Published:Updated:

``குரூப் டான்ஸரா இருந்து நடிகையாக அவ்ளோ கஷ்டப்பட்டேன்!" - `பூவே செம்பூவே' பிரியா

``குரூப் டான்ஸரா இருந்து நடிகையாக அவ்ளோ  கஷ்டப்பட்டேன்!" - `பூவே செம்பூவே' பிரியா
News
``குரூப் டான்ஸரா இருந்து நடிகையாக அவ்ளோ கஷ்டப்பட்டேன்!" - `பூவே செம்பூவே' பிரியா

``குரூப் டான்ஸரா இருந்து நடிகையாக அவ்ளோ கஷ்டப்பட்டேன்!" - `பூவே செம்பூவே' பிரியா


 

`` 'சொல்லத் துடிக்குது மனசு' படம் மட்டும்தான் எனக்குத் தமிழில் பெரிய பிரேக் கொடுத்துச்சு. பிறகு, நாயகியாக நடிக்கலை. அதிக படங்களில் நடிக்கலைன்னாலும் மக்கள் என் மேலே அன்பு வெச்சிருக்காங்க. அதனால் எனக்குச் சந்தோஷமே" எனப் புன்னகைக்கிறார், நடிகை பிரியா. ஜீ தமிழ் 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்துவருபவர்.

``நீங்க நடிக்க வந்தது எப்படி?"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``என் உறவினர்கள் பலரும் சினிமாவில்தான் வொர்க் பண்றாங்க. குடும்ப வறுமையால், பத்தாவதுக்கு மேல் என்னால் படிக்கமுடியலை. வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். என் அத்தைகள் குரூப் டான்ஸர்ஸ். தாரா, புலியூர் சரோஜா உள்ளிட்ட சில மாஸ்டர்கள்கிட்ட நானும் குரூப் டான்ஸரா வொர்க் பண்ணினேன். பல மொழிப் படங்களில் டான்ஸ் ஆடிட்டிருந்தேன். அப்போ, எனக்கான அடையாளம் கிடைக்க நிறையவே கஷ்டப்பட்டேன். ஒரு மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் டைரக்டர் ப்ரியதர்ஷன் சார் என்னைப் பார்த்தார். அவர் படத்தில் ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். மம்முட்டிக்கு ஜோடியா நடிச்சேன். தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களில் நடிச்சேன்."

``தமிழ் என்ட்ரி எப்படி நடந்தது?"

``மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடிச்சதால், 'சொல்லத் துடிக்குது மனசு' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. கார்த்திக் ஜோடியா நடிச்சேன். அந்தப் படத்தில் வரும் 'பூவே செம்பூவே உன் வாசம் வரும்'  பாடல் பெரிய ஹிட். நான் டான்ஸர் என்பதால், சிரமம் இல்லாமல் ஒரே டேக்ல அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டேன். நிறைய பாராட்டு கிடைச்சது. அடுத்து, 'நல்ல காலம் பிறந்தாச்சு' படம். அப்புறம் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கலை. மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். மலையாளத்தில் 70 படங்கள் வரை நடிச்சிருக்கேன்."  

``சீரியலுக்கு எப்படி வந்தீங்க?"

``சினிமாவில் எனக்குனு ஒரு பெயர் எடுக்க நிறைவே கஷ்டப்பட்டேன். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு மேனேஜரா இருந்த என் மாமா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இழப்பிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாச்சு. 1993-ம் வருஷம் கல்யாணம். குடும்பம், குழந்தைகள் என 10 வருஷத்துக்கும் மேலாக நடிப்புக்கு பிரேக். அதனால், சினிமா தொடர்பே சுத்தமா போயிடுச்சு. ஒருகட்டத்துல மீண்டும் நடிக்கும் ஆசை வந்துச்சு. நிறைய முயற்சி செய்தேன். 'குங்குமம்' சீரியல் மூலமா ரீஎன்ட்ரி கிடைச்சது."

`` 'திருமதி செல்வம்' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிச்ச அனுபவம் பற்றி..."

``சினிமா மற்றும் சீரியல்களில் பாசிட்டிவ் ரோலில்தான் நடிச்சேன். இந்நிலையில, 'திருமதி செல்வம்' சீரியல்ல முதல்முறையா நெகட்டிவ் ரோல். ஆரம்பத்தில் செட் ஆகுமானு தயங்கினேன். ஆனால், பெரிய ரீச் கிடைச்சது. அப்போதான் நெகட்டிவ் ரோலின் தாக்கம் புரிஞ்சது. அதுக்குப் பிறகு பல சீரியல்கள்ல நடிச்சாலும், அப்படிபட்ட ரீச் கொஞ்சம் மிஸ் ஆவதாக ஃபீல் பண்றேன்."

``இப்போதும் டான்ஸை தொடர்கிறீங்களா?"

``கல்யாணத்துக்குப் பிறகு டான்ஸ் ஆடுறதையே விட்டுட்டேன். டான்ஸரா இருந்துட்டு ஆடாம இருக்கோமேனு அடிக்கடி நினைச்சுப்பேன். வருத்தம் இருந்தாலும், இனி டான்ஸ் ஆடுறதெல்லாம் சாத்தியமானு தெரியலை. எதுக்கும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.'

``தற்போதைய ஆக்டிங் பயணம் எப்படிப் போகுது?"

``இப்போ நடிச்சே ஆகணும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனாலும், மனநிறைவுக்காக பிடிச்ச கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறேன். பையன் ஐடி கம்பெனியில் வொர்க் பண்றான். பொண்ணு பிபிஏ முடிச்சாச்சு. கணவர் டேவிட், கேமராமேனா தூர்தர்ஷனில் வொர்க் பண்ணி ரிட்டயர்டு ஆகிட்டார். குடும்ப வாழ்க்கை சிறப்பா போயிட்டிருக்கு. நடிப்பு, குடும்பம் தாண்டி வேற எந்த ஆக்டிவிட்டியும் பண்றதில்லை. சினிமா துறையில் எனக்கு எந்த ஃப்ரெண்ட்ஸும் கிடையாது. நடிப்பு, வீடுதான் என் வாழ்க்கை. மற்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தறதில்லை."