பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படம்: அ.சரண் குமார்

``இந்த ஆட்டத்துக்கு, என்னை எப்படி செலெக்ட் பண்ணீங்கனு தெரியலை. ஆனா, உங்க நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிபண்றேன் பிரதர்'' எனச் சிரிக்கிறார் நடிகர் கதிர்.

``இந்தப் பகுதியில் சில கேள்விகள் ரொம்ப ஈஸியா இருக்கும்; சில கேள்விகள் கடினமா இருக்கும். இந்த வாரம் எல்லா கேள்விகளையும் ஈஸியா கேட்டீங்கன்னா, நான் தேறிடுவேன்'' எனத் தயாராகிறார் மேடைப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

``நாளைக்கு முக்கியமான மேட்ச். என் முழுக் கவனமும் அதுலதான் இருக்கு. நீங்க கேள்வி கேட்கிற டைம்ல, நான் என்னைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கப்போறேன்'' - கூலாகப் பேசுகிறார் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை.

``பொது அறிவு எல்லாம் நிறைய இருக்கு தம்பி. ஆனா, யாராவது கேள்வி கேட்கும்போதுதான் சட்டுனு ஞாபகம் வராது'' எனக் கண்களை உருட்டிப் பேசுகிறார் நடிகர் ஜார்ஜ் மாரியப்பன்.

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

``பணமதிப்பு நீக்க விவகாரத்தில் மக்கள் கருத்தை அறிய, எத்தனை கேள்விகள்கொண்ட சர்வேயை எடுத்தார் மோடி?''

பதில்: 10 கேள்விகள்.

கதிர்: ``அய்யோ! இந்த அளவுக்குப் பொதுஅறிவு இருந்தா, நான் ஏன் பிரதர் சினிமாவுல இருக்கேன்? `500, 1,000 ரூபாய் செல்லாது'னு மோடி சொன்னதும் அப்போதைக்குத் தேவையான பணம் இருக்கானு மட்டும்தான் பார்த்தோம். சரி, என்னுடைய லக்கி நம்பர் 9. அப்ப ஒன்பது கேள்விகள்னு லாக் பண்ணிக்கோங்க.''

பாரதி பாஸ்கர்: ``10 கேள்விகள்கொண்ட சர்வே எடுத்தார். அதுல 93 சதவிகிதம் பேர் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தருவதாகத் தெரிவிச்சாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை இன்னமும் கொஞ்சம் முன்னேற்பாடுகளுடன் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம்.''

அனிதா பால்துரை: ``நிறையப் பேர் ஆதரவு தந்தாங்கனு படிச்சேன். ஏழு கேள்விகள் கேட்டிருப்பார். ஏன்னா, என் ஜெர்ஸி நம்பர் 7'' சிரிக்கிறார்.

ஜார்ஜ் மாரியப்பன்: ``ஆ... எதுக்கு மக்கள்கிட்ட கேள்வி எல்லாம் கேட்கணும்? அதுதான் செல்லாதுனு சொல்லிட்டாங்களே. அதுக்கு அப்புறம் எத்தனை கேள்வி கேட்டா, நமக்கு என்ன தம்பி? நம்ம கையில பணம் வந்துச்சானு பார்க்கணும் அதுதான் முக்கியம்.''

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

``ATM என்பதன் விரிவாக்கம் என்ன?''

பதில்: Automated Teller Machine.

கதிர்: ``ரொம்ப கஷ்டம் பிரதர். கார்டு போட்டா, காசு வருது. இதுக்கு எதுக்கு விரிவாக்கம்? சரி, Any time Machine. இல்லையா? அப்ப Any Time Money. இதுவும் இல்லையா? அப்ப ஏ.டி.எம் விரிவாக்கத்தையும் மோடி அரசாங்கம் மாத்திட்டாங்களா!''

பாரதி பாஸ்கர்: பலமாகச் சிரித்தவர், ``பேங்க்ல வேலை செய்ற எனக்கேவா? Automated teller machine என்பதுதான் சரியான விரிவாக்கம். ஆனால், பலர் Any time money-னுகூட சொல்வாங்க.''

அனிதா பால்துரை:
``ரொம்ப ஈஸி... Any Time Money. இல்லையா?'' பதிலைச் சொன்னதும் ``நீங்க டெக்னிக்கலா சொல்றீங்க. நான் சிம்பிளா சொல்றேன். மார்க் கொடுத்துடுங்க, ப்ளீஸ்!''

ஜார்ஜ் மாரியப்பன்: நீண்ட யோசனைக்குப் பிறகு ``பணம் தரும் மெஷின். ஓகோ... ஆங்கிலத்துல சொல்லணுமா? அப்ப Time Machine. அட, இதைத்தான் தம்பி நிறையப் படத்துலகூட விரிவா சொல்வாங்க. அதுக்கு வேற அர்த்தமா? என்னப்பா சொல்ற... ஒண்ணும் புரிய மாட்டேங்குது.''

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

``இந்தியாவில் எத்தனை இடங்களில் பணம் அச்சடிக்கப்படுகிறது?''

பதில்: நான்கு இடங்கள். மைசூர், நாசிக், தேவாஸ், சல்போனி.


கதிர்: ``ம்கூம்... கள்ள நோட்டு அச்சடிக்கிற இடத்தைக் கேட்டா சத்தியமாத் தெரியாது. நல்ல நோட்டு அடிக்கிற இடத்தைக் கேட்டாலும் தெரியாது. நாசிக்ல மட்டும் பணம் அச்சடிப்பாங்கனு ஸ்கூல்ல படிச்ச மாதிரி ஞாபகம்.''

பாரதி பாஸ்கர்: ``பத்து அல்லது ஒன்பது இடங்களில் அச்சு அடிக்கலாம். இல்லையா? அச்சச்சோ... தெரியலையே. நாசிக்ல அடிக்கிறாங்கனு தெரியும். மீதி எந்த எந்த இடத்துல அடிக்கிறாங்கனு தெரியலையே. நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன்.''

அனிதா பால்துரை: ``இந்தியாவுல ஒரே ஒரு இடத்துலதான் பணம் அச்சடிக்கிறாங்க. அது நாசிக். இதுவும் தவறான பதிலா? ஏங்க, நிறையப் பேர் படிப்பாங்க. என் இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆகாத மாதிரி கொஞ்சம் பார்த்து எழுதுங்க.''

ஜார்ஜ் மாரியப்பன்: ``டெல்லி, சென்னைனு மாநிலத்துக்கு மாநிலம் அடிப்பாங்க தம்பி. அதை எல்லாம் யாரு கணக்கு வெச்சுப்பாங்க? ஒரு வாரத்துக்கு எத்தனை படம் ரிலீஸ் ஆதுகுதுன்னே கணக்கு வெச்சுக்க முடியலை. இதுல பணம் அச்சகத்தை எல்லாம் யாரு பார்ப்பா?''

“ ‘அம்மா’வைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?”

``அமெரிக்க அதிபராகப்போகும் ட்ரம்ப் எவ்வளவு சம்பளம் வாங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்?''

பதில்: மாதம் 1 டாலர்.

கதிர்:
``இதுக்கு எனக்குப் பதில் தெரியும்னு நினைக்கிறீங்களா? என் சம்பளமே என்னன்னு தெரிய மாட்டேங்குது. ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு சம்பளம் தர்றாங்க. இதுல நான் ட்ரம்ப்போட சம்பளத்தை எங்கே கண்டேன்? சாமி சத்தியமா தெரியாது பிரதர்.''

பாரதி பாஸ்கர்:
``மாதம் 1 டாலர் மட்டும் சம்பளம் வாங்குவதாகச் சொல்லியிருக்கிறார். இந்த வாரம், ஜாலி பகுதி முழுக்கவே பணத்தைப் பற்றிய கேள்வியாவே கேட்டுடீங்களே!''

அனிதா பால்துரை: ``அமெரிக்கா அதிபர்னா, மாசத்துக்கு 50,000 டாலர் வரை சம்பளமாக வாங்குவார். இதை நம்ம ரூபாய்ல கால்குலேட் பண்ணா, லட்சக்கணக்குல வரும்!''

ஜார்ஜ் மாரியப்பன்: ``இன்னொரு தடவை கேள்வியைச் சொல்லுங்க தம்பி. அமெரிக்க அதிபரா... யாரு அவரு? சரி, மாதச் சம்பளத்தைச் சொல்லணுமா? ஆ... இங்கேதான் முதலமைச்சர் அம்மா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினாங்க. அதுதான் தெரியும்'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும், ``ஐ... அம்மாவைப் பார்த்து அதிபரும் காப்பி அடிச்சுட்டாரா?'' எனச் சிரிக்கிறார்.