Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மீண்டும் ‘அவர்கள்’!

யக்குநர் கே.பாலசந்தரின் ‘அவர்கள்’ படம், ஒரு காலத்தில் அனைவராலும் பேசப்பட்டது. அந்தப் படத்தில் கமல், ரஜினி, சுஜாதா ஆகியோர் நடிப்பில் அசத்தியிருப்பார்கள். இப்போது, ‘அவர்கள்’ என்ற பெயரிலேயே புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது. நிவின்பாலி, நட்டி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கௌதம் ராமச்சந்திரன் இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

மதன் வாக்குமூலம்!

லைமறைவாக இருந்து போலீஸிடம் சிக்கிய ‘வேந்தர் மூவீஸ்’ மதன், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்்த இருவர்தான், அதைக் கவனித்து வருவதாகவும் மதன் கைகாட்டி உள்ளாராம். மதன் தயாரித்த படங்களில் நடித்த சிலரிடமும் விசாரணை நீள்கிறதாம்.

கோதுமை தேச தேவதை!

தெலுங்கு திரையுலகில் ஒய்யாரமாக வலம் வருபவர், பஞ்சாப் தேவதையான ராகுல் ப்ரீத்தி சிங். கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண விழாவில் இவர் போட்ட ஆட்டமும், அதற்காக வாங்கிய தொகையும் அனைவரையும் பேசவைத்தது. ‘தடையற தாக்க’, ‘என்னமோ ஏதோ’, ‘புத்தகம்’ ஆகிய தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் பெயர் சூட்டப்படாத ஒரு படத்துக்கு இவர்தான் கதாநாயகி. 

கபாலியை விஞ்சுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்துக்கான கதை விவாதம் மும்பையில் மும்முரமாக நடக்கிறது. இந்தப் படம், ‘கபாலி’யைவிட சிறப்பாக அமைய வேண்டும், பெரிய வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்போடு திரைக்கதையை தன் சகாக்களுடன் செதுக்கிக்கொண்டு இருக்கிறார், இயக்குநர் ரஞ்சித். அநேகமாக, அடுத்த வருடம் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மியாவ் பதில்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு (ஃபெப்சி) தேர்தல் வருகிறதாமே?


மாம். ஃபெப்சிக்கு அடுத்த மாதம் தேர்தல். திரையுலகின் பிற சங்கங்களுக்கும் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்க உள்ளன. எல்லா சங்கங்களிலும் தற்போதுள்ள நிர்வாகிகள் மீது இன்னொரு தரப்பினர் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். இதனால், வரும் காலங்களில் சினிமா பிரபலங்களை திரையில் பார்ப்பதைவிட நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் அதிகம் பார்க்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism