம் கழித்து ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வருகிறார். `நான் ஒரு கொலை செஞ்சிட்டேன் சார்' என்று சொல்லி காவல்துறையிடமும் சரணடைகிறார். அங்கிருந்து கதை விரிகிறது. என்ன பாஸ்  ஓப்பனிங்கே ஒண்டர்ஃபுல்லா இருக்கேன்னு நினைக்கிறீங்களா. அப்போ நாங்க நினைச்சதுல தப்பில்லையே?

சென்னை கூவ ஆற்றின் ஓரத்தில் வசித்து வரும் குமார் (தினேஷ் மாஸ்டர்), குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளியாக ஆத்மார்த்தமாக  வேலை செய்து வருபவர். ஆனால் பாவம், பல இடத்தில் ஏறி இறங்கியும் இவருக்குச் சரியான ஜோடி கிடைக்காமல், திருமணம்  தள்ளிக்கொண்டே போகிறது. அந்தச் சமயத்தில் வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியின்(மனிஷா) வரன் வருகிறது. `தினேஷ் கிளர்க்காக வேலை பார்க்கிறார்' என்று பொய் சொல்லி பெண் பார்க்க அழைத்துச்செல்கிறார், தரகர். அப்போது தினேஷுக்குத்  தெரிய வர, அம்பி விக்ரமைப் போல் மனிஷாவின் அப்பாவை அழைத்து உண்மைகளை முழுக்க புட்டுப்புட்டு வைக்கிறார். `மாப்ள சொக்கத்தங்கமா இருக்காறே' என நினைத்து... மனிஷாவிடம் இதை மறைத்து... அவரது அப்பாவே தலைமை ஏற்று அந்தக்  கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்.  

எல்லாம் நல்லபடியாக முடிந்து, இல்லற வாழ்க்கை சிறப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், தனது ப்ரெக்னன்சிடெஸ்ட்டை  எடுக்க வெளியே வந்திருக்கும் மனிஷாவிடம் நேரத்தில் கையும் கலவுமாக மாட்டுகிறார், தினேஷ். சண்டை, சலசலப்பு என வாழ்க்கை  தலைகீழாக மாறுகிறது. மகப்பேற்றுக்காக வால்பாறை செல்லும் மனிஷா, தினேஷுடன் திரும்பிவருவதை மறுக்கிறார். ஏதேதோ செய்து, தனது நண்பரின் உதவியால் பொண்டாட்டி பிள்ளையுடன், ஒருஅப்பார்ட்மென்டுக்கு குடிபோகிறார். அதன் பின்னர் `வேலியில் போகும்  ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்ட' கதையாகதினேஷின் வாழ்க்கை மறுபடியும் தலைகீழாகிறது. அப்பார்ட்மென்டில் பக்கத்து வீட்டில் வசிக்கும், அர்ஜுனை (சுஜாமேத்யூஸ்) பார்த்து வசியப்படும் மனிஷா, பழிகிய பிறகு `இனி இவருடனே வாழ்க்கையை நடத்தலாம்' என்று தன்குழந்தையோடு  ஓசூருக்கு சென்றுவிடுகிறார். பின், தினேஷ் தேவதாஸ் ஆகிறார்.  

தண்ணி, தாடி என தினேஷின் பழக்கமும் தோற்றமும் மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் நண்பரின் மூலம், மனிஷா ஓசூரில் இருப்பது  . கலவையான மனநிலையோடு, தன் குழந்தையை மட்டுமாவது தன்னுடன் அழைத்து வரலாம்என்று ஓசூர் புறப்படுகிறார். இதுதான் `அந்த' முதல்க் காட்சி. தன் குழந்தையை கூட்டி வரச் சென்ற தினேஷ் எதற்குக்கத்தியும் கையுமாக போலீஸிடம் சரணடைந்தார்? இதையும்  சொல்லிட்டா படம் பார்க்கிற மனநிலையே உங்களுக்குவராது பாஸ்.  

குப்பைகளைச் சுத்தம் செய்வதை விரும்பிச் செய்யும் ஒரு இளைஞனின் அவலத்தையும், அதனால் அவன்படும் அவமானங்களையும்  எடுத்துச் சொல்லும் விதமாகக் கதையை முன் நிறுத்தியதாகட்டும்...  ஒரு பெண், `எந்த நிலையிலும்தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம்' என்ற உரிமையை நியாயப் படுத்துவதாகட்டும்... இந்த இரண்டு முயற்சியும்தான்படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். கதை ஏற்படுத்திய திருப்தியை, படமும் ஏற்படுத்தியதா? என்பதுதான் கேள்விக்குறி.  

அறிமுக நடிகராக தினேஷ் மாஸ்டரின் நடிப்பு முதல் படத்துக்கு சூப்பர். வசனங்களுக்குத் தகுந்த ஃபேஷியல் எக்ஸ்ப்ரெஷன்களைக்  கொடுத்து நடித்தால் தினேஷ் `மாஸ்டர்', தினேஷ் `ஆக்டர்' ஆகலாம். முதல் பாதியில் இடம்பெற்றகுத்துப்பாட்டில், `நடிகர்' என்ற முகத்திரையை கலட்டிவைத்துவிட்டு, மாஸ்டராக மாறி மூவ்மென்ஸின் மூலம் செம குத்துகுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் குறும்பு செய்யும் கிராமத்துப் பெண்ணாக நடித்த மனிஷா, இரண்டாம் பாதியில் ஸ்டைல்பண்ணும் சிட்டி கேர்ளாக நடித்திருக்கிறார்,  கவர்ந்திருக்கிறார். முதல் பாதியில் ஆங்காங்கே இடம்பெற்ற யோகி பாபுவின்நகைச்சுவைகள் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறது.  

படத்தில் எக்கச்சக்க ஸ்லோ மோஷன்கள். அதைக் குறைத்திருந்தால் படத்தின் நீளம் சுருங்குவதோடு, எங்களின்பொறுமையும்  சோதிக்கப்பட்டிருக்காது. படத்தின் பல காட்சிகளில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தது. பெண் கொடுக்க ஓகேசொல்லும் மனிஷாவின் அப்பா, தினேஷின் வீட்டைப் பார்வையிட வருவார். அப்போது `சென்னையில இது ரொம்பமுக்கியமான இடம், விலை பல கோடிக்குப் போகும்'  எனத் தரகர் அவரிடம் சொல்லு கதை, அதற்கு `ஓ அப்படியா' எனஇவரின் பதில், க்ளிஷேவின் உச்சம். இதுபோன்ற காட்சிகள்தான் படம்  முழுக்க பரவிக்கிடக்கிறது. ஜோஷுவா ஶ்ரீதரின்இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதுவும் படத்தை இன்னும் சோர்வடையச் செய்யாமல்  ஏதோ தாங்கிப்பிடித்தது.  

குறியீட்டைக் கதையில் மட்டும் வைத்திருக்காமல், திரைக்கதையிலும் வைத்திருந்தால், `ஒரு குப்பை கதை' படம், `சொல்ல வரும் கதையை' சரியாகச் சொல்லியிருக்கும்.