Published:Updated:

இது ‘நாயகி’ காலம்!

இது ‘நாயகி’ காலம்!
பிரீமியம் ஸ்டோரி
இது ‘நாயகி’ காலம்!

மாற்றம்பு.விவேக் ஆனந்த்

இது ‘நாயகி’ காலம்!

மாற்றம்பு.விவேக் ஆனந்த்

Published:Updated:
இது ‘நாயகி’ காலம்!
பிரீமியம் ஸ்டோரி
இது ‘நாயகி’ காலம்!

`என்ன சார் கதை' என இயக்குநர்களிடம் கேட்க தமிழ் சினிமா நாயகிகள் எப்போதும் அனுமதிக்கப்பட்டதே கிடையாது. `4 சாங் மேடம்... ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஃபுல்லா நீங்கதான். 35 நாள் தேவை' என்றுதான் கதை விவாதத்தையே நடத்துவார்கள் இயக்குநர்கள். எப்போதாவது இந்த வழக்கத்தை மாற்ற ஒரு நாயகி வருவார். பானுமதி தொடங்கி சிம்ரன் வரை அப்படி சில அதிசயங்கள் நடந்திருக்கின்றன. அந்த சீஸனிலும் ஆண்டுக்கு ஒரு படம் அப்படி வந்திருந்தாலே பெரிய விஷயம்.  சினிமா ஒரு மிக முக்கியமான ஊடகம்,  ஆனால், பெரும்பாலான இயக்குநர்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து பெண் கதாபாத்திரங்களை வடிவமைப்பது கிடையாது.

இது ‘நாயகி’ காலம்!

தமிழ்ப் படங்களில் கதாநாயகியின்  கேரக்டருக்காக பெரும்பாலான இயக்குநர்கள் மெனக்கெடுவதே இல்லை,  தங்களின் வசதிக்கும், தேவைக்கும்  ஏற்றவாறு பாத்திரங்களை உருவாக்குவது வழக்கம்.  கதாநாயகனைச் சுற்றி கெக்கபிக்கவென அச்சுப்பிச்சு காமெடி பண்ணிக்கொண்டிருக்கும் அரை லூஸு டைப் நாயகி , ஆணைத் திருத்துவதற்காகவே படைக்கப்பட்ட பெண், பேராசையும், அகம்பாவமும் பிடித்த திமிர் வில்லி, மழையில் ஆடுவதும், கிளாமர் காட்டுவதையும் மட்டுமே வேலையாக வைத்திருக்கும் பெண், முதலில் கதாநாயகனைப் புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டு, பிற்பாடு அவனிடமே சரணடையும் கதாநாயகி என கிளிஷே கதாபாத்திரங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் திரைப்படங்களில் காண்பிக்கிறார்கள், இப்போது இது மாறியிருக்கிறது.

ஆண்ட்ராய்டு மொபைல் போல மாதம் ஒரு படம் நடிகைகளை மையப்படுத்தி வரத் தொடங்கியிருக்கின்றன. கதையின் முக்கியமான புள்ளியாக பெண் கேரக்டர்கள் இருக்கின்றன. கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் சென்ற வாரம் வந்தது. அந்த நாளில் மட்டும் மூன்று படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. #nayanthara55, #nayanthara56 என ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. மூன்று கதையிலும் பெண் கதாபாத்திரமே பிரதானம்.  பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படம் என்றால் அது ஆண்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லும் படமாகவோ, பெண்ணியம் பேசும் படமாகவோ மட்டும்தான் இருக்கும் என்பார்கள். அதைத் தகர்த்து கமர்ஷியல் படங்களில் தடம் பதித்திருக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே `மாயா' என்ற படத்தில் நயன் நடித்து அது வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ இல்லாமல், மாயாவில் மிரட்டியவர், கஹானி ரீமேக் `நீ எங்கே' வில் பின்னியெடுத்தவர், தற்போது கோபி இயக்கத்தில் `அறம்' படத்தில் கலெக்டர்  வேடத்தில் நடிக்கிறார். `உன்னைப்போல் ஒருவன்', `பில்லா-2' போன்ற படங்கள் எடுத்த சக்ரி டொலேட்டி  இயக்கத்தில் `கொலையுதிர் காலம்'  என்ற திகில் திரைப்படத்தில் நடிக்கிறார், இதைத்தவிர 'டோரா' என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே காலகட்டத்தில்  பெண்ணை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு எடுக்கப்படும் மூன்று திரைப்படங்களில் நடிக்கும் முதல் நடிகை நயன்தாராவாகத் தான் இருக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ‘நாயகி’ காலம்!

நயன்தாரா 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  ஒரு பெண், சினிமாவுக்குள் நுழைந்து, தன்னை மையப்படுத்தும்  கதைகளில் நடிக்க, கிட்டத்தட்ட பத்து வருடங்களும், ஐம்பது படங்களும் நயன்தாராவுக்கு  தேவைப்பட்டிருக்கிறது. தற்போது நயனிடம் கைவசம் இருக்கும் எந்தப் படத்திலும் பெரிய ஹீரோக்களே கிடை யாது. `டிமான்டி காலனி' படம் எடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படமான 'இமைக்கா நொடி கள்' படத்தில் ஹீரோயினாக இல்லாமல், அதே சமயம் நாயகன் அதர்வாவுக்கு சரிசமமான ரோலில் நடிக்கிறார் நயன்.

ஒரு நடிகையை மையமாகக் கொண்ட கதைகள் உருவாக்க நயன்தாரா போன்ற ஸ்டார் வேல்யூ இருப்பதும் அவசியம். ஏனெனில், சினிமா என்பது இங்கே ஒரு கலை என்பதைத் தாண்டி பெரிய வணிகம். தனது கம் பேக்குக்கு பிறகு நயனுக்கு அப்படி ஒரு மதிப்பு உருவானது. அதை வைத்து தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் டூயட் ஹீரோயினாக மட்டும் நடித்து சம்பாதித்திருக்க முடியும். ஆனால், சின்ன பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் அவர் நடிப்பது பாராட்டுக்குரியது. பொதுவாக கதாநாயகிகள்  மார்க்கெட் போய்விட்டால்தான், இது போன்ற படங்களில் நடிப்பார்கள்  என்ற பேச்சு ஊருக்குள் உண்டு. ஆனால், தமிழ்ப் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற அந்தஸ்துடன், நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் காலகட்டத்திலேயே துணிச்சலாக இப்படி ஒரு முடிவை நயன் எடுத்திருப்பது நிச்சயம் முக்கியமான விஷயம்.

நயன்தாராவைத் தொடர்ந்து த்ரிஷாவும், தன்னை முன்னிலைப் படுத்தும் கதைகளுக்கு  தற்போது முக்கியத்துவம்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். த்ரிஷா நடித்த `நாயகி' திரைப்படம் சரியாக எடுக்கப்படாததால், படு தோல்வியை தழுவியது. எனினும் தற்போது `மோகினி' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திர வேடத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. வருமானம், பிரபலம் என்பதை எல்லாம் தாண்டி இருவருக்கும் தங்கள் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த புராஜெக்ட்டுகளுக்கு `ஓகே' சொல்லியிருக்கிறார்கள். ஒரு வகையில் இவர்கள் இருவருக்கும் சமகாலத்தில் பூஸ்ட் தந்த இன்னொருவர் அனுஷ்கா.

இது ‘நாயகி’ காலம்!

`குண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ள மாட்டீர்களா? ஒருவேளை ஒல்லியான பெண் களை திருமணம் செய்துகொண்டு, அதன் பின்னர் குண்டாகிவிட்டால் விவாகரத்து செய்துவிடுவீர்களா?' என பொட்டில் அறையும் கேள்வி களோடு `இஞ்சி இடுப்பழகி'யில், ஹீரோக்களுக்கு இணையாக 20 கிலோ வெயிட் ஏற்றி, இறக்கி கடும் உழைப்பைத் தந்தார்  அனுஷ்கா. ஹலிதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பெண் இயக்குநர்களும், சினிமாவில் கவனிக்கத்தக்க திரைப்படங்களை தந்து வருகிறார்கள்.

இயக்குநர், டிசைனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடல் ஆசிரியை, பாடகி, நாயகி என சினிமாவின் அனைத்து துறைகளிலும் பெண்கள் பெருமளவு பரிமளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியில் தீபிகா தொடங்கி அலியா பட் வரை பல நடிகைகளுக்காகவே கதைகள் எழுதுகிறார்கள். அந்தப் படங்கள் வெற்றி பெறவும் செய்கின்றன. அதன் தொடர்ச்சியாக கோலிவுட்டிலும் அதே ட்ரெண்ட் வரவிருக் கிறது. அதைத்தான் நயன்தாராவும், த்ரிஷாவும் தொடங்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்ச்  சினிமாவில் பெண்களின் வெற்றி தொடரட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism